கள்ளர்



இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர்ஸ்பென்சர்வெல்மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம்கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாளமற்ற மாண்ட இனமாகிவிடும் என்றும் கூறுகிறார்.-----கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் .
சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்!
காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகார் என்பர்!
நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்!
மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்!
அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்!
தொண்டைமானின் தொன்மையும் வளமையும் கொண்ட ஊர் காஞ்சி என்பர்!
வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்!
பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்
ளல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்!
ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்!
வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்!
சோழ மண்ணை மீட்டெடுத்த விஜயலாயன் வாழ்ந்தவூர் பழையாறு என்பர்!
மாமன்னன் ராசராசன் பெருங்கோயில் படைத்த ஊர் தஞ்சை என்பர்!
அவன் மைந்தன் கொண்டவூர் கங்கைகொண்ட சோழபுரம் என்பர்!
இவ்வூர்களில் எல்லாம் மறப்பண்பு மிகுந்து அறப்பண்பு கொண்டு வளமுடன் வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்!-------------------------

கள்ளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்:--
உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு கோடி கள்ளர்கள் தற்போது உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து தென்தமிழகம் வரை அதாவது தென் ஆற்காடு ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பரவலாகவும் மற்ற இடங்களில் மிகமிக குறைந்தும் வாழ்கின்றனர்.
இக்குடியினருக்கு வழங்கும் பட்டப் பெயர்களை நோக்கும் போது உலக இனங்களில் எந்த இனத்திற்கும் இல்லாத அளவில ஆயிரக்கணக்கான பட்டப்பெயர்களை அவர்கள் தாங்கி இருக்கின்றனர், இவர்களது வாழ்க்கை எவ்வளவு உயர்வாகவும், எத்துனை மிகு சிறப்பு உடையவர்களாகவும் வாழ்ந்து, வரலாறு படைத்திருக்கின்றார்கள், என்று நோக்கும் போது யாரும் வியக்காதிருக்க முடியாது. இவர்களது வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தால் தமிழகத்தின் வரலாற்றில் மறைந்து இருக்கும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.
கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.
“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்
“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை
எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.--------------------------------------------------------------------------------------- அடங்கா பிளிருகளை அடக்கியவரும் கள்ளரே.
ஆநிறை கவர்ந்தவரும் கள்ளரே.
இந்திரனும் கரிய கள்ளரவரே.
ஈசனை இறைவனாக கண்டவரும் கள்ளரே.
உழைப்பால் உயர்ந்தவரும் கள்ளரே.
ஊர் காத்தவரும் கள்ளரே.
எளிமைக்கு இலக்கணம் தந்தவரும் கள்ளரே.
ஏனாதி பட்டம் கொண்டவரும் கள்ளரே.
ஐம்பெரும் படை கொண்டவரும் கள்ளரே.
ஒற்றையர் படை அமைத்தவரும் கள்ளரே.
ஓங்காரம் பாடியவரும் கள்ளரே.
ஔவைக்கு அரிய நெல்லி அளித்தவரும் கள்ளரே.---------------------------------------------
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு
களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு
கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து,
ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
ஈராயிரம் பட்டங்களையும் சுமந்து
பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம் இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம்---------------------------
மரணமில்லா மரபினரின் பட்டங்கள்
பட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்த்திவிடும்.
எம்முன்ணோர்கள் உழைப்பில் கரையாமல், களங்காமல், கலையாமல் அணிந்த மேலாடையே நம் குல பட்டங்கள். அலங்காரபிரியன் முதல் வைகைராயன் வரை ஈராயிரம் பிரளாயமே வியக்கும் பட்டங்கள். வில்லவன், வள்ளவன், ஈகைகொண்டான், நாடாள்வான் என நீளும் மரணமில்லா மரபினரின் பட்டங்கள்.
குருதி சிந்திய குலத்துக்கு பட்டங்கள்
மரித்தும் மரணமில்லா மறவர்களுக்கு பட்டங்கள்
மடிந்தும் மார்பினில் வேல் தாங்கிய மறவர்களுக்கு பட்டங்கள்
மண்கொண்ட மன்னர்களுக்கு பட்டங்கள்
மாராயம் கொண்ட கள்ளர்களுகோ பட்டமோ பட்டங்கள் பல்லாயிரம் பட்டங்கள்.
கள்ளர்குலம் அணிந்திருக்கும் மென்மையான மேல்மையான ஆடையே நம்குல பட்டங்கள்.---------------------------------

கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்
திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்

திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)
சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு
திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.
“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
“ கள்வர் பெருமகன் - தென்னன்”
“ கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்
சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்-------------------------.தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும்,நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினரே கள்ளர் எனப்படுவர். தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

வீரம் விதைக்க பட்ட நாள்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை