நாடு என்றால் என்ன?
நாடு என்றால் என்ன? தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுகிறோம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும். சேர மண்டலம் வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோ