சோழர் கடற்படை 1

சோழர் கடற்படை செயற்பாடுகள் பற்றிய ஆரம்ப குறிப்பு கி.பி. முதலாம் நூற்றாண்டு வெளி மூலங்களில் காணப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் (தற்போது பூம்புகார்) பற்றிய உரோமர் குறிப்பு எவ்வாறு அரசனின் கடற்படையினால் வாணிப கடற்கலங்கள் கடற்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன என்றும் அது காவிரி ஆற்றின் வாயிலில் அமைந்த இயற்கைத் துறைமுகம் என்றும் விபரிக்கின்றது
இக்கால கடற் ரீதியான செயற்பாடுகள் பற்றிய, சில அகழ்ந்தெடுக்கப்பட்ட மரத்தாலான அலங்காரத் தட்டு பழைய நகர் அருகில் இடம்பெற்ற கடல் நிகழ்வுகளின் சித்தரிப்பு தவிர்த்த சிறு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளன.
ஆயினும், சோழ கடற்ச் செயற்பாடுகள்பற்றிய அதிகமான நுழைபுலம் செங்கடல் செலவிலிருந்து சேர்க்கப்பட்டது. இதில் குறிப்பிடப்படாத வர்த்தகர் பெறுமதியான பொருட்களுடனான வாணிப கடற்கலங்களுக்குத் துணையாகச் செல்லும் கப்பல்களின் செயற்பாடுகள் பற்றி விவரிக்கிறார். இந்த ஆரம்ப கால கடற்கலங்கள் ஒருவித ஆரம்ப நிலை நெருப்பு எறி கருவி அல்லது கவண் முறையிலமைந்த ஆயுதத்திணைக் கொண்டு காணப்பட்டது.
சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும். இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்
இடைக்கால கடற்படை
பூம்புகார் கடற்கறையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுத்த சிதைந்த கப்பலின் அடிப்படையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கி திருநெல்வேலி தொல்பொருட்காட்சிசாலையில் வைத்துள்ள சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி
இடைப்பட்ட ஆட்சிக் காலம்[தொகு]
முதன்மைக் கட்டுரை: சோழர்
சங்க கால (கிட்டத்தட்ட கி.பி 300) முடிவிலிருந்து ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு தமிழ் நாட்டைப் பாண்டியரும் பல்லவரும் ஆட்சி செலுத்திய காலம் (கிட்டத்தட்ட கி.பி 600) வரையிலான மாறுதலுக்குள்ளான காலம் சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இருண்ட அரசாட்சியான களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஏற்கெனவே இருந்த அரசுகளை மாற்றிவிட்டு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். இவர்கள் 6ம் நூற்றாண்டில் பல்லவராலும் பாண்டியராலும் நீக்கப்பட்டனர்.
மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்ட வரையான காலப்பகுதி சோழர் கடல் வலிமைப் பாரம்பரியத்தின் குருட்டுப் புள்ளியாகவே காணப்பட்டது. ஆனால் இது பாண்டிய, பல்லவ சமகால செயற்பாடுகளிலிருந்து ஊகிக்க முடிகின்றது. வரவிருக்கின்ற மூன்று நூற்றாண்டு சோழர்களின் சரிவு காலப்பகுதியிலிருந்து 9ம் நூற்றாண்டின் இரண்டாம் காலண்டில் விஜயலாயனின் பதவியேற்பு வரை சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில், சோழர்கள் பல்லவர்களுக்குக் கீழ் இருப்பதைக் குறைத்து, பாண்டியருடன் பக்கம் உறவை ஏற்படுத்தி, பல்லவர்களின் நிலப்பிரபுத்துவ அதிகாரத்ததை ஒழிக்க முயன்றனர். ஆயினும், இதுபற்றிய திடமான குறிப்போ, பதிவோ இல்லை.
எவ்வாறு இருப்பினும், சோழர்களின் அக்குறிப்பிட்ட காலத்தில் காவேரி ஆற்றில் உட்புறத்தே சிறிய ஆனால், குறிப்பிடத் தக்க கடற்படை பராமரித்து இருந்தனர். இக்கால கட்டத்தில் அவர்கள் கவேரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உட்புற வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி, முசிறியை அவர்களின் முக்கிய உட்புற துறைமுகமாகக் கொண்டு காணப்பட்டனர். உலர் கப்பல் கட்டுமிடங்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்