Posts

Showing posts from April, 2019

ஆவுடையார்கோயில்

Image
1000 ஆண்டுகள் பழமையான ஆவுடையார்கோயில்(அறந்தாங்கி) மண்டகப்படிதாரர்கள்: திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது .  இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலை

தண்டாயுதபாணி

Image
🙏🏻🌷🙏🏻 பழநிமலை முருகப் பெருமானைப் பற்றிய சில அதிசயத் தகவல்கள் 1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம். 2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். 3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. 4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. 5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு ச

இலுப்பை_மரம்

Image
இலுப்பை_மரம் -  இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது. இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல். சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு  ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பை

அட்லாண்டிக் கடலை கடந்த தமிழ்க்கப்பல்

Image
அட்லாண்டிக் கடலை கடந்த  தமிழ்க்கப்பல் ஆட்லாண்டிக் கடலை கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க்கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக்கப்பல் இதுவே என தெரிகிறது. 1938ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து வந்தனர். கொச்சின், ரங்கூன் முதல் அரபு நாடுகள் வரை அவர்களின் பாய்மரக்கப்பல்கள் சென்று வந்தன. 1938ல் வளவை மாரியம்மன் தீர்த்த்திருவிழாவில் கலந்துகொண்ட அன்னபூரணி எனும் கப்பலின் அழகில் மயங்கிய வில்லியம் ராபின்சன் எனும் அமெரிக்கர் அந்த கப்பலை விலைக்கு வாங்கினார். அதை பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஐந்து தமிழ் மாலுமிகளுக்கு வழங்கபட்டது கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் கிளம்பிய அக்கப்பல் மாலுமிகள் யாருமே அமெரிக்காவை முன், பின் கண்டதில்லை. சூயஸ் கால்வாய் வழியாக சென்று ஐரோப்பா வழியே அமெரிக்கா செல்லவேண்டும். கொலம்பஸின் கடல்பயணத்தை மிஞ்சிய தூரம். கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்தனர். இவர்கள் ஐந்தே பேர். அத்தனை தடைகளையும் தாண்டி பாஸ்டன் துறைமுகத்துக்கு மூன்று ம

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

Image
🌼உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது? 🌼 தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது 🌼. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி.    “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், 🌼 யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். 🌼மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். 🌼முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்பட

மனுநீதிச் சோழன்.

Image
மனுநீதிச் சோழன்.           தொன்ம சோழர்களின் தலைநகரமாக புகார் நகர் விளங்கினாலும் சில காலம் #திருவாரூர் தலை நகராய்  இருந்துள்ளது. திருவாரூரில் தான் முசுகுந்த சோழன் பிரதிஷ்டை செய்த விடங்கலிங்கமும் இருந்தது. மனுநீதிச்சோழன்   நீதி நெறி தவறாது ஆட்சி செய்து வந்தான். மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர்.மன்னரின் இயற்பெயர் தெரியவில்லை. சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.முசுகுந்தர் பிரதிஷ்டை செய்த இறைவனின் திருப்பெயராலே வீதி விடங்கன் என்று பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். விடங்கனும்  அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.      மக்கள் குறைகேட்டு நீதி சொல்ல தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான்.  அந்த மணிக்கு #ஆராய்ச்சிமணி என பெயரிட்டான் சோழன் . ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன்  தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். எதிரே வந்த கன்றுக்குட்டியை  கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றி கொன்று விட்டான். கன்று இறந்ததை அறிந்த தாய்பசு பெருந்துயருற்று அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணியை அ

பஞ்சவர்னேஸ்வரர் கோயில் உறையூர்-

Image
பஞ்சவர்னேஸ்வரர் கோயில் உறையூர்-------இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68 வது தேவாரத்தலம் ஆகும்.

சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு:

Image
#சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு:    சித்திரை முதல் நாள் அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன.     சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக,  சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு

தூங்கெயில் எறிந்த தொடிதோட் #செம்பியன் :

Image
தூங்கெயில் எறிந்த தொடிதோட் #செம்பியன் :      குடகுமலையை உடைத்து காவிரியை புகார் நகருக்குள் பாய விட்ட காந்த சோழனுக்கு பின் அவரது மகன் காகந்தி சோழனும்   அதற்கு பிறகு " தூங்கெயில் எறிந்த தோடி தோட் செம்பியன்" என்ற வீரமிக்க அரசர் சோழ நாட்டை ஆண்டார் .      தோடி தோட் செம்பியனின் உண்மையான பெயர் தெரியவில்லை.   அக்காலத்தில்  கொங்குப்பகுதியின் மலை மீது #அகப்பா என்ற நகர் இருந்தது. அகப்பா நகரின் "அரசன் வண்டன் மிகப் பெரும் பொக்கிஷங்களுடன் காண்பவர் வியக்கும் வண்ணம்  மலை மீது மிகப்பெரிய கோட்டை கட்டி அதன் பிரம்மாண்டமான கதவுகள் வானத்திலிருந்து தொங்குவதை போன்ற அமைப்புடன்" நிர்மாணித்திருந்தான். அளப்பரிய செல்வங்களையும் அரிய பொக்கிஷங்களுடன் தனது கோட்டையில் பாதுகாத்து வந்தான் வண்டன் . இக்கோட்டை #தூங்கெயில் என்றழைக்கப்பட்டது. வண்டனை வென்ற  பல்யானை செங்குட்டுவ அரசன் தூங்கெயில் கோட்டையையும் பொக்கிஷங்களையும் தனதாக்கிக் கொண்டான். அவனது வழிவந்த  கடவுள் அஞ்சி என்ற  அரசர் கோட்டையையும் பெரும் செல்வத்தையும்  பாதுகாத்து வந்தார் .        சோழ அரசர் தோடி தோட் செம்பியன் அகப்பா நகரின் தூங்கெயில்

காவிரி கொணர்தல்

Image
காவிரி கொணர்தல் :   அரசன்  சோழனுக்கு பிறகு அரியணை ஏறிய மன்னர்களில் முக்கியத்துவம் பெற்றவர் #காந்தன் . காந்தன் தனது முன்னோரான சூரிய மரபை சேர்ந்த அயோத்தியின் அரசர் பகிரதன் கங்கையை கொணர்ந்து நாட்டை செழிப்பாக்கியதை போல தானும் ஒரு நதியை கொணர்ந்து புகார் நகரை செழிப்பாக்க விரும்பினான் . காந்த மன்னன் மீது தமிழ் முனி அகத்தியர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் . காந்தனுக்கு காவிரி ஆற்றை புகார் நகருக்கு கொண்டு வரும் ஆலோசனைகளை வழங்கினார். காந்த சோழனும் காவிரி ஆற்றை சோழ நாட்டில் பாய வழி செய்து  பெரும் பெறு பெற்றான்.   சோழர்கள் எப்போதும் காவிரி ஆற்றுக்கு அருகில்  தலை நகர் இருக்குமாறு நிர்மாணித்தனர் .அதனால் சோழ சம்ராஜ்யம் விவசாயத்தில் செழித்து நெற்களஞ்சியமாக இருந்தது .சோழ நாட்டில் தண்ணீர் பஞ்சமும் உணவுப் பற்றாக்குறையும் இருந்ததில்லை . காவிரி என்பது சோழர்களின் இன்னொரு அடையாளம்.. சோழர்களின் வரலாற்று தேடல் தொடரும். . .

சோழ வம்சம் பெயர்க்காரணம் .

Image
#சோழ வம்சம் பெயர்க்காரணம் .    சிபி சோழனுக்கு பிறகு பெயர் அறியப்பட்ட அரசர்களில் சோழன் என்ற அரசர் பெயர் வருகிறது.  #செம்பிய அரசர்களில் சோழனின் ஆட்சி சிறப்பானதாகவும் போற்றத்தக்கதாய் இருந்திருக்கக் கூடும் . அதனால் தான் அவருக்கு பின் வந்த அனைத்து அரசர்களும் #சோழர் பட்டம் ஏற்றனர்.   #சோழ என்ற பெயருக்கு இன்று வரையில் பொருளை கண்டறிய வில்லை . ஒரு வேளை சோழ என்பது #சூரியனை குறிக்கும் சொல்லாகவே இருக்கலாம் . இதற்கு முன்னர் #சிபியின் பெயரால் செம்பியர் என்றழைக்கப்பட்ட வம்சம் . #செம்பியன் என்றால் செங்குருதி இயம்பியன் என்ற பொருள் மட்டுமல்ல #செங்கதிர் கதிர்களை இயம்பியன் , அதாவது சூரியன் என்ற பொருள் தரும் வகையிலும் பெயர் இருந்திருக்கலாம் . சூரியனை நினைவுப்படுத்தும் வகையிலே #சோழன் என்ற பெயர் வைத்திருக்கலாம்... 🐅 #சோழர்களின் தேடல் தொடரும்... 🐅 🐅 🐅

சதுக்கபூதம்

Image
#சதுக்கபூதம்     பண்டைய சோழர்களின் தலை நகரில் காவல் தெய்வமாக விளங்கியது சதுக்க பூதம் . அது தவறு செய்பவர்களை துரத்திப் பிடித்து நடு வீதியில் நிற்கவைத்து நைய புடைத்து ஊருக்கெல்லாம் தெரியும்படி ஓலமிட்ட படி அவர்களை கடித்து தின்றுவிடும் என பயமுறுத்துவர்...      பிறன்மனை நோக்குவோர், விலைமாதர், போலிச்சாமியார்கள், சூது கவ்வும் அமைச்சர்கள், புறம் கூறுவோர் இவர் களை எல்லாம் சதுக்க பூதங்கள் தண்டிக்கும்  என நம்பினார்கள்....

சிபிசோழன்

Image
சங்க காலத்திற்கு முற்பட்டவரான #சிபிசோழன் , சோழர்களில் மிகப் பெருமை வாய்ந்த அரசராக போற்றப்படுகிறார் . இவரது காலம் ராமாயணம் , மஹாபாரதத்திற்கும் முன்பானது.  ராமருக்கு குலப்பெருமையை பற்றி சொல்ல #சிபியின் வரலாற்றைத் தான் கூறினர். #சிபி சக்கரவர்த்தி எல்லாச் சங்கப் புலவராலும், பிற்பட்ட கால புலவராலும், சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் எல்லாம் குறிக்கப்படுள்ளார்.  பருந்திற்கு அஞ்சி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன் சதையை கொடுத்த பெருமை படைத்தவர்.     "புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கி கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் #சிபியின் மடியில் விழுந்ததது.  புறாவுக்காகப் பருந்து பின்னால் நின்றது.  புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும் ". பசியுடன் வந்த கழுகையும் ஏமாற்றாது , அதே வேளையில் புறாவை காப்பாற்றி தர்மத்தை காப்பாற்ற நினைக்கிறார் புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன் சதையினை அறு

சோழர் தலைநகராக புகார்

Image
சோழர் தலைநகராக புகார் நகரம் :    பிரளய காலத்தின் போது தென்னகத்தை விட்டு வெளியேறி அனைவரையும் காப்பாற்றிய சத்ய விரதன் அயோத்தி நகரை நிர்மாணித்து அரசாளத் துவங்கினார் . அவரது மகன் இஷ்வாகுவும் சிறந்த அரசராக அயோத்தியை ஆளத் துவங்கினார் . இந்த வம்சா வழியில் #மாந்ததா என்ற அரசருக்கு பிறந்தவர் தான் அம்பரிசனும் , முசுகுந்தனும் . மாந்ததா தனது முதல் மகன்  அம்பரிசனை அயோத்திக்கும் , முசுகுந்தனை கங்கையின் தென் திசைக்கும் அதிபதியாக்கினார் .முசுகுந்தனே இஷ்வாகு குலத்திலிருந்து சோழர் குலத்தை துவக்கினார் .        முதலில் கருவுர் பகுதியில் தன் அதிகாரத்தை செலுத்த ஆரம்பித்த #முசுகுந்தர் பல அரசர்களையும் வென்று சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்தினார் . முசுகுந்தனின் வீரத்தினையும் அறிவுத்திறனையும் கேள்விப்பட்ட இந்திரன் , போரில் தனக்கு உதவி செய்யுமாறு கோரினார். முசுகுந்தரும் இந்திரனுக்கு உதவி செய்து போரில் வெற்றி பெறச் செய்தார் .  இதனால் முசுகுந்தருக்கு வெற்றி பரிசாக ஏழு சிவலிங்கத்தையும் , மக்களை பாதுகாக்கும் பூதத்தையும் அனுப்பி வைத்தார் இந்திரன் . அந்த ஏழு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார் அரசர்

உத்திரகோசமங்கை

Image
உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா? இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது. இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது. கோவில் அமைப்பு

சிபிசோழன்

Image
தோன்றின் புகழோடு தோன்றுக , என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாகியது தான் #சோழ வம்சம். உலகில் ஆயிரமாயிரம் அரசர்களின் வரலாறு இருந்தாலும் அவையனைத்தும் சோழர்களின் வரலாற்றிற்கும் , அவர்களின் நீதி , நேர்மை , கலை , வீரம் , ஆன்மிகம் , வளம் ஆகியவற்றிற்கு ஈடு இணையாகாது .        சோழர்களின் அடிப்படை மரபை ஆராய்ந்தால் அவர்கள் சூர்ய மரபை சேர்ந்தவர்கள். "ஒரு வம்சத்தினர் தனது தந்தை வழி மரபையே பின்பற்றுவர் . ஒருவருக்கு ஒரு தந்தை என்பது போல ஒரு மரபும் ஒரு மனிதனிலிருந்து வந்ததே" . எனவே சோழர்களை தங்களின் முன்னோர்களாய் கருதுபவர்கள் அனைவரும் #சூரிய_மரபை சேர்ந்தவராய் இருத்தல் வேண்டும்.       காசியப முனிவருக்கும் -அதிதிக்கும் மகனாய் பிறந்தவர் தான் #விவஸ்வான் என்ற சூரியதேவன் . விவஸ்வானை விஷ்ணுவின் அவதாரமாக கருதியதால் சூரிய நாராயணன் என்றும் அழைத்தனர் . சூரியனின் விஸ்கர்மாவின் மகள் சந்தியாவை மணந்தார். இவர்கள் மகன் தான் #வைவஸ்த மனு எனப் பெயரிடப்பட்ட சத்திய விரதன் ஆவான். சத்திய விரதன் தென் தமிழகத்தை ஆண்ட முதல் அரசனாவன். பெரும் பிரளய காலத்தில் உயிர்களையும் வேதங்களையும் காப்பாற்றி கரை சேர்த்தவர் அவரே . &qu