சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு:
#சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு:
சித்திரை முதல் நாள் அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன.
சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக,
சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.
சைத்ரா/சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இலக்கிய ஆதாரங்கள்:
புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று கூறுகிறார் ஞானப்பிரகாசர்.
அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று கூறுகிறது .
நக்கீரர் "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று கூறுகிறார். இதில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் ராசமாணிக்கனார் கூறுகிறார்.
சித்திரை அல்லது மேஷம் என்பது தான் தமிழில் முதல் மாதம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் சைத்ரா/சித்திரை முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தமிழர் சித்திரைக்கும் மற்ற மாநில சைத்ராவிற்கும் 10 அல்லது 15 நாள் வேறுபாடு தான். அதற்கு காரணம் "சர்வதேச ஆண்டு முறையை இந்தியர்கள் ஏற்ற போது பல மாநிலங்கள் ஒரே தினத்தில் ஏற்கவில்லை. ஒரு மாநிலம் ஏற்று அண்டை மாநிலம் ஏற்க பல வருடங்கள் ஆயிற்று". சர்வதேச முறைக்காக பாரம்பரிய காலண்டரில் சில நாள் மாற்றப்பட்டது.
அந்த இடைவெளியால் தமிழ் புத்தாண்டுக்கு சில நாள் முன்பு பல மாநிலமும், தமிழனுடன் அதே நாளில்
"கேரளா,ஒரிசா, நேபாள்,மொரிசியஸ்,தாய்லாந்து , மியான்மர் , ஸ்ரீ லங்கா , கம்போடியா ,லாவோஸ் , பாலி இந்து மக்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்".
புத்தாண்டுக்கு ஒரு நாள் அல்லது சில நாள் கழித்து அல்லது அதே நாளில் குஜராத், அஸ்ஸாமில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
அதன் விவரம் இதோ
சித்திரை/சைத்ரா முதல் நாள் தமிழ் புத்தாண்டு, கேரளா விஷு, ஒரிசா விஷ்வா சங்கராந்தி, பஞ்சாப் வைசாகி, நேபாள் மைதிலி, இந்தோனேசியா பாலி இந்துக்கள் நியோபி,இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.
தமிழ் புத்தாண்டுக்கு சில நாளுக்கு முன்பு தெலுகு உகாதி, கன்னட பேவு பெல்லா, ராஜஸ்தான் தாப்னா, சிந்தி சேட்டி சந்த், மணிப்புரி சஜிபு செய்ரோபா, மராட்டி குதிபத்வா, கொங்கணி நவ்வே வர்சாச்சே, ஹிமாச்சல் பிஷு இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.
இரண்டு , மூன்று நாளுக்கு முன்பு அனைத்து ஹிந்தி மாநிலங்களும் 'சைத்ர பிரதிபடா' என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
குஜராத், தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் முன்பு கொண்டாடுகின்றனர். அசாமி 'ரொங்காலி பிஹு' என்று ஒரு நாள் முன்பு தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் பின்பு புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
தாய்லாந்தில் #சாங்க்ரான் புத்தாண்டு ஒரு நாள் முன்னாதாக கொண்டாடுகின்றனர் . தண்ணீர் விளையாட்டுடன் புத்தாண்டை தாய் மக்கள் கொண்டாடுகின்றனர் . தமிழர்களும் தண்ணீர் ஊற்றி விளையாடி புத்தாண்டை கொண்டாடியாதாக இலக்கியங்கள் கூறுகின்றது..
கம்போடிய புத்தாண்டு மகா சங்க்ரான் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திங்க்ரான் என்று பர்மாவிலும் , மஹா சங்க்ரான் என்று லாவோஸ் நாட்டிலும் புத்தாண்டு ஏப் 13-16 வரை கொண்டாடப்படுகிறது. #மேஷ_சங்கராந்தி என்ற இந்திய புத்தாண்டு பெயரின் திரிபில் தான் மற்ற நாட்டினர் புத்தாண்டினை கொண்டாடுகின்றனர் .
-வி. ராஜமருதவேல்.

Comments
Post a Comment