இருக்குவேளிர்
இருக்குவேளிர் விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைத ிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம். இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகள