செம்பியன் மாதேவி தஞ்சை பெருஉடையாருக்கு அனுப்பிய பிரம்மாண்டமான நந்தி.


செம்பியன் மாதேவி தஞ்சை பெருஉடையாருக்கு அனுப்பிய பிரம்மாண்டமான நந்தி.
ஒவ்வொரு ஊராக சென்று, தங்கி, அங்குள்ள பழைய செங்கல் கட்டுமான கோயில்களை கற்றளிகளாக மாற்றிக் கொண்டே வந்தவர் ராஜ ராஜனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்கள், திருவக்கரையில் உள்ள "வக்கிரகாளி அம்மன்" ஆலயத்தை திருப்பணி செய்துகொண்டிருந்த போது, அது வரை எந்த தேசமும் பார்த்திராத அளவான, நான்கு பனை உயர அளவிற்கு தஞ்சையில் ஒரு கோயிலை ராஜ ராஜன் எழுப்புகிறான் என்ற செய்தி கேட்டு, தன்னுடைய பங்களிப்பாக ஏதாவது வழங்க வேண்டும் என்று ஒரு நந்தியை பரிசாக "திருவக்கரையிளிருந்து" வராக நதிக்கரை வழியாக அனுப்பி வைக்கிறார்,
நந்தி வராக நதியில் சென்ற போது பெரு வெள்ளம் வந்து ஆற்றில் சிக்கிக்கொண்டு தஞ்சைக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கி விட்டது. தஞ்சை பெருஉடையாருக்கு எதிரே கம்பீரமாக உட்கார வேண்டிய நந்தி, தற்போது திருவக்கரை அருகில் உள்ள "சன்னியாசி குப்பம்" என்ற இடத்தில் அனாதையாக நின்று கொண்டுள்ளது, இது குறித்து "கவிழ்ந்த பொக்கிஷம்" என்ற தலைப்பில் "பால குமாரன்" அவர்கள் 90 களில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நந்தி எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்