திருப்பரங்குன்றம் கல்வெட்டு

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"

திருப்பரங்குன்றம் கல்வெட்டுகளில் திசைக்காவல்-'மழவராயர்' பிரமலைக் கள்ளர் மரபினரே.
திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மழவராயர் ஒருவர் திருப்பரங்குன்றம் கோயிலின் பாடிக்காப்பாளன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.இதைப்பற்றிய கல்வெட்டு செய்தி இதுவே.
இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் "சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ). திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவர முடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை
மழவராயனுடைய
வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது.'மழவர்' என்பதுமலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும்.
திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது.
காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே:
எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.மலையமான் குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார்.
என்வே முற்காலத்தில் மழவர்(மலையமான்கள்) என்றும் பிற்காலத்தில் பார்க்கவகுலம், தஞ்சைக்கள்ளர், பிரமலைக்கள்ளர் என வேறு வேறு பெயரில் அறியப்படும் மரபினர்களே கள்ளர்கள்.
். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார்.
என்வே முற்காலத்தில் மழவர்(மலையமான்கள்) என்றும் பிற்காலத்தில் பார்க்கவகுலம், தஞ்சைக்கள்ளர், பிரமலைக்கள்ளர் என வேறு வேறு பெயரில் அறியப்படும் மரபினர்களே கள்ளர்கள்.
இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது. எனவே பிரமலைக்கள்ளர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் பாடிக்காப்போனாக நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற சீர்மிகு மலையமான் வம்சத்தினரே.

Comments

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்