போர்க்குடிகள்
பிரிட்டீசார் பார்வையில் முக்குலத்தோர்: 100 தகவல்கள்..... கிபி 1891 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Census of india- Madras எனும் நூலில் போர்க்குடிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ் சாதிகள் முக்குலத்தோர் மட்டுமே. கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்கள் போர்க்குடிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். முக்குலத்தோரான கள்ளர், மறவர் மற்றும் அகமுடையாரின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கிபி 1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Caste and tribe's of southern india எனும் தெளிவாக தரப்பட்டுள்ளது. பிரிட்டீசார் தாங்கள் நேரில் கண்டவற்றை தங்களது புரிதலுக்கு ஏற்ப பதிவு செய்துள்ளனர். இந்நூலில் உள்ள சில அரிய தகவல்களை காண்போம்.. 1906 ஆம் ஆண்டை நோக்கி செல்வோம்.... 👉01) தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டைப் பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படும் நடுத்தர உடல்வாகும், கறுத்த நிறமும் கொண்ட பழங்குடி மக்கள் கள்ளர்கள். 👉02) பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாகும். இந்த வகுப்பின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என அழைக்கப்படுகிறார். 👉03) 1891 கணக்கெடுப்