Posts

Showing posts from July, 2021

ஓம் ஸ்ரீ மீனாம்பிகை

Image
ஓம் ஸ்ரீ மீனாம்பிகை                போற்றி  ஆடி முளைக்கொட்டு விழாவில் அன்னை  பூப்பல்லக்கு சேவை மாதர்கள்    குலத்திலக      மரகத        மணியே! நாதர்தன்    அகந்திகழும்      நாணிலத்        தொளியே! வேதியர்     உளந்திகழும்      மாணிக்க        விழியே! பூதொடு    ரதந்திகழும்       புண்ணிய         வழியே...! 🌹மதுரை  

ஆடி மாதம்

Image
  அற்புதமான மாதம்: ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம். இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதிலம் அடையும் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.

ஜெய் ஸ்ரீராமஜெயம் !!

Image
*ஸ்ரீ ராமஜெயம்* *முதலில் எழுதியது யார்..!?* போரில் ராவணனை வீழ்த்திய ராமர், இந்த நல்ல செய்தியை யார் சீதையிடம் சென்றுக்கூறுவது என்று யோசிக்கும்பொழுது,  நான் நீ என்று பலர் முன்வந்தார்கள். ஆனால் ராமரோ ஆஞ்சநேயர்தான் இதற்குச் சரியான ஆள் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார் ! ராமரின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேயருக்கு, சந்தோஷ மிகுதியால்  பேச முடியவில்லை.  கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதைக் கண்ட சீதைக்கோ ஏன் அனுமனின் கண்களில் கண்ணீர் என்ற கவலை ! இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன், சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன,  ராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று  *"ஸ்ரீ ராமஜெயம்"* என்று மண்ணில் எழுத, அதைப்படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தார்...! *ஜெய் ஸ்ரீராமஜெயம் !!