Posts

Showing posts from August, 2018

சிறுநீரகக் கல்...

Image
சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்! இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

பரத நாட்டியம்

Image
# பரத நாட்டியம் # சோழநாட்டுக்கோவில்களில் தேவதாசிப்பெண்கள் ஆடிய 'சதிராட்டம்' தான் தற்போது நவீனவடிவத்துடன் ஆடப்படும் பரதநாட்டியம்...பரதம் என்ற சொல் பாவம்.ராகம்.தாளம்.மூன்றும் கலந்தது.மாமன்னன் இராசராசன் காலந்தொட்டு சிறப்பாக நடைபெறுகிறது.தஞ்சை பெற்றெடுத்த தங்கம் "பால சரஸ்வதி" பரதநடனத்தை மெருகேற்றியவர்... சென்னையில் கலாட்சேத்ரா என்ற அமைப்பை உருவாக்கி இன்றுவரை பல ஆளுமைகளை உருவாக காரணமானவர் "ருக்மணி தேவி அருண்டேல்" ஆவர்.. இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.

நான்காம் தமிழ்ச் சங்கம்.

Image
நான்காம் சங்கம். நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல் பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன. சங்கம் தோன்றக் காரணங்கள் முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அ

மூன்றாம் தமிழ்ச் சங்கம்.

Image
மூன்றாம் சங்கம். கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம். கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்மும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டு பண்ணி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே.இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே. கடைச் சங்கத்த

இரண்டாம் தமிழ்ச் சங்கம்.

Image
இரண்டாம் சங்கம். இடைச்சங்கம் அல்லது இரண்டாம் சங்கம். கி.மு. 3000 முதல் 1500 வரை முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னம் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்சங்கம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு 1500 வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது. “இவ்வகை யரசிற் கவியரங்கேறினார் ஐவகையரசர் ஆயிடைச் சங்கம் விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக் கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்” என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது. இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அ

முதல் தமிழ்ச் சங்கம்.

Image
முதல் தமிழ் சங்கம். (தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்) கி.மு. 5000 – கி.மு. 3000 வரை. பழம்பாண்டியமன்னனான “காய் சினவழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது. பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது. அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார். தி

இடைச்சி கல்

Image
தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா.... எல்லோரும் யோசிக்காமல் "ராஜ ராஜ சோழன்னு..." பதில் சொல்லிடுவாங்க. ஆனா, ராஜ ராஜ சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே! தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 'ராஜா ராஜா!' என்றழைக்க... ராஜ ராஜ சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு *'தஞ்சை பெரிய கோயில்'* என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு இடைச்சி மூதாட்டியின் கா

மந்திரவடிவானவன்

Image
மந்திரவடிவானவன் வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவன் என்று இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பின்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவென்று ஆகமங்கள் பறைசாற்றுகின்றன. சைவசித்தாந்த ஆகமங்களில், குறிப்பாக சந்திரஞானம், யோகஜம், வீராகமம், வித்தியாபுராணம், வாயுசங்கிதை முதலியனவும், சிவதருமம், சிவதருமோத்தரம் ஆகியனவும் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பெருமைகளை விரித்துக் கூறுகின்றன. ஏனைய ஆகமங்கள், குறிப்பாக மதங்க்பாரமேசுவரம், மிருகேந்திரம், காமிகம் முதலியன பிராஸாதமந்திரத்தைச் சிறப்பிக்கின்றன. அதிலும் மதங்கபாரமேசுவரம் வியோமவியாபி மந்திரத்தையே தீ¨க்ஷ முதலிய கிரியைகளில் சிறப்பித்துக் கூறுகின்றது. வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவினன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் இல்லை என்றும் ஆகமங்கள் கூ

சுந்தர சோழன்

Image
கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான். சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான். காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். சுந்தர சோழன் இறந்த போது அவன் மனைவியருள் ஒருவரான வானவன் மாதேவி என்பவள் பால் குடி குழ்ந்தை ஒன்றை விட்டு விட்டு தன் கணவனுடன் எரிமூழ்கினாள்".முலைமகப்பிரிந்து முழங்கு எரி நடுவனும்............தலை மகற் பிரியா தையல்" .என்று அந்நாளையக் கல்வெட்டுக்கள் அவர் உயிர் மறுப்பைப் புகழ்கின்றன.இவ்வீர அரச நங்கையே மாவீரன் ராஜராஜனை ஈன்ற மாதேவியாவாள்.தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் முதலாம் ராஜ ராஜ சோழனால் அவன் தாய் தந்தையரான சுந்தர சோழன்,அரசி வானவன் மாதேவி ஆகியோரின் படி

முத்தாடக்கண்ணியார்

Image
முடத்தாமக் கண்ணியார் பொருநனுடைய கூற்றாகச் சொல்லும் இந்தப் பாட்டில் சோழ நாட்டின் வளத்தை விரிவாக அமைத்திருக்கிறார்.  சோழநாடு முழுவதும் வயல்கள் இருக்கின்றன. நிலத்தில் விளையும் நெல்லை, அந்த நிலத்தின் ஒரு பக்கத்தில் உள்ள திடலில் சேர் கட்டிச் சேமித்து வைத்திருக்கிறார்கள் வேளாளர்கள். ஒவ்வொரு மா நிலத்திலும் இந்த நெற்கூடுகள் நிரம்பியிருக்கின்றன. அங்கங்கே தென்னந் தோப்புகள் இருக்கின்றன. அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள். உழவருடைய பெண்கள் மணலைக் குவித்து விளையாடுகிறார்கள். மயில்கள் பாகற்பழத்தையம் பலாப் பழத்தையும் கொத்தித் தின்கின்றன. ஆண் மயில்கள் அப்படியே மெல்ல அசைந்து அசைந்து வந்து மணற்பரப்பிலே ஆடுகின்றன. அருகில் உள்ள மலர்ச் செடிகளிலே வண்டுகள் முரல்கின்றன. அந்த ஒலி யாழோசை போல இருக்க, மயில்கள் நடனமாதரைப்போல ஆடுகின்றன. வயல்கள் நிரம்பிய மருத நிலத்தில் கரும்பை வெட்டும் ஓசையும் நெல்லை அரியும் ஓசையும் எங்கும் முழங்குகின்றன. வயல் இல்லாத மேட்டு நிலங்களில் அடம்பங்கொடியும் பகன்றை என்ற கொடியும் படர்ந்திருக்கின்றன. புன்கமரமும் ஞாழல் மரமும் வளர்ந்திருக்கின்றன.  ஒரு பக்கம் முல்லை நிலம் பரந்திர

குருபூஜைவிழா

Image
குருபூஜைவிழா  - ஜெயந்தி விழா ? குருபூஜைவிழா  - தேவர் திருமகன் மதுரையில் மரணமடைந்தபோது அவரது உடல் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது .அங்கு வல்லநாட்டு சித்தர் கரங்களால் இந்து சமய முறைப்படி இறுதிசடங்குகள் நடைபெற்றது .பின்பு பசும்பொன் தேவர் வீட்டின் முன்பாக பத்துக்கு பத்துஅடி நீள அகலமுள்ள குழி வெட்டப்பட்டு  அதில் வேப்பிலை திருநீறு சுக்கான் போன்ற பதினெட்டு வகையான மூலிகைகள் பரப்பப்பட்டு தேவரின் உடல் பத்மாசனநிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அடக்கம்செய்யப்பட்டது . அதிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மண்டலம் 41 நாட்கள் விளக்குபூஜை நடத்தப்பட்டது .மேலும் சித்தவித்தையில் உள்ளவர்களுக்கு நைஸ்டீக பிரம்மச்சாரியாக [ தூக்கத்தில் கூட தன்னிலை தவறாதவர்கள் நைஸ்டீக பிரம்மச்சாரிகள்] வாழ்ந்தவர்களுக்கு அவரது சீடர்களால் நடத்தப்படும் பூஜையே "குருபூஜையாகும் " இல்லறவாழ்வில் ஈடுபட்டவர்கள் கிருஸ்தவமதத்தை சேர்ந்தவர்கள் கள்ளக்காதலில் வெட்டுப்பட்டு செத்தவர்களுக்கெல்லாம் குருபூஜை நடத்தும்  அக்கிரமம் இங்குதான் அரங்கேறுகிறது . ஜெயந்தி விழா -  இந்திய நாட்டின் மகாத்மா என்று அழைக்கப்படும

அய்யை

Image
பிற்கால சோழர்களைப்போலவே சங்க கால சோழர்களும் வடநாட்டை வென்று பேரரசர்களாக இருந்துள்ளனர்.தம் வீரப்புகழ் பரப்பினர் என்பதை சங்க காலப்பாடல்கள் மூலம் அறியலாம்.செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியும் இமயத்தில் புலிக்கொடி பொறித்த கரிகாலனும் தக்க சான்றுகளாவர்,மேலும் உறையூரிலிருந்து ஆண்ட தித்தன்  என்னும் சோழப்பேரரசன் காலத்தில் வடுக வேந்தன் கட்டி என்பவனும் பாணர் குடி மன்னனும் சேர்ந்து உறையூரை முற்றுகை இட்டனர்.அப்போது கோட்டையிலிருந்து எழுப்பிய போர் முரசம் கேட்டவுடன் அவ்விரு படைகளும் தலை தெறிக்க ஓடி விட்டனர்.தத்தனின் மகள் அய்யை என்பவள் தலைமையில் எழுப்பப்பட்ட போர் முரசமே அது.அரண்கள் காக்கப்பட்ட விதம் அறியவும்.photo.......vekkaaliyamman koil .......uraiyur

இடுகம்பாளையம் ஆஞ்சநேயர்

Image
இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் கோயில்கொண்டு அருள்கிறார் அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருக்கோயில் இது. சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை தரிசிக்கலாமே! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இடுகம்பாளையத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. கோயிலை அடைந்ததுமே மனதில் பூரண அமைதி குடிகொண்டுவிடுகிறது. கோயில் சுற்றுச் சுவர்களின் உட்புறத்தில் நம் வாழ்வை வளப்படுத்தும் வாழ்க்கை நெறிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஜெயமங்கள  ஆஞ்சநேயருக்குத் தென்புறத்தில் விநாயகரும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.

இட்லியின் மகத்துவம்

Image
இட்லியின் மகத்துவம்:....... இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. இட்லி,தோசை சாதத்தை விடத் தரமான உணவாகும்...............நன்றி..தினமலர்

சிவலிங்கம்

Image
தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப்பெரியது.அதற்கு ஆதி சைவரைக்கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்த போது மருந்து இளகிப் பந்தனம் ஆகவில்லை.ராஜராஜன் மனம் நொந்தான்.அது சமயம் சைவ முனிவரான கருவூர்த்தேவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து செவ்வனே பந்தனம் செய்வித்தார் என கருவூர் புராணம் சொல்கிறது.இக்கருவூரார் தஞ்சைப்பெரிய கோயிலின் மீது பதிகம் பாடியுள்ளார்.அப்பதிகம் ஒன்பதாம் திருமறையில் இடம் பெற்றுள்ளது.

ஆதித்த சோழன்

Image
ஆதித்த சோழன்[871-907]திருப்புறம்பியப் போருக்குப்பின் கி பி 881ல் கடைசிப் பல்லவ மன்னன் அபராஜித்தனைக்கொன்று தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்றினான்.பின்னர் கொங்கு நாட்டையும் கைப்பற்றினான் என்று நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டகப் தொகைப் பாடல் தெரிவிக்கிறது..............."சிங்கத்துருவனைச் செற்றவன்.......சிற்றம்பலம் முகடு.......கொங்கின் கனகம் அளித்த....... ஆதித்தன்"...

இளஞ்சேட் சென்னி

Image
கரிகால் சோழனின் தந்தையான சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி மௌரியப் பேரரசன் அசோகனின் படைகளை முறியடித்து விரட்டினான்.அதுவே செருப்பாழிப்போர் ஆகும்.சோழ நாட்டு எல்லையிலேயே மௌரியப்படைகள் பல முறை நைய்யப்புடைக்கப்பட்டன.சேரப்படைகளும் பாண்டியர் படைகளும் சோழருக்கு உதவின.இளஞ்சேட்சென்னி மௌரியப்படைகளைஅவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பாதபடி துளுவ நாட்டிற்கே துரத்திக்கொண்டு சென்றான்.துளுவ நாட்டிலேயே மௌரியர் தடம் அழியும் வரைப் போரிட்டான்.பாழிக்கோட்டை தரைமட்டம் ஆக்கப்பட்டது.செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் பெரும்புகழ் இளையன் சேந்தன் கொற்றனாரால் பாடப்பட்டுள்ளது..........."எழு உத்தினி தோள் சோழர் பெருமகன்.......விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி.......குடிக் கடனாகலின் குறைவினை சென்னி.......செம்புறழ் புறிசை பாழி நூறி.......வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.......கொன்ற யானை......."தமிழகத்தைப்  போரால் வெல்லமுடியாது என்று உணர்ந்த அசோகன் சமயபோர்வையில் உள்ளே நுழைய முற்பட்டான்.பௌத்த, சமண மதத்தினரை அனுப்பி வைத்தான்.

ஆண்டாள்

Image
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ புகழ் பெற்றது ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டுவருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வ

கேரளபுத்திரர்

Image
சங்க இலக்கியங்கள் யாவும் சேர நாட்டை சேர நாடு என்றும் அதன் வேந்தர்களை சேரர் என்றும் சேரலரென்றும்  குறிக்கின்றன.கிரேக்க நாட்டு வாணிகர் மெகஸ்தனிஸும் சேரமான் என்றே குறிப்பிடுகிறார்.ஆனால் அசோகரின் கல்வெட்டுக்களில் கேரளபுத்திரர் என உள்ளது.ஆனால் அம்மொழியில் சேரளபுத்திரர் எனவும் படிக்கும் படியாக அமைந்துள்ளது.கேரளர் என்ற வழக்குச்சொல் கி பி 8 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கலாம்.வேதகாலத்துக்குப்பின் வந்த வட மொழியாளர் தங்கள் மொழிக்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டனர்........................ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு  நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்  பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார். “கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெ

ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்...

Image
ஆண்டாளால் பெருமை பெற்ற ஆடி பூரம்!!! வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். "பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ மனமே உணர்ந்துபார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்' என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார். பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்புஇதற்கும் உண்டு (23) - வைணவ ஆசார்யர் ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் ஆடிப்பூரத்தின் சிறப்பை இவ்வாறு விவரிக்கிறார். "பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு தினத்துக்கு உண்டோ? ஏ மனமே உணர்ந்துபார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளேதான். பூரத்துக்கு ஒப்பு பூர நாள்தான்' என்று ஒப்புமை காண முடியாத சிறப்பு நாள் என்கிறார். சுவாமி தேசிகனும், வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிகவிளங்க விட்ட

அலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ்

Image
@அன்பரசன் தரணி அலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ் (புருசோத்தமன்) தமிழ் மன்னன் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழர்களிடமே யானைப்படை இருத்தது. 2300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி பகுதியில் தமிழர்களே இருந்தனர். அலக்சாண்டர் தோற்றார் என்பதை உலகம் மறைத்தது. அவன் தமிழன் என்பதை இந்தியா மறைக்கிறது. உலகை வெல்ல புறப்பட்டவன் தமிழன் வீசிய ஈட்டி விசத்தில் சிக்கி நோய்வாய்பட்டு மாண்டான். அவன் இறப்புக்கு காரணம் நண்பனின் மரணம் என்று வேறு கதை கூறுகின்றனர். நண்பனும் புருசோத்தமனுடனான போரிலயே மாண்டான். இவர் சோழ மன்னர் என்று கூறுகின்றனர். வடக்கில் பஞ்சாப் பகுதியை ஆண்டவர். சில இடங்களில் பாண்டியமன்னன் எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ அவர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழனின் பெருமையை உலகறிய செய்ய இதை ஷேர் செய்யலாமே !??..........பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்:  Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

பம்பாய் கலகம்

Image
சுதந்திரப்போர்------பம்பாய் கலகம் (Bombay Mutiny) அல்லது வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம் (Royal Indian Navy Mutiny) என்பது பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க்கைதிகள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது. பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில் ஜவகர்லால