பழையாறை
பழையாறை பழையாறை சோழர்களின் 5 தலைநகரங்களின் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்நாளில் சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2 வது தலைநகராக மாறியது. ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்களெல்லாம் பழையாறை என்ற பெருநகரத்திற்குரிய பண்டைய பெயர்களாகும். காவிரிப்பூம்பட்டினம் கி.பி.4ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடல்கோளால் அழிந்தது. பின்பு உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்த பெருநகரம்தான் பழையாறை. இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இக்கோநகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது. அமர்நீதி நாயனார் இவ்வூரில் பிறந்தார். கி . பி 840 இல் விஜயாலய சோழனுக்கு பழையாறையில் தான் வசித்து வந்தான். பின்னர் பாண்டியருக்கும், பல்லவருக்கும் ஏற்பட்ட போரில் பல்லவருக