கவின்மிகு கம்போடியா
# கவின்மிகு கம்போடியா - 3 # வரலாற்றின் முதல் வியட்நாமிய மன்னன் ஒரு தமிழ் மன்னன் ! புரட்சி செய்து நாட்டைப்பிடித்தப்பாண்டியன் ! இவையெல்லாம் குறிப்பிடும் மன்னன் ஒரு தமிழ் பாண்டியன் மன்னன் ஸ்ரீ மாறன்என்றால் நம்ப இயலுமா ? ஆனால் ஆதாரங்கள் தருவது சீன வரலாறும் , பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர்களும் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும் .இனி விரியாக அந்த புரட்சிப்பாண்டியனைப்பற்றி ப பார்ப்போம் . சம்பா எனப்படும் இன்றைய வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று அறியப்படுகிறது அந்தப்பகுதியில் புனான்வம்சம் என்ற பெயரில் ஒரு சிறப்பான ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. மேலும் புனான் என்பதற்கு இது வரை சரியானப்பொருள் தெரியவில்லை.பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத