Posts

Showing posts from August, 2024

கர்ணன் வஞ்சிக்கப் பட்டானா

Image
🌞தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.🌞வ்ருஷாகபி:..ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம். மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம், “தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான். அப்போது சூரிய பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன். “க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம். அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான

கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்

Image
திருக்குடந்தைக் காரோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்... இறைவன் இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: சோமசுந்தரி அறிமுகம் : கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது. புராண முக்கியத்துவம்: முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், “”நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவ

படிக்க புண்ணியம் வேண்டும்

Image
மிக நீண்ட பதிவு தான் ஆனால் உபயோகமானது மகா பெரியவா சரணம்.... படிக்க_புண்ணியம்_வேண்டும்...... நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..! இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்! *இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை " சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்

விஷ்ணு

Image
*🐚 விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும்... அறியாததும்...!* காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். *🐚 திருமாலின் ஏகாதசி* : ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைபட்ட எல்லா சுபக்காரியங்களையும் நடத்தித் தந்து அருளுவார் திருமால். *🍃 துளசி* : திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். *நரசிம்மர் வழிபாடு :* நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும். நரசிம்மரை தொடர்ந்து வழிபடுவதால் பில்லி, சூனியம், செய்வினை, எதிரிகளால் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பார். சந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய நரசிம்மரை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திர தினத்தன்று பூஜித்து வந்தால் கடன்கள், நோய்கள், திருமணத் தடை தீரும். நரசிம்மரை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்

நடராஜா போற்றி

Image
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி. தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி. பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி. பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும் சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

ஆண்டாள் ஆடிப்பூரம்

Image
ஆடிப்பூரம்...* பாண்டிய தேசத்து ஸ்ரீ வில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்; திருவாடிப்பூரத்தில், கோதையாய் அவதரித்து, ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் வரித்து, தினம் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கிய, கோதையே, கம்பீரமான குணங்களை உடைய ரங்கனுக்கு இனிய பத்தினியாய், ரங்கநாதருடன் ஐக்கியமாகி அவரையே ஆண்டவள் - ஆண்டாள்! ஆடி மாதப் பூர நன்னாளில் மிகப்பெருமையுடைய ஸ்ரீவிஷ்ணு சித்தரின் பெண்ணாக, கோதாதேவி அவதரித்தார். ஆண்டாளின் 'ஞானபக்தி' அளவிட முடியாதது. பெரியாழ்வாரும், 'கோதைக்குகந்த மணாளன் கோயிற் பிள்ளையான நம்பேருமானே' என எண்ணினார். ஆனால் இது எப்படி நடக்குமென கவலைப்பட, திருவரங்கச் செல்வன், ஆழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வரப் பணித்தார். அதன் படியே ஆண்டாளை ஆட்கொண்டார். 'ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்' என்ற பெரியாழ்வாரின் பாடலுக்கு ஏற்பவே நடந்ததை, உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டார். ராமனுஜர், ஆண்டா

அர்த்தமுள்ள பண்டிகை ஆடிப்பூரம்

Image
இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை. ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது. வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது. அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம். ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று. பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது அதாவது பிரபஞ்சத்தின் பெரும் சக்திக்கு உகந்த நட்சத்திரம். அந்த தேவிக்கு உகந்த நட்சத்திரம் ஆடிமாதம் வந்த‌ அன்றுதான் உமாதேவி அவதரித்ததாகவும் , மஹாலஷ்மியின் அருள் பெருகும் நட்சத்திரமாகவும் இந்து தர்மம் வலியுறுத்திற்று. அந்த நாளில் ஒவ்வொரு பெண்ணும் அன்னையினை வணங்கவேண்டும் அதுவும் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தன்று விரதமிருந்து வணங்க வேண்டும் என்றும் இந்து ஞானியர் சொன்னார்கள். ஏன் சொன்னார்கள்? அங்கேதான் இருக்கின்றது ஆடிமாத போதனை. ஆடிமாதம் அம்மன் வழிபாட்டுக்குரியது, பெண் சக்தியின் வழ

சடையவர்மன் சுந்தர பாண்டியன்

Image
இராஜேந்திர சோழ தேவருக்கு பிறந்த நாள் கொண்டாடியது போல வரும் சித்திரை மூலம் நாளன்று சடையவர்ம சுந்தர பாண்டிய தேவருக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டும் ------------------------------------------------------------- சோழர்களின் பிற்கால எழுச்சியினை விஜயாலய சோழன் ஏற்படுத்தி வைத்தான் அவனின் வலுவான அஸ்திவாரத்துக்கு பின் மெல்ல மெல்ல சோழநாடு மேல் எழுந்தது . அதற்கு பாண்டிநாடும் சேரநாடும் பெரும் எதிர்ப்பை கொடுத்து கொண்டே இருந்தன, ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை வென்றே தீருவது என கங்கணம் கட்டி வீரபாண்டியனை மதுரைக்குள் புகுந்து ஒழித்து கட்டியிருந்தான் . பதிலுக்கு பாண்டியரும் சேரரும் அவனை அவன் நாட்டில் ரகசியமாக புகுந்து தலைவெட்டி கொன்றனர் . அதன் பின் அரியணைக்கு வந்த ராஜராஜன் புலிபோல் நின்றான், அவனிடம் எந்த படையும் வெல்ல முடியவில்லை . காந்தளூர் சாலை என சேரரை நிர்மூலமாக்கிய அவன், பாண்டியரை முறியடித்து காலுக்கு கீழ் வைத்திருந்தான், இவர்களோடு கூட்டணிக்கு வந்த ஈழ அரசனை அனுராதாபுரத்தில் முறியடித்து போட்டிருந்தான் ராஜராஜன் காலத்தில் பாண்டியர் எங்கிருந்தார் என்பதே தெரியாது . ராஜராஜனுக்கு பின் அவன

உடையார்குடி

Image
உடையார்குடி, சோழ வரலாற்றில் இப்பெயர் மறக்கவியலாவொன்று. இன்றைக்கு 'வீராணம்' என்று அழைக்கப்படும் 'வீரநாராயணபுரம்' ஏரிக்கு அருகே, இன்று காட்டுமன்னார்கோயில் (சிதம்பரத்திலிருந்து கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தொலைவு) என அழைக்கப்படும் ஊர்தான் அன்று உடையார்குடி என்று அழைக்கப்பட்டது. கல்வெட்டுக்களில் 'வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர், அன்று சோழர்களின் பரம்பரை ஊர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குதான் திருமந்திரத்தை இயற்றிய திருமூலனார் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. தமிழக வரலாற்றில், குறிப்பாகச் சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக விளங்குவது இங்குள்ள 'அனந்தீசுவரர் கோயிலில்' உள்ள கல்வெட்டுக்களாகும். இவையே 'உடையார்குடிக் கல்வெட்டுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில்தான் இராசராசனாரின் பெரிய பாட்டியான 'செம்பியன் மாதேவி'க்குத் திருமணம் நடந்தது. அவர் இக்கோயிலுக்குத் தன்பெயரால் நந்தாவிளக்கு அறக்கொடையாக அளித்துள்ளார். உத்தமசோழன் காலத்தில், அடிகள் 'பழுவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன்' என்ற பழுவூர்

தலைமன்னார்

Image
தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் ராஜ ராஜசோழனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டுத் திருமுறை கண்ட சோழனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதைக் காணவில்லை. ஆனால் ஈழத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகிய திருக்கேதீச்சரத்தில் தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்களிடமிருந்தும், கறையான்களிடமிருந்தும் மீட்ட மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் தனிச் சன்னதி அமைக்கப்பட்டு, நித்திய பூசைகளுடன் நினைவு கூரப்படுவதைக் காணலாம்.

மந்திரிப்பட்டினம்

Image
மந்திரிப்பட்டினம் - சோழர் துறைமுகம்: ஆய்வில் கண்டுபிடிப்பு: சென்னை: 'தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, மந்திரிப்பட்டினம் கிராமம், சோழர் காலத்தில், துறைமுகமாக இருந்திருக்கலாம்' என, தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தஞ்சை தமிழ் பல்கலையின், கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர், ராஜவேலு கூறியதாவது: தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் இந்திய தொல்லியல் துறையும் இணைந்து, கடல்சார் அகழாய்வுக்கு, 1.5 லட்சம் ரூபாயை ஒதுக்கின. அதை, மந்திரிப்பட்டினம் கிராம அகழாய்வுக்காக பயன்படுத்தினோம். பத்து ஆண்டுகளில் வெட்டப்பட்ட, இறால் பண்ணை குட்டைகளில், சோழர்கால நாணயங்கள், தொல் பொருட்கள் கிடைத்தன; அருகில் உள்ள ஊர்களின் பெயர்கள், அரசுடன் தொடர்புடையவையாக இருந்ததால், அந்த ஊரை, அகழாய்வுக்கு தேர்வு செய்தோம். அகழாய்வில், ராஜராஜன் வெளியிட்ட செப்பு நாணயங்கள், வீட்டின் தரைப்பகுதி, சுடுமண் குழாய்கள், சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், ஊது உலை, அரிய வகை மணிகள், ஆபரண தயாரிப்பிற்கான தங்க மூலப்பொருள், தங்கத்துடன் இணைக்கப்பட்ட, கார்னீலியன் மணி, செப்பு மோதிரங்கள், காதணிகள் உள்ளிட்டவை கிடைத்து