கல்லீரல்
#கல்லீரல்_பிரச்சனைக்கு #உணவு_முறைகள் - #இயற்கை_மருத்துவம் பைல் சுரப்பு என்பது பித்தமே! தேவைக்கு அதிகமான பைல் சுரப்பு அல்லது சுரப்பின் ஓட்டத்தில் ஏற்படும் தேக்கம் ஆகியன பித்தம் அதிகமாவதையே காட்டுகிறது. ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் ‘அக்னியின் இருப்பிடம்’ ஆகவே சுலபமாக உஷ்ணம் அடைந்து பலதரப்பட்ட வீக்கம் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றது. கல்லீரலில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நொதிகள் செரிமானம் ஆன உணவை, உடலின் ஐம்பொறிகளின் கட்டமைப்புக்குத் தேவையான ஐந்து மாற்றுகின்றது. பித்த சமநிலை மாறுவதால் உண்டாகும். எதிர்மறை எண்ணங்கள் கோபம், பொறுமை, எரிச்சலடைதல் ஆகியன. பித்த தோஷம் சரியாக இருக்கும் போது வரும் நேர்மறை எண்ணங்கள், தைரியம், உறுதி, வைராக்கியம், உற்சாகம் ஆகியன. இந்த உணர்வுகளில் தடங்கல், தடுமாற்றம் நேரும் போது, கல்லீரல் செயல்பாடுகளில் மாறுதல் உண்டாகின்றது. #காமாலை கல்லீரலில் சுரக்கும் பைல் சுரப்பு தேவை போக சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் சேர்ந்து வெளியேற்றப்படும். பைல் சுரப்பியில் அல்லது குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அது சிறுநீர், மலத்துடன் சென்றடைய முடியாமல் ரத்தத்தில் கலந்துவ