வாழைப்பழம்

வாழைபழம் & வாழைப்பூவின் மருத்துவக்குணம்
மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்
-----------------------------------------
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும்
தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல
நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ்,
சக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக
அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து
போன்ற முக் கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மேலும்,
வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால்,
உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.

வாழைப்பழத்தின் வகைகள்
-----------------------------------------
ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில்
70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக்
குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை
வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

சரும நோய் நிவாரணி
-----------------------------------------
வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும்.
உடலுக்கு வலுவும் எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. ரத்த ஓட்டத்தை விருத்தி
செய்யும். மலச்சிக்கல் இருந்தால் போக்கிவிடும்.. ஒழுங்கற்ற மாதவிலக்கு
உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் ஒழுங்கு ஏற்படும்.
ஜீரணத் தொடர்பான நோய்களை கண்டிப்பதோடு, குடலில் புண் இருந்தால் ஆற்றும் தன்மை
உண்டு. சரும நோய்களுக்கு இது தகுந்த நிவாரணி,

சோர்வை நீக்கும்
-----------------------------
கடும் வேலையிலும் சோர்வு வராமல் நீக்குவது வாழைப் பழம் தான். சாப்பிட்ட பின்
சுறு சுறுப்பு தானாக வந்து விடும். அதன் பின், மீண்டும் சில மணி நேரம் வேலை
செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, "ட்ரைப் டோபன், செரடோனின்' ஆகிய ரசாயன
சத்துக்கள் தான் இதற்கு காரணம்.

ரத்த அழுத்தம், பக்கவாதம்
--------------------------------------------
பக்க வாதங்கள் வராமல் தடுக்க வாழைப் பழம் பெரிதும் உதவுகிறது. மற்றவர்களை விட,
50 சதவீதம் அளவுக்கு பக்கவாதம் வராமல் தடுப் பதில் வாழைப் பழம் உதவுகிறது.
வாழைப் பழத்தில், "ஷுகர்' அளவு குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த
அழுத் தத்தை அறவே தடுத்து விடும். வாழைப்பழத் தில், "வைட்டமின் பி6' உள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப்
பழத்தில், "ஆன்டாசிட்' ரசாயனம் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு
ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது. வாழைப்பழத்தில்,
இரும்புச்சத்து உள் ளது. ரத்தத்தில் ஹீமோக் ளோபின் சத்து இல்லாததால் தான் ரத்த
சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ள வர்கள், வாழைப்பழம் சாப் பிட்டு வந்தால்,
ரத்த சோகை போயே போச்சு.

மூளை சுறுசுறுப்பு
----------------------------
காலை உணவிலேயே ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, மூளைக்கு சுறு சுறுப்பை தரும்.
மதிய உணவு, மாலை வேளை நொறுக்குத் தீனி, இரவு சாப்பாடு ஆகிய வற்றுடன் வாழைப்பழம்
சாப்பிட்டால் மூளைக்கு பலம் அதிகரிக்கும்..
கனிந்தும் கனியாமல் அரை குறையாக இருக்கும் வாழைப் பழத்தை பாலில் வேக வைத்து
கூழ் போல் ஆக்கி, அதனுடன் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக
நறுக்கி போடவும். இவற்றுடன் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும்
காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம்
ஆகியவை நீங்கும். மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

வறட்டு இருமல் போக்கும்
-------------------------------------------
உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல் லது உடலில் எரிச்சல்
என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து,
காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும்.. தீராத வறட்டு இருமல்
போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும்.

உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது
வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள் சீக்கிரமே பழுத்து சீழ்
வெளியாகி குணமாகும். கரப்பான் நோய்க்கு வாழைப்பழத் தோலை நெருப்பினில் எரித்து
சாம்பலாக்கி, அதை கடுகு எண்ணை கலந்து கரப்பான் மீது பூசினால் குணமாகும்.

வயிற்றுப்புண், மூலம்நோய் கட்டுப்படும்
------------------------------------------------------------------
பல பழங் களில், அமிலச் சத்து இருக்கிறது. அதனால், வயிற்றுப் புண் (அல்சர்)
உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஆனால், வாழைப் பழத்தில் அமிலச் சத்து இல்லவே இல்லை.
அத னால், தாராளமாக சாப்பிடலாம். வயிற்றில் வாழைப் பழம் போனதும், வயிற் றில்
உள்ள அமிலச் சத்தை குறைக் கிறது. அதனால், "அல்சர்' உள்ள வர்களுக்கு கை
கொடுக்கிறது வாழைப்பழம்.
மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய சிக்கல்களால் சிக்கித் தவிப்போர், நன்றாக
பழுத்த வாழைப் பழத்தை பாலில் போட்டு வேகவைத்து, மசித்து, காலை, மாலை சாப்பிட்டு
வந்தால், மேற்கண்ட பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். திராட்சை சாறு, தேன்,
வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் கட்டுப்படும்.

வாழை பிஞ்சுகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை சாப்பிட்டு
வந்தால் குடல்புண், இரைப்பை புண் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள்
நீங் கும். அதேபோல், வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து, அதனுடன் 2 பேரீச்சம் பழத்தை
சேர்த்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் ஆறிவிடும்.

எப்பொழுது சாப்பிடலாம் ?
----------------------------------------------
இப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மயக்கமும்,
மூச்சு திணறலும், உண்டாகும். அதனால் உணவு அருந்திய பிறகே அளவாக சாப்பிட
வேண்டும். உணவு சாப்பிட பிடிக்காது போய்விடும்.
சிலர் இரவில் படுக்கும் முன்பு பாலும் பழமும் சாப்பிடுவதை வழக்கமாக
கொண்டுள்ளனர். அதில் முதலில் பழத்தையும், பின்பு பாலையும் அருந்து கின்றனர்.
அது முறையல்ல. முதலில் பாலையும், பின்பு பழத்தையும் சாப்பிடுவதுதான் சரியானது.
உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.

100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
-----------------------------------------------------------------------
நீர் 61.4%, மாவுச்சத்து 36.4.%, சுண்ணாம்புச்சத்து 0.01%, மை.கிரிபோபிளேவின்
0.08 மி.கி., வைட்டமின் 'சி' 7 மி.கி., புரோட்டின் 1.3%, கொழுப்பு 0..2%,
இரும்பு 0.04%, தயமின் 0.05 மி.கி., நியாசின் 0.5 மி.கி

================================================================

மன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்..!
------------------------------------------------------------------
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் சாமான்ய மக்களும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள், வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.

ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது
------------------------------------------------------------------------------------------
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது.. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.

மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.

நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது
-----------------------------------------------------------------------------------
சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.. இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்..

பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது..

மன இறுக்கத்தை போக்குகிறது, மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும்
-------------------------------------------------------------------------------------------------
பெரும்பாலான நோய்களுக்கு மூலக்காரணமாக திகழ்வது.. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மலக்குடலை சுத்தம் செய்யும் காரணியாக திகழ்கின்றன. இதில் உள்ள நார்சத்துகளை கருத்தில் கொண்டுதான் உணவு உட்கொண்டதும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டோர் வாழைப்பழம் உட்கொண்ட பிறகு இறுக்க நிலையில் இருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் டிரைப்டோபன் என்ற வகை புரோட்டின் சத்து உள்ளது, இது உடலுக்குள் சென்றதும் செரோடோனின் ஆக மாறுகிறது. மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது.

ரத்தகொதிப்பை சீராக்குகிறது.
---------------------------------------------
மிகுதியான அளவு கொண்ட ரத்தக் கொதிப்பு பக்கவாதம் உள்ளிட்ட மோசமான பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் உப்பு அளவு குறைந்த தன்மை ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தி சீரான ரத்த ஒட்டத்திற்கு வழிவகுக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து காலையில் வெறும் வயிற்றில் சிலருக்கு பலவீனத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தும். வாழைப்பழத் துண்டுகள் சிலவற்றை உட்கொள்வதன் மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம்.

தோலுக்கு அருமருந்து, தலைசுற்றல் அகலும்
-------------------------------------------------------------------------
கொசு மற்றும் சிறிய பூச்சிகள் கடி காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்பட்டு நமைச்சலை உண்டாக்கும். இந்த பகுதிகளில் மருந்துகளை பூசுவதற்கு பதில் வாழைப்பழத் தோலின் உட்புறத்தோலை தேய்த்துப் பாருங்கள். வீக்கம் மற்றும் நமைச்சலுக்கு இது அருமருந்து.

வாழைப்பழம் தேன் மற்றும் பால் கலந்த ஜீஸ் தலைசுற்றலை உடனே விரட்டும் வயிற்றை இதப்படுத்தும் குணம் வாழைப்பழத்திற்கு உண்டு மேலும் தேனுடன் இணைந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. பாலுடன் சேர்ந்து உடலுக்கு போஷாக்கும் கொடுக்கிறது.

உடல் சூட்டை குறைக்கும், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
-----------------------------------------------------------------------------------------
வயிற்றுப்புண்ணுக்கு(அல்சர்) கொண்டோர் காரமாக எண்ணெய்யில் பொரித்த பண்டங்களோ சாப்பிடக்கூடாது. இத்தகையோர்க்கு மென்மையான சுவைமிகுந்த வாழைப்பழம் ஒர் அற்புதமான உணவுப்பொருளாகும். நெஞ்செரிச்சலுக்கு காரணமான அமிலத்தன்மையும் இது கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகையாகும். உடல் சூட்டை குறைப்பதோடு மன இருக்கத்தையும் போக்குகிறது. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள், பருவகால மாற்றங்களால் ஏற்படும் நோய் தொற்றுகள் உடலை அண்டாமல் பாதுகாக்கின்றன.

நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது.
-----------------------------------------------------------
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது. இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றிவிடும்.

================================================================
ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ…

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

================================================================
வாழைப்பூ
-----------------

*வாழைப்பூ சற்று துவர்ப்பாயிருக்கும். அதுவே உடலுக்கு ஏற்றது. துவர்ப்பு பிடிக்காதவர்கள் வாழைப்பூவை பொடியாக அரிந்து சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவும் நீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் துவர்ப்பு நீராக இறங்கிவிடும்.

*வாழைப்பூவை நறுக்கிச் சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ரத்த மூலம் போக்கும். கை,கால் எரிச்சல் நீங்கும்.

*வாழைப்பூ கறி பித்தம், வாதம், உடலில் ரத்தக் குறைவு, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது.

*வாழைப்பூவிலுள்ள காளானையும், கண்ணாடித் தோலையும் அகற்றிவிட்டு அரிந்து பருப்புச் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது வயிற்றுக் கோளாறைப் போக்கும்.

*அரைத்த உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்புடன் கலந்து வடையாகச் செய்து சாப்பிட்டால் சுவைக்கு சுவை, உடலுக்கு ஏற்றது.

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ள வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு
------------------------------------------
சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்
-----------------------
மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு
---------------------
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க
-------------------------------------------
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
------------------------
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்
------------------------------
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க
----------------------------------------
கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
------------------------
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு
-----------------------------
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க
-------------------------------------
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
===============================================================
வாழைப்பூ கஷாயம்
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
நல்ல மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு
எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

 ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்