Posts

Showing posts from April, 2018

#கள்ளர் #அழகர் #மதுரை

Image
கள்ளரே கடவுளாக ,கள்ளரின கடவுளாக, கள்ளர் அழகர் கோவிலில் கள்ளர்களுக்கு பரிவட்டம் கட்டையில் பதினெட்டாம் படி கருப்பர் கோவிலில்  பதினெட்டாம்படியில் நின்று உறுமொழி சரியாக செயல்படுவேன் என கள்ளர் அழகர் பதினெட்டாம் படி கருப்பருக்கு  உறுதிமொழி கொடுக்க வேண்டும் ! பரிவட்டம் கட்டுபவர் பொய் கூறினால் சரியாக மூன்றாம் நாள் இறந்துவிடுவார்! இதே நடைமுறையில் வேறுஒருவர் பொறுப்பேற்க வேண்டும்! கள்ளர்களின் தலைமை கோவிலான கள்ளர் அழகர் கோவிலில் அழகர் விஷ்ணுவாக பாளிக்கிறார் இவர் மீனாட்சியின் சகோதரர் ! மீன்களை போன்ற அழகிய கண்களை உடைய மீனாட்சி பாண்டிய மன்னனின் அழகிய மகள் சிவனை மணப்பதால் இங்கு பிராமணத்துவம்,திராவிடமாக மாறுகிறது! கள்ளர் ஆற்றில் இறங்குவதை அக்காலத்திலேயே சுமார் 3 லட்சம் பக்தர்கள் கண்டு களித்துள்ளனர் அம்மூன்று லட்சம் பேர்களில் கள்ளர்களே அதிகம்! கள்ளர் அழகரை தூக்கிசெல்ல,வடம் பிடிப்பது முழுக்க முழுக்க கள்ளர்களே அதன்பின்பே மற்ற சாதியினர் இணைகின்றனர்! கள்ளர்கள் தங்கள் தெய்வத்திற்கு இரத்த காணிக்கையாக கிடாய் வெட்டுதல், கோழி அறுத்தல் போன்ற பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் ! பிராமணத்துவத்த

சிதம்பர_ரகசியம்

Image
#சிதம்பர_ரகசியம் பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!! சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறி

மதுரை பூலோக ஸ்வர்கம்!

Image
'ஹர ஹர மஹாதேவா' என்ற கோஷம் விண்ணை அதிரச் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுக்க அசைந்து ஆடிவரும் வரும் திருத்தேர்! மதுரை பூலோக ஸ்வர்கம்!

கள்ளழகர்

Image
தெரியுமா! 1650க்கு முன்பு வரை கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை. #சோழவந்தான் அருகிலுள்ள #தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளி வந்தார். 1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ, வைணவத்தை ஒன்றினைக்கும் விதமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன் அழகர் ஆற்றில் இறங்கும்  விழாவையும் இனைத்து மதுரைக்கு மாற்றினார். அதற்கு முன்பு வரை கள்ளழகர், அழகர் மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர், சோழவந்தான், #திருவேடகம் வழியாக தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார். இவ்விழா மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு கள்ளழகர் தல்லாகுளம் வழியாக வரத் தொடங்கினார். இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால் உண்மையில் மண்டூக மகரிசிக்கும், நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்

மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்

Image
மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன் =========================================== காவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது எனவும், காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனவும், பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்றும் மணிமேகலை கூறியுள்ளது. அந்த காவிரிக்குக் கரை கட்டி அதில் ஓர் அணையை கட்டி மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாம் 'சோறுடையது சோழ வளநாடு' என புகழ செய்த மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன். சோழநாட்டில் உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, புகார், வல்லம், பிடவூர், வெண்ணி போன்று பலபேரூர்கள் இருந்திருந்தாலும் சோழ நாட்டிற்குத்தலைநகராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறையூரும், பின்னர்ப் புகாருமே ஆகும். அந்த சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். சான்றோர்களால் பட்டினப்பாலை பாடப்பெற்றவன் மாமன்னன் இரண்டாம் கரிகால

கள்ளழகர்

Image
புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர். சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சித்திரைத் திருவிழா

Image
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்தத் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்

Image
இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல் கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர், 'பூமகளும் பொருளும் என, நீ என் மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா, தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86 வாழ்த்து ஒலியும், மலர் மாரியும் அந்தணர் ஆசி, அருங் கல மின்னார் தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர் வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87 வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ, ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம், தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால், மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88 இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல் வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள், மை அறு மந்திரம் மும்மை வழங்கா, நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே, தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89 இடம் படு தோளவனோடு, இயை வேள்வி தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின், மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின், உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90 அம்மி மிதித்து, அருந்ததி காணுதல் வலம்கொடு தீயை வணங்கினர், வந்து, பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி, இலங்கு ஒளி அம்மி மிதித்து

சோலைமலைக் கள்ளன்

Image
சோலைமலைக் கள்ளன் (மாயோன் - கள்ளழகர் ). ========== கள்ளர் நாட்டிலுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார். கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி, (கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்) சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) என அணிந்து மதுரை நோக்கி வருகிறார். (கள்ளழகர் கோயில் பார்ப்பனர்கள் கறுப்பானவர்களாக இருக்க என்ன காரணமோ) . மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்