Skip to main content

Posts

Showing posts from February, 2018

பட்டினப்பாலை

பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி

சம்ஸ்கிருதம் யாருடைய மொழி? ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம். அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட அதை இப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது

சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள்

சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள். (தமிழர் வரலாறு - History of Tamil ) புறநானூறு பாடல்களில் இருந்து பெறப்பட்ட சோழமன்னர்களின் பெயர்கள். தோராயமாக அறியபட்ட அவர்களின் ஆட்சி காலங்கள். ஏறி ஒலியன் வேந்தி 3023 B.C.E மாந்துவாழி C. 2980 B.C.E எல் மெய் நன்னன் C. 2945 B.C.E கீழை கிஞ்சுவன் C. 2995 B.C.E வாழிசை நன்னன் C. 2865 B.C.E. மெய் கியகுசி ஏற்று C. 2820 B.C.E. ஆய் குழி அகுசி ஏற்று C. 2810 B.C.E. திழகன் மாந்தி C. 2800 B.C.E. மாந்தி வேலன் C. 2770 B.C.E. ஆய் அடும்பன் C. 2725 B.C.E. ஆய் நெடுஞ செட் சோழ தகையன் C. 2710 B.C.E. எல் மெய் ஆக்குவன் (அ) கீழ் நெடு மன்னன் C. 2680 B.C.E. முடிகோ மெய் காளையன் தகையன் C. 2650 B.C.E. இளங்கோ கீழ் காளையன் தகையன் (எ) இலங்கீழ் நன்னன் C. 2645 B.C.E - இவருடைய சகோதரர் ஆய் கீழ் நன்னனால் கடம்பர் வழி தோற்றம். காளையன் குடின்ஞான் C. 2630 B.C.E. நெடுங்காளையான் தகயன் C. 2615 B.C.E. வேங்கை நெடுவேல் வரையன் C.2614 B.C.E. வேட்கால் குடின்ஞான் C. 2600 B.C.E. மெய்வேல் வரையன் C. 2590 B.C.E. சிபி வேந்தி C. 2580 B.C.E. பருநோஞ்சி சாமழிங்கன் C. 2535 B.C.E. செ

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் #வாய்ப்பு உள்ளவர் படியுங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இரு

திருப்புறம்பயம் போர்

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் ------ பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் திருப்புறம்பியத்தில் நடந்த போரில் சுமார் மூன்றரை லட்சம் வீரர்கள் இறந்தனர்.------ விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்ற

ஆதித்த சோழன்

ஆதித்த சோழன் (கி.பி 871 - 907), பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது. மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. கல்வெட்டு ஆதாரங்கள் பலம் மிக்க பல்லவ மன்னன் அபராசித வர்மனை தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ

முதலாம் ஆதித்தசோழனைப் பற்றிய கல்வெட்டு.

முதலாம் ஆதித்தசோழனைப்(கி.பி 871 முதல் கி .பி 907 வரை) பற்றிய கல்வெட்டு.கும்பகோணம் அருகில் பட்டீஸ்வரத்திலிருந்து 1கி.மீ தூரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது..ஆதித்த சோழன் ராணிகளுள் ஒருவரானதொண்டை மண்டலத்தைச்சார்ந்த காஞ்சிபுரம் குதிரைச்சேரி அம்மாக்கனார் மகள்"அழகி கட்டடிகள்" திருசோமேஸ்வரம் கோயிலுக்கு 20 கழஞ்சு பொற்காசுகள் அளித்ததாகவும் தொண்டை மண்டலத்திலிருந்து இங்கு வந்து கோயில்திருப்பணிகள் ஆற்றிய தனது தாயாரின் நினைவாக தினம் ஒரு ஆழாக்கு நெய் ஊற்றி விளக்கேற்ற ஆத்ரேயன் சாந்தன் என்பவனை நியமித்ததாகவும் இந்த கல்வெட்டு கூறுகிறது.மேலும் ஆதித்த சோழனுக்கு தென்னவன் மாதேவி,திரு நாரண மாதேவி மற்றும் செம்பியன் தேவி என்கிற குலமாக்க நம்பிராட்டியார் என்ற ராணிகளும் இருந்தனர் .அவருடைய ஆட்சியில் சோழ நாடு பரந்து விரிந்திருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது கல்வெட்டில் அவருடைய 19 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் திருவையாறு பஞ்ச நதீஸ்வரர் கோயிலுக்கு விளக்கேற்ற 30 கழஞ்சு பொற்காசுகள் அளித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.------The Hindu,16,april,2010

சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி

சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி சோழராட்சியில் நிர்வாக முறைகளை கோயில் நிருவாகம், ஊரவை நிருவாகம், அரசு நிருவாகம் என் மூன்றாகப் படுத்தினர். கோயிலை வழிப்பாட்டிற்குரிய தலமாக மட்டும் கருதாமல், ஊரவை நிருவாகத்தின் செயலகமாகவும் கருதினர். கோயிலுள் இருக்கும் மண்டபத்தை திருலோக்கம் எனவும், கோயிலுள் இருக்கும் சபையை மன்று அல்லது அம்பலம் என்றும், அரண்மனையில் உள்ள இராசசபையை உள்ளாலை என்றும், கோயிலிலமைந்த மருத்துவ மனையை ஆதுலர் சாலை என்றும் அழைத்தனர். கோயிலில் ஆடுபவர்கள், மற்றும் பாடுபவர்கள் - பதியிலார் பூசை வழி படைக்கும் பண்டங்கள் - அமுது படி உணவு - அடிசில் அரசசபையில் அடங்கிய பெருந்தரத்து அதிகாரிகள் - மன்றாடிகள் சேனைத் தலைமை ஏற்று நடதிய அதிகாரிகள் - படைமுதலி காலாட்படையினர் - கைகோளப் பெரும் படை அமைச்சர்களுக்கு ஒத்த அதிகாரம் படைத்தவர்கள் - உடங்கூட்டம் மன்னர்களுக்கு நெருங்கிய தொண்டாற்றிய ஆடவர் மற்றும் பெண்டிர் - அணுக்கமார் மற்றும் அணுக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

ரகுநாத கிழவன் சேதுபதி

ரகுநாத கிழவன் சேதுபதி மன்னர் திருமலை சேதுபதியை அடுத்துச் சேதுநாட்டின் மன்னர் களான இராஜ சூரிய தேவரும், அதான ரெகுநாத சேதுபதியும் சிறிது காலத்திற்குள் காலமாகி விட்டதால் இந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கிழவன் என்பவர் கி.பி. 1678ல் ரகுநாத கிழவன் சேதுபதி என முடிசூட்டப் பெற்றார். திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்றே இவரது ஆட்சிக்காலமும் நீடித்தாலும் அவரது சாதனைகளை விஞ்சிச் சாதனைகள் படைக்க இயலவில்லை காரணம் இவருக்கு உட்பகை மிகுதியாகத் தோன்றி நாட்டின் பல பகுதிகளிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின. என்றாலும் அவை அனைத்தையும் தமது அறிவார்ந்த ஆற்றலினாலும், போர்த் திறமையாலும் நசுக்கி அழித்தார். இவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தவர் சேதுபதி அரச குடும்பத்தினரும் செருவத்தி பாளையத்தின் தலைவருமான திரையத் தேவர் ஆவார். கள்ளர் சீமை என்று வழங்கிய சேது நாட்டின் வட பகுதியைத் திருமலை சேதுபதி மன்னர் தமது நாட்டின் ஒரு பகுதியாக அமைத்தார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக

புதுக்கோட்டை தொண்டைமான்கள் எவ்வாறு மன்னரானார்கள்?

புதுக்கோட்டை தொண்டைமான்கள் எவ்வாறு மன்னரானார்கள்? -------------------------------------------------------------------------------------------------------------------------- புதுக்கோட்டை மன்னர்கள் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், அவர்கள் மன்னராக உயர்ந்ததை பற்றி குறிப்பிடும்போது,ராம்நாடு மன்னர் கிழவன் சேதுபதி , பல்லவராயரிடம் இருந்த பகுதிகளை பறித்து தனது மச்சானாகிய ரகுநாதராய தொண்டைமானிடம் அளித்ததாக மேற்போக்காக எழுதியுள்ளனர். சில ஆசிரியர்கள் தொண்டைமான்கள் செய்த இராணுவ உதவி மற்றும் திருமண பந்தத்தின் விளைவாக புதுக்கோட்டை பகுதிகள் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டதாக குறித்துள்ளனர். உண்மையில் தொண்டைமான்கள் எப்போது ஆட்சி அமைத்தனர்? எதனால் ஆட்சியை பிடித்தனர்? என்ன போர் உதவிகள் செய்தனர்? பல்லவராயர்கள் முழு புதுக்கோட்டையையும் ஆண்டனரா? என பல கேள்விகளுக்கு விடை தேடியதன் விளைவாக கிடைத்த தகவல்களின் தொகுப்பை காண்போம். * கிபி 12 ஆம் நூற்றாண்டில் வெங்கடாசல பல்லவராயர் என்பவருடன் தொண்டைமண்டலத்தில் இருந்து அம்புநாட்டில் தொண்டைமான்கள் குடியேறினர்.( General history of pudukkottai state R.aiyar 1916 page 1

முதல் சுதந்திரம் நினைவிருக்கிறது

முதல் சுதந்திரம் நினைவிருக்கிறது இந்தியாவில் இருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டனர் 216 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியரால் 73 நாட்டினர் பினாங்கிற்கு அனுப்பப்பட்டனர் பிப்ரவரி 11, 1802 அன்று  வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த  நாளாக  குறிக்கப்பட்டது வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி அது. சுதந்திர இயக்கத்தில் அது இன்னும் எரிச்சலூட்டியது தெஹ்ரானில் பலர் நினைவுகள் தமிழ்நாட்டில், அவர்கள் 73 பேரை எப்படி நினைவுகூர்கிறார்கள் சுதந்திர போராளிகள் -மற்றும் இளவரசர் (மன்னர்) தீவு, பினாங்கு, பகுதிக்கு  நாடு கடத்தபட்டனர் . பொறுப்பான கிளர்ச்சி போராளிகள் வீரபண்டி கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் - இருந்தனர் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியாவால் இவ்இருவரையும் தூக்கிலிடப்பட்டது நிறுவனம் "பிப்ரவரி, பிப்ரவரி, 1802 இல் எதிரி இந்த கண்டனத்தை அனுப்பினார் துட்டுக்குடி (இன்றைய தினம்) தூத்துக்குடி) மற்றும் அவற்றை வைத்தார் கேல் இராணுவ காவலில் ஜேம்ஸ் வெல்ஷ் "என சரித்திராசிரியர் எழுதுகிறார் ராஜ்யன் தனது புத்தகத்தில், தென் சுதந்திரம் இந்திய கலகம்-முதல் போர் சிவகங்கையின

இரகுநாதஇராசாளியார்

கோபாலசாமி இரகுநாதஇராசாளியார். தொல்காப்பியருக்குச் சிலை நிருவி தமிழ் வளர்த்த                             பண்டிதர் இராசளியார். அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம்நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின்முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார். இராசாளியார்.அவர்களின் வாழ்க்கை இற்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும்வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் அமைந்துள்ளது. தன் மாமன் வேலுவாண்டையாரின் திருமகள் பெரியநாயகியம்மையைவாழ்க்கைத் துணையாக ஏற்று வையகம் போற்ற வாழ்ந்தார். இளம் வயதில் தந்தையைஇழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையைஏற்றுக்கொண்டார். தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின்பாலும் மிகவும்ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்றுதம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார். தமிழார்வம் காரணமாக தன்செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம்நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார்.இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களை

அப்பர் திருநாவுக்கரசு நாயனார்

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். திருநாவுக்கரசருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். தற்போதைய தென் ஆர்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலன

சிவராத்திரி

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது...

ஆத்திமரம்

மறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் (அத்திமரம்) காணப்படுவது ஏன்? தமிழ் சாதியரிலே "செம்பியன்" என்ற சோழரின் பெயரை நாட்டு பெயராக சூடும் இனம் எது   ஏன்? திருப்புல்லானி ஸ்ரீ ராமனை செம்பிநாட்டான் என்றும் சேது நாட்டான் என கூறும் வழக்கு ஏன்? சேதுபதி என்ற சேதுகாவலன் செம்பிவளநாடன்,அநபாயன்,ரவிகுலசேகரன்,அகளங்கன்,மனுநீதிமன்னன், பரராஜகேசரி என அழைக்கபடுவது ஏன்? செம்பி நாட்டு மறவரின் தொன்மை கூறும் சோழரின் "அத்திமரம்".என்று  வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர். சேர, சோழ, பாண்டியருக்கு, வில், புலி, மீன் சின்னங்கள் இருந்தது போல, போந்தை என்ற பனம்பூ; ஆர் என்ற ஆத்திப்பூ, வேப்பம்பூ ஆகியவையும், மூவேந்தர் அடையாள பூக்களாக விளங்கின. இவற்றில், ஆத்தி மரங்கள் மட்டும், தற்போது குறைந்து விட்டன. ஆனாலும், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே உள்ள மேலக்கன்னிசேரி, நிறைகுளத்து அய்யனார் கோவில், ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை, வீரமாகாளி கோவில் உள்ளிட்ட சில கிராம கோவில்களில், ஆத்தி மரங்கள் கோவில் மரங்களாக, பல நுாற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு

தேரும் போரும்

திரு.பி.ஆர்.சந்திரன் அவர்கள் எழுதியுள்ள தேரும் போரும் என்ற நூலில் பக்கம் 454ல் வரிகள் 6 முதல் 20 வரை எழுதப்பட்டுள்ள வரலாறு வருமாறு.....        "முதலாம் மழவராயனின் தங்கை செம்பியன் மாதேவி கண்டராதித்த சோழனின்(கி.பி.955) மனைவி(பட்டத்தரசி) ஆவார். கண்டதேவி முதலாம் பல்லவராயனும் சோழ மன்னன் இராஜாதி ராஜன் மகளைத் திருமணம் செய் திருந்தார். இந்த இரு மன்னர்களும்(பல்லவராயனும் மழவராயனும்) இராட்டி ரக்கூடர்கள் சாளுக்கியர்கள் ஆகிய இருவரும்  சோழநாட்டிற்கு எதிராக தொடுத்த போர்களை எதிர்த்து போரிட்டு அவ்விரு பகை அரசர்களையும் துரத்தி யவர்கள்.        வடக்கே கொப்பம் என்ற இடத்தில் நடந்த போரில்  இராஜாதிராஜனும் பெருமான் நம்பி பல்லவராயனும் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தனர். (கிபி.1170). இதனால் மனம் தளராத போர்த்தளபதி மழவராயன், வீரமரணம் அடைந்த சோழ வேந்தன் இராஜாதிராஜனின்  உடன் பிறந்த தம்பி இரண்டாம் இராஜேந்திரனுக்கு அப்போர்க்களத்திலேயே சோழ வேந்தனாக முடிசூட்டி சோழர் படைவீரர்களை உற்சாகப்படுத்தி ..சோழர் போர்ப்படைக்கு தலைமை யேற்று, சாளுக்கியர்களை புறமுதுகிட்டு போர்க்களத்தைவிட்டே ஓடச்செய்து மழவராயன்

உருத்திரங் கண்ணனார்

இவ்வாறு பூம்புகாராகிய பட்டினத்தைச் சிறப்பித்துப்பாடிய உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவனுடைய வீரத்தையும் பிற இயல்புகளையும் விரிவாகப் பாடினார். அவன் பகைவருடைய சிறையில் இருந்ததையும், அதனினின்றும் விடுதலை பெற்று அரசுரிமையைப் பெற்றதையும், பல போரில் வெற்றி பெற்றதையும், ஒளியர், அரு வாளர், வடநாட்டார், குடநாட்டார், பாண்டியன், பொதுவர், இருங்கோவேள் ஆகியவர்களைப் புறங் கண்ட சிறப்பையும் பாடினார்.     காட்டை அழித்து நாடாக்கிய நலத்தைப் புகழ்ந்தார். குளங்களை வெட்டி வளம் பெருக்கினான் கரிகாலன். உறையூரை விரிவாக்கி அங்கே அரண் மனையைக் கட்டிப் பல குடிமக்களைக் கொண்டு வந்து நாட்டினான். மதிலைக் கட்டி அங்கங்கே அம்புகளை வைக்கும் மறைவிடங்களை அமைத்தான். இவ்வாறெல்லாம் அவன் நகர நிர்மாணம் செய்ததையும் உருத்திரங் கண்ணனார் அழகாகப் பாடினார்.

கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம்

கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம்-----ப‌ட‌கிலே உப்பைக் கொண்டு வ‌ந்து நெல்லுக்கு அதை விற்று அந்த‌ப் ப‌ட‌கில் நெல்லை நிர‌ப்பிக் கொள்கிறார்க‌ள் ப‌ர‌த‌வ‌ர்க‌ள். அந்த‌ப் ப‌ட‌குக‌ளைக் க‌ழிக‌ளின் ப‌க்க‌த்தில் குதிரைக‌ளைப் போல‌க் க‌ட்டியிருக்கிறார்க‌ள். ந‌க‌ர‌த்துக்குப் புற‌ம்பே தோப்புக்க‌ளும் பூஞ்சோலைக‌ளும் செறிந்திருக்கின்ற‌ன‌. வ‌லிமையைப் பெற்ற‌ க‌ரைக‌ளை யுடைய‌ ந‌ன்னீர்ப் பொய்கைக‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌ப் பொய்கைக‌ளில் ப‌ல‌ நிற‌ம் பொருந்திய‌ ம‌ல‌ர்க‌ள் ம‌ல‌ர்கின்ற‌ன‌. அவ‌ற்றுள் மிக‌ப் பெரிய‌ நீர்நிலைக‌ள் இர‌ண்டு உண்டு. அவ‌ற்றை இரு காம‌த் திணைஏரி என்று சொல்லுவார்க‌ள்.     இந்த ஏரிகளுக்கு அப்பால் பலமான கதவுகளையுடைய மதில் ஓங்கி நிற்கிறது. அந்தக் கதவுகளில் சோழ அரசனுடைய புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறார்கள்.     நகரத்துக்குள்ளே புகுந்தால் முதலிலே கண்ணில் படுவது அன்னதானம் செய்யும் அறச்சாலை. அங்கே சோற்றை வடித்த கஞ்சி ஆற்றைப்போல ஓடுகிறது. அந்தக் கஞ்சியைக் குடிக்க வரும் காளை மாடுகள் தம்முள்ளே சண்டை போடுகின்றன. அதனால் கஞ்சி பாயும் இடம் சேறாகிவிடுகிறது. பிறகு அங்கே வண்டிகள் செல்வதனால் சேற

கரிகாலன் காலத்தில் சோழநாடு

கரிகாலன் காலத்தில் சோழநாடு.-----சுக்கிரன் வடக்கே இருந்தால் மழை பொழியும் என்று சொல்வார்கள். அது தெற்கே சென்றால் மழையின்றிப் பஞ்சம் உண்டாகும். அவ்வாறு பஞ்சம் உண்டாகி, வானம்பாடி வானத்தை நோக்கி மழைத்துளிக்காக வாய் திறந்து பாடியும் நீர் கிடைக்காமல் அது வாடும்படி பஞ்சம் உண்டானாலும் பொய்ய்யாமல் குடகு மலையிலிருந்து வருகின்ற காவிரி தன் நீரைப் பரப்பிப் பொன்னைக் கொழிப்பது சோழநாடு. அந்த நாட்டில் என்றும் விளைவு அறாத வயல்கள் பரந்திருக்கின்றன. சிறிய சிறிய ஊர்கள் பல,நாடு முழுவதும் வளப்பத்தோடு விளங்குகின்றன. கரும்பும் நெல்லும்,தென்னையும் கமுகும், மஞ்சளும் சேம்பும், மாவும் பனையும், இஞ்சியும் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.     அங்கங்கே மகளிர் நெல்லை உலர்த்துகிறார்கள். அந்த நெல்லைத் தின்ன வரும் கோழியை ஓட்ட அருகிலே கல் இல்லை. வேறு யாதும் இல்லாமையால் தம்முடைய காதில் உள்ள குழையை வாங்கிக் கோழியின்மேல் எறிந்து ஓட்டுகிறார்கள். அந்தக் குழைகள்,சிறு குழந்தைகள் விடும் விளையாட்டு வண்டிகளைத் தடுக்கின்றன.     ஒன்றுக்கு ஒன்று அருகாகப் பல ஊர்கள் நிறைந்தது சோழ நாடு. பகைவர்களால் உண்டாகும் அச்சமே அவ்வூர்களில் இல்லை

பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள்.

கலித்தொகை நூலில் மறவன் வீரத்தை பற்றி கூறுகிறது பாருங்கள் அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி புறங்கண்டல் அல்லால் இனைபடை தானை அரசரோடு உறினும் கனைதொடை நாணும், கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை மருப்பின் திருந்து மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து ஓடா மறவர் பொருள் கொண்டு புன்செயின் அல்லதை அன்போடு அருள் புறம் மாறிய ஆரிடை அத்தம்.--"கடுங்கோ சேரமான்".                          (கலித்தொகை) பொருள்: சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள்.

வீர மறவர்கள்

வீர மறவர்கள் """""""""""""""""""'"'''"""""""""""""""""""""""""""" இவர்கள் போர்களில் காட்டிய துணிவும் தீரமும் ஆங்கிலேயர் உள்ளத்தை கவர்ந்தன என்று கூரிய லுர்மின் விளக்கம் வருமாறு           திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகேயுள்ள மாவட்டங்களின்  உள்ள மறவர்கள் உயரமும்,உடற்கட்டும் நல்ல முகத்தோற்றமும் உடையவர்கள்.ஈட்டி வேல் அம்புகள் மற்றும் பழங்காலத்துத் துப்பாக்கி முதலியவைகள் அவர்களுடைய ஆயுதங்கள்.இந்த ஆயுதங்கள் இல்லாமல் ஒவ்வொரு மறவனும் ஒரு கத்தியும் கேடயமும் எப்போழுதும் வைத்திருப்பான்,போரின் போது வெவ்வேறு ஆயுதங்களை தரித்த மறவர்கள் தனித்தனியே நின்று போர் செய்வார்கள்,                        மறவர்களில் ஈட்டி வீரர்களே மிக்க வீரம் வாய்ந்தவர்கள் ,எல்லா தாக்குதல்களையும் அவர்களே நடத்துவார்கள்,                             ஈ

சோழ வளநாடு - கள்ளர் நாடு

சோழ வளநாடு - கள்ளர் நாடு ============================== வளநாடுகளெல்லாம் சோழ மன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன. சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. (வளவர் – சோழர் (“சோழ வளநாடு சோறுடைத்து”); செழியர் - பாண்டியர்; பெரும் முக்கோக்கள் - முடிமன்னர்களாகிய மூவேந்தர்கள் ,) அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு “மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்” என வருவது சான்றாகும். நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடுமுதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் , கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய்