முதலாம் ஆதித்தசோழனைப் பற்றிய கல்வெட்டு.

முதலாம் ஆதித்தசோழனைப்(கி.பி 871 முதல் கி .பி 907 வரை) பற்றிய கல்வெட்டு.கும்பகோணம் அருகில் பட்டீஸ்வரத்திலிருந்து 1கி.மீ தூரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது..ஆதித்த சோழன் ராணிகளுள் ஒருவரானதொண்டை மண்டலத்தைச்சார்ந்த காஞ்சிபுரம் குதிரைச்சேரி அம்மாக்கனார் மகள்"அழகி கட்டடிகள்" திருசோமேஸ்வரம் கோயிலுக்கு 20 கழஞ்சு பொற்காசுகள் அளித்ததாகவும் தொண்டை மண்டலத்திலிருந்து இங்கு வந்து கோயில்திருப்பணிகள் ஆற்றிய தனது தாயாரின் நினைவாக தினம் ஒரு ஆழாக்கு நெய் ஊற்றி விளக்கேற்ற ஆத்ரேயன் சாந்தன் என்பவனை நியமித்ததாகவும் இந்த கல்வெட்டு கூறுகிறது.மேலும் ஆதித்த சோழனுக்கு தென்னவன் மாதேவி,திரு நாரண மாதேவி மற்றும் செம்பியன் தேவி என்கிற குலமாக்க நம்பிராட்டியார் என்ற ராணிகளும் இருந்தனர் .அவருடைய ஆட்சியில் சோழ நாடு பரந்து விரிந்திருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது கல்வெட்டில் அவருடைய 19 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் திருவையாறு பஞ்ச நதீஸ்வரர் கோயிலுக்கு விளக்கேற்ற 30 கழஞ்சு பொற்காசுகள் அளித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.------The Hindu,16,april,2010

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்