கரிகாலன் காலத்தில் சோழநாடு
கரிகாலன் காலத்தில் சோழநாடு.-----சுக்கிரன் வடக்கே இருந்தால் மழை பொழியும் என்று சொல்வார்கள். அது தெற்கே சென்றால் மழையின்றிப் பஞ்சம் உண்டாகும். அவ்வாறு பஞ்சம் உண்டாகி, வானம்பாடி வானத்தை நோக்கி மழைத்துளிக்காக வாய் திறந்து பாடியும் நீர் கிடைக்காமல் அது வாடும்படி பஞ்சம் உண்டானாலும் பொய்ய்யாமல் குடகு மலையிலிருந்து வருகின்ற காவிரி தன் நீரைப் பரப்பிப் பொன்னைக் கொழிப்பது சோழநாடு. அந்த நாட்டில் என்றும் விளைவு அறாத வயல்கள் பரந்திருக்கின்றன. சிறிய சிறிய ஊர்கள் பல,நாடு முழுவதும் வளப்பத்தோடு விளங்குகின்றன. கரும்பும் நெல்லும்,தென்னையும் கமுகும், மஞ்சளும் சேம்பும், மாவும் பனையும், இஞ்சியும் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.
அங்கங்கே மகளிர் நெல்லை உலர்த்துகிறார்கள். அந்த நெல்லைத் தின்ன வரும் கோழியை ஓட்ட அருகிலே கல் இல்லை. வேறு யாதும் இல்லாமையால் தம்முடைய காதில் உள்ள குழையை வாங்கிக் கோழியின்மேல் எறிந்து ஓட்டுகிறார்கள். அந்தக் குழைகள்,சிறு குழந்தைகள் விடும் விளையாட்டு வண்டிகளைத் தடுக்கின்றன.
ஒன்றுக்கு ஒன்று அருகாகப் பல ஊர்கள் நிறைந்தது சோழ நாடு. பகைவர்களால் உண்டாகும் அச்சமே அவ்வூர்களில் இல்லை. அந்த நாட்டில் கடற்கரையில் விளங்குவது காவிரிப்பூம் பட்டினம்.

Comments
Post a Comment