சோழ வளநாடு - கள்ளர் நாடு

சோழ வளநாடு - கள்ளர் நாடு
==============================

வளநாடுகளெல்லாம் சோழ மன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன. சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன.
(வளவர் – சோழர் (“சோழ வளநாடு சோறுடைத்து”); செழியர் - பாண்டியர்; பெரும் முக்கோக்கள் - முடிமன்னர்களாகிய மூவேந்தர்கள் ,)

அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு “மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்” என வருவது சான்றாகும்.

நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடுமுதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன.

இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் , கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது. கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு.

தொண்டைமண்டத்தில் பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது.

சோழ மண்டலத்திற்குள் வளநாடு, நாடு என்னும் பிரிவுகள்  இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது   சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும்.  

கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏழ்பனைநாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை. தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது.

பாடல் வருமாறு.
“தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி
பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய
சீதம் மலரடு புனநாடு செந்தமிழ்சேர்
ஏதழில் பன்னிரு நாட்டெண் “
செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.

நாடு என்னும் சொல் இச்செந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம்.

திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்:

“தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி நாடு, கீழத் துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, குழந்தைவளநாடு, பனையக்கோட்டை நாடு, அருமலைக்கோட்டை, காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர் , நொழயூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வலல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர் மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு” என்பன.

தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி.ஏ.,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:

நாட்டின் பெயர் (தஞ்சாவூர்)
============================

நாட்டின் முதற்கரை
பொதுத்தலம்

1) காசாநாடு
2) கீழ் வேங்கைநாடு
3) குழந்தை வளநாடு
அருமலைக்கோட்டை
தெக்கூர்
கோயி
4) கேனூர் நாடு
தெக்கூர்
கோட்தைத்தெரு
5) பின்னையுர்நாடு
பின்னையூர்
6) தென்னம நாடு
7) தொன்னம நாடு
8) கன்னந்தங்குடி நாடு
மேலையூர்
9) உரத்த நாடு
புதுவூர்
கோயிலூர்
10) ஒக்கூர் நாடு
மேலையூர்
11) கீழ ஒக்கூர் நாடு
கீழையூர்
12) திருமங்கலக் கோட்டை நாடு
மேலையூர்
13) தென்பத்து நாடு
பேரையூர்
அப்பராம்பேட்டை
14) ராஜவளநாடு
நடுவாக்கோட்டை
15) பைங்கா நாடு
16) வடுகூர் நாடு
தென்பாதி
17) கோயில்பத்து நாடு
கம்பை நத்தம்
கோயில்பத்து
18) சுந்தர நாடு
வளமரங்கோட்டை
19) குளநீள் வளநாடு
துரையண்டார் கோட்டை
கடம்பர் கோயில்
20) பாப்பா நாடு
தெற்குக் கோட்டை
சங்கரனார்கோயில்
21) அம்பு நாடு
தெற்க வடக்குதெரு
செங்குமேடுடான் விடுதி
அம்புகோயில்
22) வாகரை நாடு
குருங்குளம்
23) வடமலை நாடு
பகட்டுவான் பட்டி
24) கொற்கை நாடு
செங்கிபட்டி கூனம் பட்டி
25) ஏரிமங்கல நாடு
ராயமுண்டான்பட்டி
வெண்டையன்பட்டி
26) செங்கள நாடு
விராலிப்பட்டி
நொடியூர்
27) மேலைத்துவாகுடிநாடு
சூரியூர்
28) மீசெங்கிளி நாடு
29) தண்டுகமுண்டநாடு
30) அடைக்கலங்காத்தநாடு
அள்ளூர்
31) பிரம்பை நாடு
பிரம்பூர்
32) கண்டி வள நாடு
நடுக்காவேரி
33) வல்ல நாடு
இளங்காடு
34) தந்தி நாடு
நத்தமாங்குடி
வாராப்பூர்
பொன்னம் விடுதி
35) ஆலங்குடி நாடு
ஆலங்குடி
36) வீரக்குடி நாடு
வாண்டான் விடுதி
திருமணஞ்சேரி
37) கானாடு
திருவரங்குளம்
38) கோ நாடு
39) பெருங்குளூர் நாடு
பெருங்களூர்
40) கார்யோக நாடு
41) ஊமத்த நாடு
சிங்கவனம்

மதுரைக் கள்ளர் நாடுகள்: -
============================

1) மேல்நாடு
2) சிறு குடிநாடு
3) வெள்ளூர் நாடு
4) மல்லாக்கோட்டை நாடு
5) பாகனேரி நாடு
6) கண்டர் மாணிக்கம் அல்லது கண்ணன் கோட்டை நாடு
7) கண்டதேவி நாடு
8) புறமலை நாடு
9) தென்னிலை நாடு

பழைய நாடு என்பன புறமலை நாட்டுக் தலைவரை ஆயர் முடிச்சூட்டுவது வழக்கம் . மேல் நாடானது வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என்று மூன்று உட்பிரிவையுடையது.

சிறு குடி நாட்டின் உட்பிரிவுகள் ;ஆண்டி , மண்டை ஐயனார், வீரமாகாளி என்ற தெய்வங்களின் பெயர்களையுடையன. வெள்ளூர் நாட்டின் உட்பிரிவுகள்; வேங்கைப்புலி, வெக்காலி புலி, சாமிப் புலி, சம்மட்டி மக்கள், திருமான்,சாயும் படைத் தாங்கி என்பன போன்றவை சிவகங்கைச் சீமைகயில் 14 நாடுகள் உள்ளன. ஆண்டிற்கொருமுறை பதினான்கு நாட்டின் தலைவர்களும் சுர்ண மூர்த்திஸ் வாமி திருவிழா சம்பந்தமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம். உஞ்சனை, செம்பொன் மாரி, இரவு சேரி, தென்னிலை, என்ற நான்கு நாடுகளும் சிவகங்கை சமீனில் மற்றொரு பகுதியாகும்.



பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளைப் பற்றி, கள்ளல் , ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும் , சிவகங்கை , சிரஞ்சீவி எஸ், சோமசுந்தரம் பிள்ளை நன்கு ஆராய்ந்து தெரிவித்தவை பின்வருவன.
=======================================================

1.மேல நாடு : இது ஐந்து தெருவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மேலை தெருவானது நரசிங்கன் பட்டி முதலிய எட்டு ஊர்களையும் , தெற்கு தெருவானது தெற்கு தெரு முதலிய எட்டு ஊர்களையும் , வடக்கத் தெருவானது வல்லாளப்ட்டி முதலிய 27 ஊர்களையும் பத்துக் கட்டு தெருவானது சிட்டம் பட்டி முதலிய 10 ஊர்களையும் , பறப்பு நாட்டு தெருவானது திருக்காணை முதலிய 8 ஊர்களையும் உடையன.

2.நடுவு நாடு: இது மேலூர் முதலிய 20 உர்களையுடையது.

3.சிறு குடி நாடு: இதற்கு செருங்குடி நாடு என்றும் பெயர் உண்டு. இது கீழ வளவு, மேல முதலிய பிரிவுகளையும் , பல ஊர்களையும் உடையது முன்பு வெள்ளூரும் இவர்கட்கு கீழ்பட்டிருந்தது. வெள்ளூர் மன்னவன் சின்னாண்டி என்பவனால் சிறு குடியார் துரத்தப்பட்டனர். இது வெள்ளூருக்கு மேற்கில் இருக்கிறது.

4வெள்ளூர் நாடு: இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு, என்று கூறப்படும். இந்நாடு வெள்ளலூர், அம்பலககாரன் பட்டி, உறங்கரன் பட்டி குறிச்சிப்பபட்டி, மலம் பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களையுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையம் , உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும், மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப் புலி, சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்கர்லி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரை யென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையொன்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத்தம்மன கோயில். வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. நாடு முழுவதும் ்ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்.

5.அஞ்சூர் நாடு::- இது மதுரையின் கிழக்கே பன்னிரண்டு மைலில் உள்ளது; தமராக்கி, குண்ணனூர் முதலிய பல ஊர்களையுடையது.

6.ஆறூர் நாடு:- இது சிவகங்கையின் மேற்கே ஐந்து மைலிர் உள்ளது; ஒக்கூர்,நாலுகோட்டை முதலிய பல ஊர்களையுடையது. இந்நாட்டு தலைவர்களுக்குச் சோழ புறம் சிவன் கோயிலில் பட்டுப் பரிவட்டம் மறியாதைகள் உண்டு

7.மல்லக்கோட்டை நாடு:- இது சிவ கங்கையின் வடக்கே 8 மைலில் உள்ளது' மல்லகாக்கோட்டை, மாம்பட்டி, ஏறியூர் முதலிய ஊர்களையுடையது.

8.பட்டமங்களம் நாடு:- இது பட்டமங்கலம் முதலிய பல ஊர்களையுடையது. திருவிளையாடல் புறாணத்திலே கூறப்பெற்ற அட்டமாசித்தி யருளிய பட்டமங்கை என்னும் தளம் இதுவே. மல்லாக்கோட்டை நாட்டுக்கும் பட்டமங்கள நாட்டுக்கும் திருக்கோட்டியுர் பெருமாள் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டு பரிவட்டம் மரியாதைகள் உண்டு.

9..பாகநேரிநாடு:- இது கானேரி, காடனேரி, நகரம் பட்டி முதலிய பல ஊர்களையுடையது இந்நாட்டிற்கு பாகனேரியிலுள்ள சிவன் கோயில் அம்பாள் கோயில்களில் எல்ல எரிமைகளும் மரியாதையும் உண்டு.

10..கண்டர் மாணிக்கம் :- இது கண்டர் மாணிக்கம் முதலிய 13 ஊர்களயுடையது. இந்நாட்டிற்குக் கண்டர் மாணிக்கம் அம்மன் கோயிலிலும் குன்றக்குடி முருகப்பெருமான் கோயிலிலும், தேனாட்சியம்மன் கோயிலிலும் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகளும் எல்லா உரிமைகளும்உண்டு.

11..குன்னங்கோட்டை நாடு:- இது கல்லல் குன்னமாகாளியம்மன் பெயரைக் கொண்டது. இந்நாட்டுக்குத் தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளவர்கள். இவர்களுக்கு பாண்டிநாடு மதிதட்தான், திறைகொண்ட பெரியான், சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு, இவர்கள் திருவெங்கடத்தானைக் குலதெய்வமாக உடையவர்கள், கண்ணிழந்தவர்க்கு கண் கொடுத்த ஒரு பக்தருடைய வழியினர், இவர்கள் பாண்டி வேந்தரிடத்தில் மேலே குறித்த பட்டங்களும், நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய பாசுபந்து வாசமாலையும், சிவகங்கை இராமநாதபுரம் அரசர்களிடத்தில் இரட்டைத் தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை, சுருட்டி, இடைக்கம் பீலிகுஞ்சம், சாவிக்குடை, காவிச் செண்டா, வெள்ளைக்குடை, சிங்கக்கொடி, அனுமக்கொடி, கருடக் கொடி, புலிக் கொடி, இடபக்கொடி, மீனக்கொடி பஞ்சவர்ணக்கொடி என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள். காளையார் கோயில், கல்லல் திருச்சோமேசுரர் கோயில், சிறு வயல் மும்முடீ நாதர் கோயில் என்னும் சிவாலயங்களின் தேர் திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து் பட்டுப் பரிவட்டம் முதலிய மரியாதையுரிமைகள் பெறும் வழக்கம் முடையவர்கள். இந்நாடு தெற்கோ காளையார் கோயிலுமட் வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும் கிழக்கே கோயிலாம் பட்டியும் எல்லையாகவுள்ள பல ஊர்களையுடையது. இந்நாட்டுக்குத் தலைவர் தமது இறுதிக் காலத்தில் தமக்குப் பின் தலைவராக இருக்கத் தமது குடும்பத்தில் தக்காரொருவர்க்குப் பட்டங்கட்டுவது வழக்கம். இவர்களைப் ்பட்டத்துச் சாமி பட்டத்து ஐயா என வழங்கி வருகிறார்கள்.

12.பதினாலு நாடு:- குன்னங்கோட்டை நாட்டிலிருந்து கிழக்கே கடல் வரையில் பதினான்கு நாடுகள் உள்ளன. அவை ஏழு கிளை பதினாலுநாடு என்னும் பெயரால் வழங்குகின்றன.
அவை:- குன்னங்கோட்டை நாடு , தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இருப்பா நாடு, தேர்போகி நாடு,வடபோகி நாடு, கோபால நாடு, ஆற்றங்கரை நாடு, ஏழுகோட்டை நாடு, முத்து நாடு என்பன. இந்தப் பதினான்கு நாட்டாரும் கண்டதேவியில் மகாநாடு கூடுவது வழக்கம். இவற்றில் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு என்னும் நான்கு் நாட்டிற்கும் கண்டதேவி சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. எழுவன் கோட்டை சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் தென்னிலை நாட்டுக்குப் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. இவையன்றித் திருவாதவூர் நாடு, கீழக்கடிநாடு என்னும் நாடுகளும் உள்ளன.

13.திருவாதவூர் நாடு:- இது மேலூர்த் தாலுகாவில் தென்கிழக்கில் உள்ளது; இடைப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர்களயுடையது.

14.கீக்குடிகாடு:- இது மதுரைக்கு மேற்கில் உள்ளது திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும் கற்பக நாடு என்பது 7 மாகாணமும் 30 ஊர்களும் உடையதாகும் முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேது நாடு, கற்பகநாடு என்னும் பெயர்களாலவ் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது.

மேல நாடு, நடுவ நாடு, சிறுகுடி நாடு, வெள்ளூர் நாடு, அஞ்சூர் நாடு, மையில்ராயன் கோட்டை நாடு,ஆரூர் நாடு, வல்லக்கோட்டை நாடு, பட்டமங்கல நாடு, பாகனேரி நாடு, கண்டர் மாணிக்க நாடு, உன்னங்கோட்டை நாடு, தென்னிலை நாடு, தேர்போகி நாடு,இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இவையன்றி இன்னும் பல நாடுகள் ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப் படுகின்றன.
.
கல்வெட்டில் நாடுகள் :
சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல் நாடு, மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு போன்ற நாடுகளும் அருண்மொழித் தேவவளநாடு, பாண்டிய குலோசினி வளநாடு போன்ற வளநாடுகளும் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.

பாண்டிய நாட்டில் மேல்நாடு, சிறுகுடி நாடு, வெள்ளுர் நாடு, மல்லாக்கோட்டை நாடுபாகநேரிநாடு, போன்ற நாடுகளும்.

சேரநாட்டில் கொங்குமண்டலத்தில் பூந்துறை நாடு, காங்கேய நாடு, ஆரை நாடு, திருவானைக்குடி நாடு என மேலும் பல நாடுகளும் உள்ளன.

1) சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி. (907--957) ஆனைமலை நரசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் -- சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.

2) தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995- பொய்கைநாடு, இராசேந்திரசிங்க வளநாடு, தியாவல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு,

3) இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885-1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கை நாடு, குடமலை நாடு,

4) சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இரசேந்திரன் (1012--1044) பங்கள நாடு, வகைமுகைநாடு, இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது.

5) மணிமங்கலம் சபையோர் சாசனம் மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (1052--64) செயங்கொண்ட சோழபுரத்து மாகனூர் நாடு.

6) வில்லவராயன் சாசனம் மன்னன் முதற் குலோத்துங்கன் (1070) கல்வெட்டு உள்ள இடம் திருவானைக்காவல் பாண்டிய குலாசினி வளநாடு, தென்கவிர்நாடு,

7) மணிமங்கலம் கோவில் சாசனம் மன்னன் மூன்றாம் இராசராசன் (1216) குலோத்துங்க சோழ வளநாடு, குன்றத்தூர் நாடு.

பாண்டியநாட்டுக் கல்வெட்டு

1) புதுக்கோட்டைச் சீமைக்கல்வெட்டு குலசேகரப்பாண்யன் (119-9-1216) திருமயம் தாலுகா மலைக் கோவில் விருதராசபயங்கரவளநாடு கானநாடு இரயிலேசுசாசனம் தென்காசி மன்னன் மாறவன்மன் சுந்தரபாண்டியன் (1219) துரும நாடு, கானநாடு,

2) பெரம்பலூர் மாவட்டம் -- நகரம் மதனகோபாலசாமி கோயில் மன்னன் சடாவர்மன் சுந்தரபாண்டியன் (1258) வெம்பார் நாடு, கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கோயில் சுவர் மன்னன் வீரபாண்டியன் 13ஆம் நூற்றாண்டு – கிழங்கநாடு, திருநெல்வேலி மாவட்டம் - மேலநத்தம் -அக்கினீசுவரமுடையார் கோயில் பிற்காலப்பாண்டியர் – துரோதைய வளநாடு.

3) அதே கோயில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1223) கீழ்வெம்பா நாடு, வல்லபன் கோட்டை – ஐயனார் கோயில் - - மன்னன் சடையன் மாறன் 10 ஆம் நூற்றாண்டு – களக்குடிநாடு.

செப்பேட்டில் நாடுகள்

சோழர் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் உதயேந்திரம் செப்பேடு மேலடையாறுநாடு, வேளஞ்சேரிச் செப்பேடு, திருத்தணிநாடு, சுந்தரச்சோழனின் அன்பில் செப்பேடு திருவழுந்தூர் நாடு, இராசகேசரிவர்மனின் திருச்செங்கோட்டுச் செப்பேடு – கன்னநாடு இராசராசனின் ஆனைமங்கலச் செப்பேடு – சத்திரியசிகாமணிவளநாடு, நித்தவினோதவளநாடு, போன்ற நாடுகளும் கரந்தைச் செப்பேடு அம்பர்நாடு, பாம்பூர்நாடு, வெண்ணாடு திரைமூர்நாடு போன்ற நாடுகளுளையும், இந்தச் செப்பேடு இரசேந்திரசோழன் கங்கை நோக்கி படையெடுத்துச் சென்றபோது ஆரியதேசம், மத்திய தேசம், இலாடதேசம், வங்கதேசம் ஆகியவற்றை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான் என்று குறித்துள்ளது.

தேசம் தமிழில்லை. தமிழ்நிலம் குறித்து வழங்கவுமில்லை. வீரபாண்டிச் செப்பேடு மாரியம்மன் கோயில் வழிபாட்டிற்கான கொடைபற்றியது. மன்னன் மதுரை விசுவநாத நாயக்கன் (1529) பிறதலை வளநாட்டில் சேர நாட்டு எல்லைக்குள் வருசை நாட்டு மத்தியில் புல்ல நல்லூரான வளநாட்டில் குடியிருக்கிற காமாட்சியம்மன் பக்தராகியயாகச் சத்திரிய தெலுங்க தேசாதிபதிகள் வமிசத்தார்கள் தலைமை புல்லன்செட்டி. புல்லன்செட்டி மாரியம்மன் கோவிலுக்குக் கொடையளிக்கிறார். புல்லன்செட்டி குடியிருக்கும் தமிழ் நிலப்பகுதியைக் குறிப்பிடும். செப்பேடு பிறதல வளநாடு, செர நாடு, வருசை நாடு, புல்ல நல்லூர் வளநாடு என்று குறிப்பிடுகிறது.

புல்லன்செட்டியின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் தெலுங்கு மொழி பேசப்படும் தேசமாகும். இதுவும் இராசேந்திரசோழன் செப்பேட்டுக் குறிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நிலத்திற்குப் புறத்தேயுள்ள தெலுங்கு நாட்டைத் தேசமென்று குறிப்பிடுகிறது.

முசிறிச் செப்பேடு கோயில் பூசகர் தேவரடியார்க்குக்காணி வழங்கிய பட்டையம் மன்னன் மதுரை முத்துவீர சொக்கநாத நாயக்கன் (கி.பி.1710) வெற்றிச்சிறப்பைக் குறிக்கிறது. இதில் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் என்று அவனின் வெற்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் நாடு, இராச வளநாடு, ஆமூர் நாடு குறிக்கப்படுகிறது.

நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் செப்பேடு ஒன்றை ஆவணமாகக் காட்டியுள்ளார். அந்தச் செப்பேட்டிலுள்ள நாடுகள் வருமாறு : தந்திநாடு, மனைப்பள்ளிநாடு, ஆய்வூநாடு, அஞ்சமுகநாடு, எரிமங்கலநாடு, மேலத்துவாகுடிநாடு, கீழத்துவாகுடிநாடு, கொற்கை நாடு, போன்ற நாடுகள்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்