சிவபுரம்
ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால் அவரது மூதாதையர் யார் தெரியுமா? அவர்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சிவபுரத்தை சேர்ந்தவர்கள். சிவபுரத்திலிருந்து கேரளாவிற்குச் சென்று குடியேறியவர்கள் சிவனின் பெயராலேயே புரம் என்ற ு அழக்கப்படும் இவ்வூர் குபேரபுரம், பூ கைலாயம். சண்பகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதடசணம் செய்து வழிபட்ட தலம். பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் தரிசித்து பேரு பெற்றுள்ளத் தலம். மேலும் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலம் குழந்தைப்பேறும் வழக்குகளில் வெற்றியும் தரும் ஸ்தலமாகும். புராணச் சிறப்பு இரண்யாஷன் என்ற அசுரன் இந்த உலகத்தை அழிக்க முயன்றான். அப்போது ஜகத்ரட்சகனான திருமால் வெண்பன்றி உருவெடுத்து தன் கொம்பின் முனையில் உலகத்தை தூக்கி நிறுத்திக் காப்பற்றினார். பின் இத்தலம் வந்து சிவபுரநாதரை வழிபட்டு அருள் பெற்றார். திருமால் வராகமூர்த்தியாக அவதாரமெடுத்த போது அவர் மேனியில் பட்ட மண் துகள்களை ஒன்று திரட்டி இத்தலத்தில் சிவலிங்கமாக்கி வழிப்பட்டாள் திருமகள். குபே