"அய்யாறப்பர் கோயில்"
மாமன்னன் கரிகால் சோழன் இமயத்தில் இருந்து நாடு
திரும்பும் போது திருவையாறு வழியாக தேரில் வந்து கொண்டிருந்தான்.அப்போது
ஓரிடத்தில் தேர் நகர முடியாமல் சக்கரங்கள் பூமியில் அழுந்தி
விட்டன.அவ்விடத்தில் அகழ்ந்து பார்த்த போது பூமிக்கடியில் சிவலிங்கம்,சக்தி,வினாயகர்,முருகன்,நந்தி,சப்தகன்னிகள்,சண்டன்,சூரியன்
ஆகிய சிலைகளுடன் சடை முடியுடன் "அகப்பேய் சித்தர்" தியானத்தில் அமர்ந்து
இருப்பதைக்கண்டான்.கரிகாலன் அவரை வணங்க சித்தர் எவராலும் வெல்ல முடியாத
"தண்டம்" ஒன்றைக் கரிகாலனுக்குப் பரிசளித்தார். அங்கு சிவனுக்குக்கோயில்
கட்டுமாறு பணித்தார்.சித்தர் கூறியபடி கரிகாலன் அங்கு சிவன்
கோயிலைக்கட்டினான். அவ்வாறு கட்டப்பட்டது தான் "அய்யாறப்பர் கோயில்".இந்த
நிகழ்ச்சியைப் பற்றியக் குறிப்பு திருவையாறு அய்யாறப்பர் கோயிலில்
தலவரலாற்றுக் குறிப்பில் காணப்படுகிறது.
Comments
Post a Comment