Posts

Showing posts from March, 2019

கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன்

Image
கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர் ========================================= கொடைக்கானலில் போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு மானூத்து கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்ற C. A. வெள்ளைய தேவருக்கும், மூணாறுக்கு A.S. சுப்பன் செட்டியாருக்கும் வழங்கப்பட்டது. கொடைக்கானலுக்கு சாலை போட்ட வெள்ளைய தேவர், அங்கு 13 பேருந்துக்களை CA. வெள்ளைய தேவர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயக்கினார். அதன் பிறகு 1947 வது வருடம் சுதந்திரம் பெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி போட்டு கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் கொடைக்கானலுக்கு சிறு வணிகம் செய்ய வந்த JC என்ற ஜெயராஜ் செல்லத்துரைக்கும், C. A. வெள்ளைய தேவருக்கும் தேர்தல் பகை காரணமாக ஒரு பந்தயத்தில் பந்தய பொருளாக தனது 13 பேருந்

விநாயகர் பற்றிய 80 அற்புத தகவல்கள்

Image
விநாயகர் பற்றிய 80 அற்புத தகவல்கள் தெரிந்து கொள்வோம்! 1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். 3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். 4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. 5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். 6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புர

தியாகராஜர் கோயில்

Image
#இந்தியாவின்_மிகப் #பெரிய_கோயில் #எது_தெரியுமா? #தெரிந்து_கொள்வோம்!!! *இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? #33 #ஏக்கர்_(#14_லட்சம் #சதுரடி) #நிலப்பரப்பில் #திருவாரூரில் #அமைந்துள்ள, #தியாகராஜர் #கோயில்தான் #இந்தியாவின் #மிகப்_பெரிய #கோயிலாகும்! 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமு

சோழன்_நலங்கிள்ளி

Image
#சோழன்_நலங்கிள்ளி #கால_விளக்கம்: கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு 10 எனக் கொண்டோம், சிலப்பதிகாரப்படி செங்குட்டுவன் காலம் கி.பி. 150-200 எனக் கொள்ளலாம். அக்காலத்துச் சோழன் நெடுமுடிக் கிள்ளி என்கிறது மணிமேகலை, அவற்குப் பிற்பட்டவனே கோச் செங்கட் சோழன் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. நெடுமுடிக் கிள்ளியுடன் கடைச் சங்க காலம் முடிவு பெற்றதென்றே ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆதலின், தொகை நூற்களிற் கூறப்படும் சோழர் பலரும் ஏறத்தாழக் கரிகாலற்குப் பிற்பட்ட கி.மு. 10 முதல் செங்குட்டுவன் காலமாகிய கி.பி. 150 வரை இருந்தனர் எனக் கொண்டு, அச்சோழர் வரலாறுகளை இப்பகுதியிற் காண்போம். #முன்னுரை: சோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன் என்பதே இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது. இவன் பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர் கூறியுள்ளனர். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப் பற்றிப் 10 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்துார் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது. #போர்ச்_ச

தூங்கு #மூஞ்சி #மரம்

Image
#தூங்கு #மூஞ்சி #மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது. ஆமாம் பகல் நேரத்தில் தன் மேல் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து  வைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் அதை மழைத்தூறல் போல உதிர்க்கும். இதனாலேயே இதற்கு மழை மரம் என்றும் பெயர். நல்ல விஷயங்களைத்தான் கவனிப்பாரில்லையே ... அதனால் தான் இதன் அருமையான தன்மை கவனிக்கப்படாமல் தூங்கு மூஞ்சி என்று அவமானப்படுத்தப்படுகிறது. #வாகைமரம்.#தூங்கு #மூஞ்சி மரமானதா.. . தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர்.ஆனால் இம்மரத்தின் உயர்ந்த பண்பைப்புரிந்து கொள்ளாமல் இதற்கு தூங்கு மூஞ்சி மரம் என அழைக்கிறோம்.. இனி இம்மரத்தை #தூங்குவாகை,#காட்டுவாகை#மழை மரம் என அழையுங்கள். #காட்டுவாகை ,#மழ

தொண்டைமான் அரசவையில் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள்

Image
தொண்டைமான் அரசவையில் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள் ============================================== புதுக்கோட்டை  தொண்டைமான் மன்னர்களின் ஆதரவின் கீழ் உருவான தமிழ் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கும்மி, அம்மானைப் பாடல்கள் பலவாகும் அவற்றுள் ஒரு சில . • சிவத்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் • சிவத்தெழுந்த பல்லவராயன் உரை • ராய தொண்டைமான் அனுக்கிரக மாலை • ராய தொண்டைமான் இரட்டை மணிமாலை • பஞ்சரத்தினம் என்று அழைக்கப்பட்ட ஏழைபங்காளி , கருணைக்கடைகண், பிறவியில்லாத அருள் , மனத்துயர் தீர்த்தருள், தருணமிதம்மா, என்ற இந்த ஐந்து பாடல்களும், திருகோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் (1730 -1769 ) பாடியதாகும் ( மேலும் பல கீர்த்தனைகளை பாடியுள்ளார்). • அம்புநாட்டு வளந்தான் • வெங்கண்ண சேர்வை வளந்தான் • விராலிமலைக் குறவஞ்சி • விரலியின் காதல் • திருமலைராயன் கப்பல் • ஆண்டப்பவேளான் குறவஞ்சி • உடையப்பவேளான் குறவஞ்சி • திருமலை ராயன் கலித்துறை • நல்லப் பெரியாள் கலியுகக் குழுவல் நாடகம் • நாவலங்க நல்லக்குட்டி குழுவல் நாடகம் • திருக்களம்பூர் முத்து வைரவன் சேர

திருவண்ணாமலை

Image
*#திருவண்ணாமலை* *1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்* *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.* *தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.* *திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.* *இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.* *பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக

கரிகாலன்_கால_சமயம்_வளர்ச்சி:

Image
#கரிகாலன்_கால_சமயம்_வளர்ச்சி: கரிகாலன் காலத்தில் சோழ நாட்டில் பல சமயங்கள் இருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் வேண்டுகோட்படி  தமிழரசர் பெளத்த சமயப் பிரசாரத்திற்கு நாட்டில் இடம் தந்தனர். அன்று முதல் சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்தப் பள்ளிகளும் விகாரங்களும் பெருகின. கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிகாரம் இருந்திருத்தல் வேண்டும்; இங்ஙனமே சமணப் பள்ளிகளும் இருந்திருத்தல் வேண்டும் வேதியர் வடநூல் முறைப்படி வேள்விகள் செய்து வந்தனர். இவரன்றி வாணிகத்தின் பொருட்டுச் சோணாடு புக்க பல நாட்டு மக்கள் கொண்டிருந்த சமயங்கள் பலவாகும். இங்ஙனம் பற்பல சமயத்தவர் சோணாட்டில் இருந்தாலும், அவரனைவரும் ஒருதாயீன்ற மக்களைப் போலக் கரிகாலன் ஆட்சியில் கலந்து உறைந்தனர். அரசனும் எல்லாச் சமயத்தவரையும் மதித்து நடந்து வந்தான். கரிகாலன் தனக்கெனக் கொண்டிருந்த சமயம் சைவம் ஆகும். இவன் காஞ்சி நகரில் உள்ள பண்டைக் கோவிலாகிய ஏகம்பவாணர் திருக்கோவில் திருப்பணி செய்து வழிபட்டான். இவனது திருத்தொண்டினைச் சைவ சமயக் குரவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினருமாகிய திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்துச் சிறப்பித்து

தடுப்பு மருந்து -போலியோ...

Image
"மொத்தமும் தேவையில்லை.அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்..." --என்று அவர் கூறியதை உலகம் பலத்த அதிசம் கலந்த ஆச்சர்சயத்துடன் பார்த்தது. அது எப்படி இரண்டே இரண்டு சொட்டுகள் போதும் என்கிறார் அவர்? -- என மருத்துவ உலகம் கேள்விகளோடு தயாராக இருந்தது. அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக ஒட்டு உலகமே காத்திருந்தது. ஏப்ரல் 12, 1955. ஒட்டு மொத்த உலகமே இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தது.ஒரு மருத்துவர் தனது இரண்டு சொட்டுக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடப் போகின்றார்.அவரது அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்காகத் தான் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது, "நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி  வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான விளைவுகளைத் தந்துள்ளன.இந்த வேக்சின் அருமையான முடிவுக

#விரத_மகிமை...நாராயணன்....

Image
      #விரத_மகிமை #காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும்.  *பெருமாள் எடுத்த #பலவிதமான அவதாரங்களில் #சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று.*  இந்த சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை #மிகவும்_புனிதமாக கருதப்படுகிறது.  இப்பூஜை #திருமணம், முக்கிய திருவிழாக்கள், #வீடு, #நிலம் வாங்கும் போது என எந்த ஒரு #நல்லகாரியத்தின் போதும் #நடத்தப்படுகிறது.  பக்தர்கள் சத்யநாராயண பூஜையை *#பவுர்ணமியன்று* நடத்துகிறார்கள்.  எந்த ஒரு காரியத்திலும் #வெற்றிகிடைக்கவேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை #செய்ய_வேண்டும். முழுமுதற் கடவுளான *விநாயக பெருமானை* வணங்கி இந்த சத்யநாராயண பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.  அதைத் தொடர்ந்து *நவக்கிரக பூஜை,* மற்ற சில பூஜைகளையும் செய்ய வேண்டும்.  பின் விஷ்ணுவின் பல்வேறு நாமங்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பூஜை முடிந்த பிறகு வகை வகையான உணவுகள் பிரசாதமாக நிவேதிக்கப்படும்.  இப்பூஜையின் போது சத்யநாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை, பூஜை செய்பவர்கள் அல்லது வயதான #பெரியவர்கள் யாராவது #கூறவேண்டும். *பவுர்ணமி

கொடுத்து வைத்த சங்கு

Image
#கொடுத்து வைத்த #சங்கு பெருமாளின் கையில் உள்ள சங்கிற்கு 'பாஞ்சஜன்யம்' என பெயர்.  #இதன் ஒலி #அதர்மக்காரர்களின் #அடிவயிற்றை #கலக்கும் #சக்திபடைத்தது. அதே நேரம் #தர்மத்தின் பக்கம் இருப்பவர்களுக்கு #உற்சாகத்தையும், #உத்வேகத்தையும், #தன்னம்பிக்கையையும் #தரும். இது பகவான்கிருஷ்ணரின் #குருவான #சாந்தீபனி_மகரிஷியால் அவருக்கு தரப்பட்டது. கிருஷ்ணனின் #உதடுகளில்_பட்டு, இந்த சங்கு அனுபவித்த #பாக்கியத்தை தாங்கள் #பெறவில்லையே என ஆயர்பாடி கோபியர்கள் #பொறாமைப்பட்டனர். இதன் பெருமையை ஆண்டாள் #பாடியுள்ளார். கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ? திருப் பவளச் செவ்வாய்தான் தித்திதிருக்குமோ? மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்ருக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண் சங்கே! – நாச்சியார் திருமொழி            

கரிகாலன்_காலத்தில்: #செந்தமிழ்_வளர்ச்சி

Image
#கரிகாலன்_காலத்தில்: #செந்தமிழ்_வளர்ச்சி: இச்செங்கோல் வேந்தர் ஆட்சியில் தமிழ் செம்மையுறவே வளர்ச்சிபெற்று வந்ததென்பது கூற வேண்டுமோ? இவனது தாய் மாமனான இரும்பிடர்த் தலையாரே பெருந்தமிழ்ப் புலவர்; அவராற் பாதுகாப்புப் பெற்ற இவனும் சிறந்த தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் என்பதில் வியப்பில்லை. இவனைப் பாராட்டிய புலவர் பலராவர். அவருள் இவனை பட்டினப்பாலையாற் புகழ்ந்து பாராட்டிய பெரும் புலவர் உருத்திரன் கண்ணனார் என்பவர். இவன் அவர்க்கு 16 லக்ஷம் பொன் பரிசளித்தான் என்பர். பட்டினப்பாலை படித்து இன்புறத்தக்க அழகிய நூலாகும். இவன் மீது பாடப்பெற்ற மற்றொரு பெரிய பாட்டு பொருநர் ஆற்றுப்படை என்பது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர். அப்பாவில் இவனுடைய போர்ச் செயல்கள், குணாதிசயங்கள் இன்னபிறவும் செவ்வனே விளக்கப் பெற்றுள்ளன. இவன் வரலாற்றை அறிய அது பெருந்துணை செய்வதாகும். இவனைப்பாடிய பிற புலவருள் காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் என்பவர் ஒருவர். இவர், கரிகாலன் தன் நண்பனான பாண்டியன் வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியுடன் இருந்த மகிழ்ச்சி மிக்க நேரத்திற் சந்தித்து, இருவரையும் பலபடப் பாராட்ட

பசுபதி

Image
வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால அனுபவத்தில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும். சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும்  சிவாகமங்கள்  இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான  ஆலயமும்  ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல்  பூசை  செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும். கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை

கரிகாலன்_போர்ச்செயல்கள்

Image
#கரிகாலன்_போர்ச்செயல்கள் இவனுடைய போர்ச் செயல்கள் பொருநர் ஆற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன: (1) இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர அவாவிச் சேர பாண்டியருடன் போரிட்டான். போர் ‘வெண்ணி’யில் நடைபெற்றது. ‘முருகன் சீற்றத்து உருகெழுகுரிசி’லான கரிகாலன் அவ்விரு வேந்தரையும் வெண்ணிப் போரில் அவியச் செய்தான். இதனைப் பொருநர் ஆற்றுப் படை பாடிய முடத்தாமக் கண்ணியார், “இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத்(து) அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.” என்று சிறப்பித்துள்ளார். (2) கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள் நாகர் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான், பிறகு தென்பாண்டி நாட்டை அடிப்படுத்தி மேற்கே சென்றான். (3) கற்கா (

கரிகாலன்

Image
o #வடநாடு (8) பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டான், அப்பொழுது மகதப் பெருநாடு சுங்கர் ஆட்சியிலிருந்து கண்வ மரபினர் ஆட்சிக்கு மாறிவிட்ட காலமாகும். கி.மு. 73-இல் வாசுதேவ கண்வன் மகதநாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் கண்வர் மூவர் கி.மு. 28 வரை ஆண்டனர். அதற்குப் பிறகே மகதப் பெருநாடு ஆந்திரர் ஆட்சிக்கு உட்பட்டது. வலியற்ற கண்வர் ஆண்ட காலத்திற்றான் கரிகாலன் வடநாட்டுச் செலவு ஏற்பட்டதாதல் வேண்டும். அக்காலத்தில் கோசாம்பியைக் கோநகராகக் கொண்ட வச்சிரநாடும், உச்சையினியைத் தலைநகராக கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். அதனாற் போலும், கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான்; வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்; அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. பின் இரு வேந்தரும் சந்திரகுப்த மோரியன் காலமுதல் சிற்றரசராகவே அடிமைப்பட்டு ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்று வரலாறு கூறுதல் நோக்கத்தக்கது. #ஈழநாடு இங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற்