தாங்கெயில்_எறிந்த_செம்பியன்

#தாங்கெயில்_எறிந்த_செம்பியன்
பெயர்க் காரணம்:

இச்சோழ மன்னன், ‘வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன்’ ஆதலின், ‘தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனப் பெயர் பெற்றான். இவன் அழித்த அரண்கள் மூன்று எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. சிறந்த வீரன்

இவன் சிறந்த #வீரன் என்பது சங்ககாலப்புலவர் கருத்து. இவனை நினைவூட்டித் தம் சோழ அரசர்க்கு வீரவுணர்ச்சி ஊட்டல் அப்புலவர் வழக்கமாக இருந்தது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,

“....................... சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே”

இந்திர விழா
‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’என்று மணிமேகலை குறித்துள்ளது.

இவனைக் குறித்துள்ள நூல்கள்
இவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.

“தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாட நல்லிகை நற்றேர்ச் #செம்பியன்.”
- சிறுபாணாற்றுப்படை

“தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை”
- சிலப்பதிகாரம்

“வீங்குதோள் #செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால்”
- பழமொழி

"தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும்”
- க. பரணி

"...................... கூடார்தம்
துங்கும் எயில் எறிந்த சோழனும்”
- மூவருலா

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்