தூங்கு #மூஞ்சி #மரம்





#தூங்கு #மூஞ்சி #மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர்.

ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது. ஆமாம் பகல் நேரத்தில் தன் மேல் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து  வைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் அதை மழைத்தூறல் போல உதிர்க்கும்.

இதனாலேயே இதற்கு மழை மரம் என்றும் பெயர். நல்ல விஷயங்களைத்தான் கவனிப்பாரில்லையே ... அதனால் தான் இதன் அருமையான தன்மை கவனிக்கப்படாமல் தூங்கு மூஞ்சி என்று அவமானப்படுத்தப்படுகிறது.
#வாகைமரம்.#தூங்கு #மூஞ்சி மரமானதா..
. தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர்.ஆனால் இம்மரத்தின் உயர்ந்த பண்பைப்புரிந்து கொள்ளாமல் இதற்கு தூங்கு மூஞ்சி மரம் என அழைக்கிறோம்..
இனி இம்மரத்தை #தூங்குவாகை,#காட்டுவாகை#மழை மரம் என அழையுங்கள்.
#காட்டுவாகை ,#மழைமரம் எனப்படும்.தூங்குமூஞ்சி மரம்...
எல்லா மரங்களும் மழை மரங்கள் தான்..ஆனால் மழைபெய்யும் போது நம்மை நனையாமல் காக்கும் மரம் #தூங்குமூஞ்சிமரம்                                                              அதற்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ரெய்ன் டிரீ. அது ரொம்பவே உண்மை. வசந்த காலத்தில் வாகை மரத்தை கடந்து சென்றீர்கள் என்றால், மரத்தின் அடிப்பகுதி முழுவதும் தூவிகளும், காய்ந்த தூவிகள் சடை போலவும் திரண்டு கிடக்கும். முதலில் கொஞ்ச நாளைக்கு பூக்களாகவும், பிறகு அவை காய்ந்து சடைசடையாகவும் கிடக்கும்.
நமது பாரம்பரிய மரங்களுள் ஒன்றான வாகை, ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. பண்டை காலத்தில் போரில் வெற்றி பெறும் அரசர்கள் வாகை மலர் சூடி வருவது மரபாக இருந்திருக்கிறது. அதனால் "போரில் வெற்றி வாகை சூடினான்" என்ற சொற்றொடரும் உருவாகியுள்ளது.
இந்த மரத்துக்கு காட்டு வாகை என்ற பெயர்.. ஆனால் இது அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மரம். தாவரவியல் பெயர் Samanea saman..ஆகும்..

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்