கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன்
கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர்
=========================================
கொடைக்கானலில் போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.
கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு மானூத்து கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்ற C. A. வெள்ளைய தேவருக்கும், மூணாறுக்கு A.S. சுப்பன் செட்டியாருக்கும் வழங்கப்பட்டது.
கொடைக்கானலுக்கு சாலை போட்ட வெள்ளைய தேவர், அங்கு 13 பேருந்துக்களை CA. வெள்ளைய தேவர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயக்கினார்.
அதன் பிறகு 1947 வது வருடம் சுதந்திரம் பெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி போட்டு கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த தேர்தலில் கொடைக்கானலுக்கு சிறு வணிகம் செய்ய வந்த JC என்ற ஜெயராஜ் செல்லத்துரைக்கும், C. A. வெள்ளைய தேவருக்கும் தேர்தல் பகை காரணமாக ஒரு பந்தயத்தில் பந்தய பொருளாக தனது 13 பேருந்துக்களை வைத்து, ஜெயராஜ் நாடாரிடம் 13 பேருந்துக்களை எழுதி கொடுத்து விட்டு பெரியகுளம் வந்துவிட்டார். அந்த பேருந்து தான் இன்று ஒடிக்கொண்டிருக்கும் J.C. பேருந்து ஆகும்.
C. A. வெள்ளைய தேவருக்கு பக்க பலமாக இருந்த போடி சுப்பன் செட்டியார், புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான், T. V. சுந்தரம் ஐயங்கார் ( TVS குழுமம் தலைவர்) .
T. V. சுந்தரம் ஐயங்கார் வருடத்திற்க்கு ஒரு முறை C. A. வெள்ளையன் தேவருக்கு அவர்களுக்கு ஒரு புது FIAT கார் பரிசளிப்பார், அந்த வருடம் அந்த பழைய காரை வாங்கிக் கொண்டு புதிய கார் தருவார்.
போடி சுப்பன் செட்டியார் உடன், அவரது போடி வீட்டிற்கு வெள்ளையன் தேவர் சென்ற போது, சுப்பன் செட்டியாருக்கு பக்கபலமாகவும், உற்ற நண்பனாகவும் இருந்த பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர் அறிமுகம், வெள்ளையன் தேவருக்கு கிடைத்தது. காலப்போக்கில் பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர், வெள்ளையன் தேவர் சம்மந்தியாக மாறி பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள்.
பெரியகுளத்தில தனது சமுதாயத்தில் வீடு இல்லாத குடும்பங்களை கண்ட வெள்ளையன் தேவர், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தனது செல்வாக்கில் நிதி கொண்டு ஒரு ஊரை உருவாக்கி ஒரு 20 வீட்டை கட்டினார்.
அப்போது கட்டும் பணிக்கு நிதி தேவைப்பட்டது, அதனை Kallar Reclamation Scheme Society அணுகி, அதில் நிதியை பெற்று, அதன் மூலம் வேலை நடைபெற்றது. Kallar Reclamation Scheme Society சூப்பர்வைசராக பணிபுரிந்த சூரியநாராயாணத் தேவர் அதாவது நடிகர் SSR ன் தகப்பனார் அவர்களும், இந்த வேலை நடைபெற முழுக்காரணம், அதனால் அந்த ஊரில் வெள்ளையன் தேவர், சூரியநாராயாணத் தேவர் குடும்பத்திற்க்கும் முதல் மரியாதை கொடுப்பார்கள், அந்த ஊர் கரட்டூர் என்று அழைக்கபடுகின்ற தெய்வேந்திரபுரம் ஆகும்.
வைத்தியநாதபுரத்தில், எல்லோரும் படிக்க பள்ளிகூடம் இல்லாததால் கள்ளர் பள்ளி ஒன்றை கட்டினார்.
நன்றி : திரு. காண்டீபன் மற்றும் திரு. செந்தில்
Comments
Post a Comment