ஐய்யனார்

பலர்  #ஐய்யனார் சைவ கடவுள் என்றும் அவருக்கு பலி கொடுப்பதில்லை என்றும் பலவாரு கருத்தாக கூறுகிறார் அது தவறு.

பெரும்பாளும் கள்ளர்நாட்டில் ஐய்யனார் தலமை தெய்வமாகவும் #கருப்பர் வரிவார தெய்வமாகவே இருக்கும் சில நாட்டில் பெண் தெய்வம் தலமையாகவும் கருப்பர் வரிவார தெய்வமாகவும் காணப்படும்.அதுபோல்
புதுக்கோட்டை #வாரைவளர்வாராப்பூர் நாட்டில் ஐய்யனார் தலமை தெய்வமாகவும், கருப்பர்கள் பரிவார தெய்வமாகவும் உள்ளது.
கோவிலில் பலி கொடுப்பது கருப்பர், முனி, மல்கர் போன்ற தெய்வத்திற்கு கொடுக்கப்படுகிறது அப்போது ஐய்யனார் திரையிட்டு மூடப்படுவது வழக்கம்..

என்னதான் #மாசிமக திருவிழாவின் போது கருப்பருக்கு பில்லிசோறு, பலி படையல் செய்தாலும் தேரில் வலம்வருவது #ஐய்யனாரே..
சைவ கடவுளாக பேசப்படும் ஐய்யனார் தேரில் ஏறிய பிறகு தேர்காலடியில் 100 கணக்கான கிடாக்கள் பலி கொடுக்கப்படுகிறது!!

ஆனால் சாமி கருவரையில் இருக்கும்போது பலி கொடுக்கப்படுவதில்லை காரணம் என்னவோ??ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்