Posts

Showing posts from August, 2019

நெடுவாசல் அரையர்கள்

Image
நெடுவாசல் அரையர்கள் கள்ளரின் பன்றிகொண்டார் பட்டம் உடையவர்கள், இவர்கள் அம்புநாட்டு கள்ளர் குடிகளுள் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் அம்புநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து நெடுவாசல் பகுதியில் ஆட்சி செலுத்தி, அப்பகுதியின் அரையர்களாக மாறினர். #கள்ளர் சீமை சிலட்டூர்/ நெடுவாசல் ( 1788) தஞ்சை மராத்திய மன்னர் ஆவணங்களில் தஞ்சை மன்னர் அமரசிங்கு காலத்தல் கள்ளப்பற்று சீமையில் இருந்த ராமாசாமி பன்றிக்கொண்டாரின் பாளையப்பட்டு நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையம் ஆகியவற்றின் தாயாதி( ஆதி) கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட குறிப்பும் உள்ளது. நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையங்கள் இங்கு கள்ளர் சீமையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மன்னர் கிபி 1848 ல் நெடுவாசல் அரையரின் மகளை திருமணம் செய்துள்ளார். இவரிடம் 15 கிராமங்களில் 9532 ஏக்கர் அளவுக்கு நில உடைமையாளராக இருந்துள்ளதை கிபி 1879 ல் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பசும்பொன் தேவர் அய்யா

Image
பசும்பொன் தேவர் அய்யா : தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது . தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது.  அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா "அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த மடத்தில் பெளத்த மத தத்துவ விளக்கமளித்தார் . இதை கேட்ட பர்மிய குடியரசுத்தலைவரும்,பெளத்த தலைமை குருவுமாகிய "பாமோ" கிறுகிறுத்தார் . தேவர் அய்யாவை பாராட்டி பேசிவிட்டு "இந்துசமயப் புத்த மேதை " என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார் "பாமோ" . லிம்கார்னேக் மன்னர் தேவர் அய்யாவிற்கு அரச விருந்தளித்தார். அதில் அங்குள்ள முதலமைச்சர்,அமைச்சர் பெருமக்கள் கலந்துக்கொண்டு தேவர் அய்யாவை வாழ்த்தினார்கள் தேவர் அய்யா இமயமலைக்கு சென்று சிவானந்தர் தவமாளிகையில் தங்கினார். தேவர் அய்யா "இறையருள் திறம் " பற்றி சொற்ப்பொழிவு நிகழ்த்தினார். தவவேந்தர் சிவானந்தர் வியந்து 'வித்யாபாஸ்கரர், பிரவசனகேசரி " என்ற விருதுகளை தேவர் அய்யாவிற்கு வழங

ஸ்ரீஅத்திவரதப்பெருமான்

Image
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁       ஸ்ரீஅத்திவரதப்           பெருமான்      திருவடி போற்றி! (48 ஆம் நாள் நிறைவு      விழா தரிசனம்) 🍀🌻🍀🌻🍀🌻🍀🌻 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஐயெட்டு ஆண்டுகளாய் அனந்தநீர் சயனம்கொண்டு; உய்யட்டும் மக்களென உயர்வடிவாய் முகம்காட்ட; பெய்யட்டும் வான்அமுது பசுந்தளிராய் பயிர்செழிக்க; மெய்தொட்டு வணங்குகின்றோம் மீண்டுமுமைக் காண ஏங்கி...!🌷 🌹🌹🌹 மதுரை       🙏🙏🙏 சரவணன். 🌹🌻🌹🌻🌹🌻🌹🌻

பட்டுப் புடவையில் காட்சி தந்த அத்திவரதர்

Image
#காஞ்சிபுரம் அத்திவரதர்!! சுவாமிக்கு சாத்தும் ஒரு பட்டுப் புடவையில் காட்சி தந்த அத்திவரதர் பட்டுப்புடவை குள்ளே காட்சி தருவதை காணுங்கள் !! பட்டுத் தறி நெசவாளி அறிவு சார்ந்த கைத்திறன் !!! #காஞ்சி_நெசவாளிகள்

அத்தி வரதர் தரிசனம் நிறைவு

Image
🙏🙏🙏 16.08.2019 இன்றுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவு 🙏🙏🙏 மனம் கனக்கிறது வரதா.. மறுபடி...  நீ  நீருக்குள்ளா..? மூச்சுத் திணறுமோ உனக்கு..?! நினைவே.... மூச்சடைக்கிறதே எனக்கு.. உனக்கிது சம்மதம் தானா.. ? பெருமானே... நீயும் வருந்துகின்றனையோ...? பக்தரைப் பிரியும் துயரம் உனக்கெனில்.. உனைப்பிரிதலும் எமக்குச் சாத்தியமோ..? உன் புன்னகை முகம் மறக்க ஏலையே.....! உன் பூவலங்காரம் .. நெஞ்சு நிறைந்ததே.. தினமொரு பட்டு... நெய்தவர் யாரோ.. உன் திருமேனி தழுவுமென நினைத்திருப்பாரோ... எத்தனை கரிசனம்.. எத்தனை தரிசனம்..! காஞ்சீ மா நகரம் கண்டிலா வைபவம்..! நீராழி  மண்டப மீன்கள் துள்ளுதாம்.. நினையடையும் நாட்கள் மீண்டும் வந்ததே. ! நாற்பது ஆண்டில் மீண்டு நீ வருவாய்... கவிதை புனைந்திட நானிருப்பேனா..? ஆதலின் வரதா... அத்தி வரதா.. ஒன்று சொன்னேன்.. இன்றே சொன்னேன்.. பூமியில் தீமைகள் ஒழிப்பாய் இறைவா ! நன்மைகள் நிறைத்து நாட்டினைக் காப்பாய்.. மானிடர்க்கெல்லாம் நற்கதி யருள்வாய் ஆன்மிகம் தழைத்திட ஆவன செய்வாய் எம்குலம் வாழ எமக்கருள் செய்வாய்.. என்றும் உந்தன் திர

அருள்வாய் இன்பம்

Image
அருள்வாய் இன்பம்                           1403 உறங்கா துறங்கியும் நின்றும் புவிக்கு அருளும்  திருமாலே, நாரணா , பாரும் வளத்தில் அறத்தில் சிறந்தோங்க ஆசி அளித்தருளும்  நாதா  சரணம் . சரணம்  சரணமே  அத்தி வரதா அருளும் பொருளும்  அருளும் திருவே திருமாலே  பாரினைக் காப்பாய் சிறந்து . தரணியும் ஏத்துதே ,நின்  பாதம் . பாதம் பணிந்தே பரந்தாமா  ,பாவத்தைப் போக்குதே ,பக்குவம் பெற்றுச் சிறக்குதே நாரணா ,வாமனா , கூர்மா ,நரசிம்மா , பேரருள்  செய்வாய்   உயிர்க்கே . உயிர்க்குலம் உய்யவே ஓதினாய் கீதை , உலகிற்கே நீதிநெறி போதித்தாய் ,ஓங்கு அறங்காத்தாய் ,வேங்கட நாதா ,அய்யா அருள்வாயே மங்களம் எங்கும் . எங்கெங்கும் நீயாய் ஒளிர்கின்ற காசினியில் மங்களம் பூக்கும் பெருமாளே , சங்குடை சக்கரத் தாரியே, என்றென்றும் ஆனந்தம் மக்களுயிர்  வாழத்தான்  செய்வாய் . செய்வாய் சிறப்பென்று எண்ணம் மணந்தாலும் , சுற்றும் உலகினில்  ஆதிக்கம் மேயுதே , முற்றும் கெடுவினைகள்  ஆளுதே , நல்லாரும் பெற்றாரே. துன்பத்தை  நாதா . நாதனே நீர், நீரில்  நாற்பதாண்டு வாழ்ந்தாலும் பூ தலத்தில் மண்டலம் வாழ்ந்தாலும் நாளுமே நின்

ஸ்ரீ வானமுட்டி பெருமாள்

Image
ஶ்ரீஅத்திவரதரை இனி தரிசிக்க .... திவ்ய தேசம் - கோழிகுத்தி ஸ்ரீ வானமுட்டி பெருமாள் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது. மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள். எம்பெருமான் - ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி - பெருமாளின் திருமார்பில் குடிகொண்டிருக்கின்றாள்.. ஸ்ரீ பூமாதேவி ஸ்வாமியின் அருகிலேயே பொலிகின்றாள்.. தாயாருக்கு தனி சந்நிதி இல்லை.. உற்சவர் - யோக நரசிம்மர் ஸ்ரீ சத்ர விமானம் சதுர்

சென்று வாரும் அத்திவரதரே !

Image
சென்று வாரும் அத்திவரதரே ! நெஞ்சங்களை யெல்லாம் அள்ளிக்கொண்டு, நீர்மஞ்சத்தில் நித்திரை செய்வீராக!  அனந்தசரசை 48 நாள் கடைந்ததற்கே நாடு தாங்கவில்லையே. பாற்கடலை மீண்டும் கடைந்தால் ? குளத்தை கடைந்ததால் நீ வெளிவந்தாய் குளம் கடையப்பட்ட அதே நேரத்தில் மனித மனங்களும் கடையப்பட்டு ஆழத்தில் இருந்த பக்தியும் வெளிப்பட்டது வேரறுப்பேன் என்று வெறுத்ததவனும் வந்தான். கோட்பாடில்லா கொடியவரும் வந்தனர். பேட்டை தாதாவும் வந்தான். தள்ளாடும் தாத்தாவும் வந்தார். கலைத்துறையும் வந்தது. ரகளைதுறையும் வந்தது. சுக ஜனனமும் உன் சந்நிதியில் நிகழ்ந்தது. மரணமும் உன் எல்லையில் நடந்தது. முதல் தீர்த்தகாரரும், டாஸ்மாக் தீர்ததக்காரரும் ஒரே வரிசையில் நின்றனர். அத்தி அத்தி என்று உலகம் முழுவதும் இத்திக்கில் திரும்பி நோக்க வைத்துவிட்டு கண்வளர இதோ புறப்பட்டு விட்டாய்! , உன்னை கண்டவர் குதூகலிக்க காணாதவர் கலங்கி நிற்கின்றனர். தண்ணீரின் அடியில் இருந்து நீ அன்றாடம் ் அவர்களை  நோக்க  போகின்றாய் என்பதை அறியாதவரே கலங்குவர். . மவுரியம, குப்தம், சதவாகனம், பல்லவம், வாதாபி,சோழம், பாண்டியம், சேரம், சாளுக்கியம், கங்

கோகுலாஷ்டமி

Image
கிருஷ்ண ஜெயந்தி  ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது.  கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது. வட இந்தியாவில் ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.     தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று  இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் ம

கிருஷ்ண ஜெயந்தி

Image
கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்: கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா  கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும்  பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும். விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர்,  வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும்  வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்   இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே, அன்று வீட்டைச்  சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது  பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம் கண்ணனை பற்றிய துதிப்பாடல் பாடுவது, தோத்திர பாடல்கள் பாட வேண்டும்.------------

சீனிவாசப் பெருமாள்

Image
கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், ""யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?'' என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை  தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் த