அருள்வாய் இன்பம்
அருள்வாய் இன்பம்
1403
உறங்கா துறங்கியும் நின்றும் புவிக்கு
அருளும் திருமாலே, நாரணா , பாரும்
வளத்தில் அறத்தில் சிறந்தோங்க ஆசி
அளித்தருளும் நாதா சரணம் .
சரணம் சரணமே அத்தி வரதா
அருளும் பொருளும் அருளும் திருவே
திருமாலே பாரினைக் காப்பாய் சிறந்து .
தரணியும் ஏத்துதே ,நின் பாதம் .
பாதம் பணிந்தே பரந்தாமா ,பாவத்தைப்
போக்குதே ,பக்குவம் பெற்றுச் சிறக்குதே
நாரணா ,வாமனா , கூர்மா ,நரசிம்மா ,
பேரருள் செய்வாய் உயிர்க்கே .
உயிர்க்குலம் உய்யவே ஓதினாய் கீதை ,
உலகிற்கே நீதிநெறி போதித்தாய் ,ஓங்கு
அறங்காத்தாய் ,வேங்கட நாதா ,அய்யா
அருள்வாயே மங்களம் எங்கும் .
எங்கெங்கும் நீயாய் ஒளிர்கின்ற காசினியில்
மங்களம் பூக்கும் பெருமாளே , சங்குடை
சக்கரத் தாரியே, என்றென்றும் ஆனந்தம்
மக்களுயிர் வாழத்தான் செய்வாய் .
செய்வாய் சிறப்பென்று எண்ணம்
மணந்தாலும் ,
சுற்றும் உலகினில் ஆதிக்கம் மேயுதே ,
முற்றும் கெடுவினைகள் ஆளுதே , நல்லாரும்
பெற்றாரே. துன்பத்தை நாதா .
நாதனே நீர், நீரில் நாற்பதாண்டு வாழ்ந்தாலும்
பூ தலத்தில் மண்டலம் வாழ்ந்தாலும்
நாளுமே
நின்னருள் சீவனைக் காக்கும் , அறிவோமே ,
நிர்க்குணனே பூகாப்பாய் நீயே .
நீயே நெடுஞ்சுடர் ஆற்றலாய் பூரித்து
தீயர் வினையை எரிப்பாய் ,நெடுமாலே
தீராப் பிணியோடு ஏழ்மைப் பிணிகளை
சீரருளால் மாய்ப்பாயே நன்று .
நன்றதும் வாழ்வில் மலருமென எண்ணியே
மண்ணுயிரும் ஏங்குது , மானுடத்துள்
நின்றாளும்
மேல்கீழ் மதப்பேத ஆதிக்க கீழ்மையை
காலமும் கொல்லுவாய் நீயே .
நீயே எதிலுமெங்கும் நீர்நிலை நாட்டிடு
நீயே பொதுவுடமைக் காத்திடு , நாரணா
நீயே நிலம்நீர் நிலைத்தோங்கி காத்திடு
நீயருள்வாய்...
1403
உறங்கா துறங்கியும் நின்றும் புவிக்கு
அருளும் திருமாலே, நாரணா , பாரும்
வளத்தில் அறத்தில் சிறந்தோங்க ஆசி
அளித்தருளும் நாதா சரணம் .
சரணம் சரணமே அத்தி வரதா
அருளும் பொருளும் அருளும் திருவே
திருமாலே பாரினைக் காப்பாய் சிறந்து .
தரணியும் ஏத்துதே ,நின் பாதம் .
பாதம் பணிந்தே பரந்தாமா ,பாவத்தைப்
போக்குதே ,பக்குவம் பெற்றுச் சிறக்குதே
நாரணா ,வாமனா , கூர்மா ,நரசிம்மா ,
பேரருள் செய்வாய் உயிர்க்கே .
உயிர்க்குலம் உய்யவே ஓதினாய் கீதை ,
உலகிற்கே நீதிநெறி போதித்தாய் ,ஓங்கு
அறங்காத்தாய் ,வேங்கட நாதா ,அய்யா
அருள்வாயே மங்களம் எங்கும் .
எங்கெங்கும் நீயாய் ஒளிர்கின்ற காசினியில்
மங்களம் பூக்கும் பெருமாளே , சங்குடை
சக்கரத் தாரியே, என்றென்றும் ஆனந்தம்
மக்களுயிர் வாழத்தான் செய்வாய் .
செய்வாய் சிறப்பென்று எண்ணம்
மணந்தாலும் ,
சுற்றும் உலகினில் ஆதிக்கம் மேயுதே ,
முற்றும் கெடுவினைகள் ஆளுதே , நல்லாரும்
பெற்றாரே. துன்பத்தை நாதா .
நாதனே நீர், நீரில் நாற்பதாண்டு வாழ்ந்தாலும்
பூ தலத்தில் மண்டலம் வாழ்ந்தாலும்
நாளுமே
நின்னருள் சீவனைக் காக்கும் , அறிவோமே ,
நிர்க்குணனே பூகாப்பாய் நீயே .
நீயே நெடுஞ்சுடர் ஆற்றலாய் பூரித்து
தீயர் வினையை எரிப்பாய் ,நெடுமாலே
தீராப் பிணியோடு ஏழ்மைப் பிணிகளை
சீரருளால் மாய்ப்பாயே நன்று .
நன்றதும் வாழ்வில் மலருமென எண்ணியே
மண்ணுயிரும் ஏங்குது , மானுடத்துள்
நின்றாளும்
மேல்கீழ் மதப்பேத ஆதிக்க கீழ்மையை
காலமும் கொல்லுவாய் நீயே .
நீயே எதிலுமெங்கும் நீர்நிலை நாட்டிடு
நீயே பொதுவுடமைக் காத்திடு , நாரணா
நீயே நிலம்நீர் நிலைத்தோங்கி காத்திடு
நீயருள்வாய்...
Comments
Post a Comment