பசும்பொன் தேவர் அய்யா

பசும்பொன் தேவர் அய்யா :

தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது .

தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது.

 அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா "அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த மடத்தில் பெளத்த மத தத்துவ விளக்கமளித்தார் .

இதை கேட்ட பர்மிய குடியரசுத்தலைவரும்,பெளத்த தலைமை குருவுமாகிய "பாமோ" கிறுகிறுத்தார் . தேவர் அய்யாவை பாராட்டி பேசிவிட்டு "இந்துசமயப் புத்த மேதை " என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார் "பாமோ" .
லிம்கார்னேக் மன்னர் தேவர் அய்யாவிற்கு அரச விருந்தளித்தார்.

அதில் அங்குள்ள முதலமைச்சர்,அமைச்சர் பெருமக்கள் கலந்துக்கொண்டு தேவர் அய்யாவை வாழ்த்தினார்கள்

தேவர் அய்யா இமயமலைக்கு சென்று சிவானந்தர் தவமாளிகையில் தங்கினார். தேவர் அய்யா "இறையருள் திறம் " பற்றி சொற்ப்பொழிவு நிகழ்த்தினார்.

தவவேந்தர் சிவானந்தர் வியந்து 'வித்யாபாஸ்கரர், பிரவசனகேசரி " என்ற விருதுகளை தேவர் அய்யாவிற்கு வழங்கினார்.

மதுரை ஆதினம் தேவர் அய்யாவின் தெய்வ பணியை போற்றி " சன்மார்க்க சண்டமாருதம் "என்ற சிறப்பு பட்டம் சூட்டி பெருமைப்படுத்தியது. தருமைக்குருமணிகள் தேவர் அய்யாவின் திருப்பணியை போற்றி பொன்னாடை போத்தி மகிழ்ந்தது.

 வீரசவர்க்கார் "தென்னாட்டு திலகர் " என்று தேவருக்கு மகுடம் சூட்டினார் . நேதாஜி அய்யா "தென்னாட்டு போஸ் " என்று தேவர் அய்யாவிற்கு பட்டம் சூட்டினார் .

காசி இந்து பல்கலைக்கழகத்தில் அதன் துணை வேந்தர் உலகப்புகழ்வாய்ந்த அறிஞர் சி.பி .இராமசாமி அய்யர் தலைமையில் " இந்து சமயப்பண்புகள் " பற்றி அரியதோர் ஆங்கில உரையாற்றினார் தேவர் அய்யா .

 அதை கேட்டு வியந்த அறிஞர் சி.பி .இராமசாமி அய்யர் "உலகில் பெரும்பகுதியை ஆங்கிலம் ஆள்கிறது .ஆனால் அந்த ஆங்கில மொழியை எங்கள் தமிழ்நாட்டு பசும்பொன் சிங்கம் மூன்று மணிநேரம் அடக்கி ஆண்டுவிட்டது என்று உணர்ச்சிப்பொங்க புகழுரைத்தார்.

தேவர் அய்யா இளமையில் இருந்தே மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசையை துறந்தார் .தன் உடல்,பொருள்,ஆவியை இந்த நாட்டிற்காக அளித்தார் .

அதற்காக அவர் சிந்திய ரத்தம் ,செய்த தியாகம் ஆயிரமாயிரம். அவர் இந்த மண்ணில் வாழ்ந்த நாட்கள் 20075 ,நாட்டிற்காக சிறையில் இருந்த நாட்கள் 4000.

தெய்வத்திருமகன் நம் தேவர் அய்யா தமிழருக்காக ,நம் பண்பாட்டிற்காக ,நம் இந்திய திருநாட்டிற்காக, நம் நாட்டு மக்களின் நலனிற்காக மட்டுமே வாழ்ந்தார் .

 பிறந்தநாள் அன்று அடக்கம் செய்யப்பட்டு  இன்று நமக்கெல்லாம் தெய்வமாக வாழும் தேவர் அய்யாவின் புகழ் "கங்கையும் ,யமுனையும் பாயும்வரை ,இமயமும் குமரியும் நிலைத்து நிற்கும்வரை அழியாது "

புலவர் திரு. சங்கரலிங்கனார் அவர்களின் புத்தகத்திலிருந்து

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்