அத்தி வரதர் தரிசனம் நிறைவு


🙏🙏🙏 16.08.2019 இன்றுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவு 🙏🙏🙏

மனம் கனக்கிறது வரதா..
மறுபடி...  நீ  நீருக்குள்ளா..?
மூச்சுத் திணறுமோ உனக்கு..?! நினைவே....
மூச்சடைக்கிறதே எனக்கு..

உனக்கிது சம்மதம் தானா.. ?
பெருமானே...
நீயும்
வருந்துகின்றனையோ...?

பக்தரைப் பிரியும்
துயரம் உனக்கெனில்..
உனைப்பிரிதலும்
எமக்குச் சாத்தியமோ..?

உன் புன்னகை முகம்
மறக்க ஏலையே.....!
உன் பூவலங்காரம் ..
நெஞ்சு நிறைந்ததே..

தினமொரு பட்டு...
நெய்தவர் யாரோ.. உன்
திருமேனி தழுவுமென
நினைத்திருப்பாரோ...

எத்தனை கரிசனம்..
எத்தனை தரிசனம்..!
காஞ்சீ மா நகரம்
கண்டிலா வைபவம்..!

நீராழி  மண்டப
மீன்கள் துள்ளுதாம்..
நினையடையும் நாட்கள்
மீண்டும் வந்ததே. !

நாற்பது ஆண்டில்
மீண்டு நீ வருவாய்...
கவிதை புனைந்திட
நானிருப்பேனா..?

ஆதலின் வரதா...
அத்தி வரதா..
ஒன்று சொன்னேன்..
இன்றே சொன்னேன்..

பூமியில் தீமைகள்
ஒழிப்பாய் இறைவா !
நன்மைகள் நிறைத்து
நாட்டினைக் காப்பாய்..

மானிடர்க்கெல்லாம்
நற்கதி யருள்வாய்
ஆன்மிகம் தழைத்திட
ஆவன செய்வாய்

எம்குலம் வாழ
எமக்கருள் செய்வாய்..
என்றும் உந்தன்
திருவடி யருள்வாய்..

அத்தி வரதா..
காஞ்சி முனிவா..
நின் திருவடி சரணம்..
சரணம் தேவே..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

#காஞ்சிஅத்திவரதர்2019 💙💙💙

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்