நெடுவாசல் அரையர்கள்

நெடுவாசல் அரையர்கள் கள்ளரின் பன்றிகொண்டார் பட்டம் உடையவர்கள், இவர்கள் அம்புநாட்டு கள்ளர் குடிகளுள் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள்

அம்புநாட்டில் இருந்து இடம்பெயர்ந்து நெடுவாசல் பகுதியில் ஆட்சி செலுத்தி, அப்பகுதியின் அரையர்களாக மாறினர்.

#கள்ளர் சீமை சிலட்டூர்/ நெடுவாசல் ( 1788)

தஞ்சை மராத்திய மன்னர் ஆவணங்களில்

தஞ்சை மன்னர் அமரசிங்கு காலத்தல் கள்ளப்பற்று சீமையில் இருந்த ராமாசாமி பன்றிக்கொண்டாரின் பாளையப்பட்டு நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையம் ஆகியவற்றின் தாயாதி( ஆதி) கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட குறிப்பும் உள்ளது. நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையங்கள் இங்கு கள்ளர் சீமையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மன்னர் கிபி 1848 ல் நெடுவாசல் அரையரின் மகளை திருமணம் செய்துள்ளார்.

இவரிடம் 15 கிராமங்களில் 9532 ஏக்கர் அளவுக்கு நில உடைமையாளராக இருந்துள்ளதை கிபி 1879 ல் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்