Posts

Showing posts from November, 2017

சௌ சௌ

Image
நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ--------------------நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது  சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம்  சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9%  மாங்கனீசு கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.  வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை  குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில்  சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.  கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.

ஷத்திரியர்

Image
முதலாம் பராந்தகச் சோழனின் மாமனாரான குமரன் மறவனை பழுவூர் கல்வெட்டு ஷத்திரியன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்று குறிப்பிட்டு..இவர் மறவர் இனம் என்பதைக் காட்டவே இவன் முன்னோர்களும் வாரிசுகளும் ..தங்கள் பெயருடனேயே..மறவன் என்ற இனப் பெயரையும் இணைத்தே வழங்கி வந்தனர். இக்குமரன் மறவனின் அரசி..மழவரையர் பராந்தக வர்மர் உடன் பிறந்தவள் என்பதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், முக்கியமாக இன்றும் இவர் பெயரில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில், திருச்சி மாவட்டம், நங்கவரத்தில் உள்ளது. அக்கோயிலின் கல்வெட்டில் கோயிலைக் கட்டிய பழுவேட்டரையர் மறவன் கண்டன்..இக்கோயிலை.."மறவன் ஈசுவரம்" என்றே கல்வெட்டில் வெட்டி வைத்துள்ளார். எனவே, பழுவேட்டரையர், மழவரையர்.. முதலியோர்..மறவர்(கள்ளர்) இனம் என தெளிவாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு காலம் கிபி.893--913.கல்வெட்டு எண்S.I.I.XIII Ins.No.298 A.R.R.355 of 1924. சத்திரியன் பழுவேட்டரையன் குமரன் மறவனுக்கும் மழவரையர் பராந்தக வர்மரின் சகோதரிக்கும் பிறந்த நம்பிராட்டியார் அருள்மொழி நங்கையையே முதலாம் பராந்தகச் சோழன் மணந்து அரிஞ்சய சோழனைப் பெற்றா

சங்க கால மன்னர்கள்

Image
சங்க கால மன்னர்கள் Sangam Period Kings – The Name of the king – Poet with the song பட்டினப்பாலை -  சோழன் கரிகாலன் -  திருமாவளவன் என்றும் அவனுக்கு ஒரு பெயர் உண்டு  - ஆசிரியர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார் சிறுபாணாற்றுப்படை -  நல்லியக்கோடன் – ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார் முல்லைப்பாட்டு – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை -  ஆசிரியர் நப்பூதனார் நெடுநல்வாடை – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை -  ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் மதுரைக் காஞ்சி - பாண்டியன் நெடுஞ்செழியன் – ஆசிரியர் -  மாங்குடி மருதனார் மலைபடுகடாம் - நன்னன் – ஆசிரியர்  இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பெரும்பாணாற்றுப்படை - தொண்டைமான் இளந்திரையன் - ஆசிரியர் -  கடியலூர் உருத்திரங் கண்ணனார் பொருநராற்றுப்படை - சோழன் கரிகாலன் -  திருமாவளவன் என்றும் அவனுக்கு ஒரு பெயர் உண்டு –  முடத்தாமக் கண்ணியார் (பெண் புலவர்) Kings in Puranānūru அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி – Athiyamān Thakadūr Poruthu Veelntha Elini – Pur 230 அதியமான் நெடுமான் அஞ்சி – Athiyamān Nedumān Anchi – Pur 87, 88, 89,

கரிகால் சோழன் காலத்துப்பட்டங்கள்

Image
கரிகால் சோழன் காலத்துப்பட்டங்கள்-----அவைகூடி வந்தமர்ந்தான் மாமன்னன் பெருவளத்தான் கரிகாலன் உளமார வாழ்த்தினான் உய்யங்கொண்டான் பகைவரின் வருகை சொல்ல புயல் போல் வந்தான் புரங்காட்டான். பகையார் படையுடன் வரும் செய்தி பகிர்ந்தான் பணிபூண்டான் எடுத்துரைத்தான் பேரறிவு ஒளிகொன்டான் கொதித்தெழுந்தான் அரசுக்குடையான். அண்டமும் நடுங்க ஆவேசம் கொண்டான் அடங்காபிரியன் சிலிர்த்தெழுந்தான் சிலுப்பியன். போர் ஒன்றே முடிவு என்றான் போர்பொருக்கியான் களம் கான துடித்தான் காங்கேயன் இராசதந்திரம் பகின்றான் இராசகண்டியன் இசைவுடன் கண் அசைத்தான் இராசப்பிரியன் ஒற்றையர் படை தந்தான் ஒற்றையன் எதிரியின் பலம் படித்தான் எண்ணாட்டுப்பிரியன் தலை அசைத்து ஆமோதித்தான் ஆளியான் போர் விளைவினை விவாதித்தான் போர்முட்டியான் கலங்காமல் போர் இலக்கனம் தொகுத்தான் கரைமீண்டான் காவலில் தன் பங்கை எடுத்துரைத்தான் காவல்குடியான் மதிணுற்பம் பகின்றான் மழநாட்டு மழவராயன் அணிகலன் திரட்டினான் ஐந்னூற்றுப்பிரியன் சேனை திரட்டினான் சேதி நாட்டான் சேதிராயன் நம் படை பலம் பகன்றான் வில்லேந்தி வில்லவராயன் வியூகமமைதான் விஞ்சிராயன். த

கிளி சோழன்

Image
கிளி சோழன் என்று அழைக்கப்பட்ட கிள்ளி வளவன்-----வேட்டைக்கு சென்றிருந்த மன்னன் ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறிய போது மரத்தில் இருந்த கிளி சொல்வதைக்கேட்டு .மண்மூடியிருந்த ஸ்ரீ ரங்கம் கோயிலைக்கண்டு பிடித்து மீண்டும் கோயிலை எழுப்பியவன்.இவன் கட்டிய மண்டபம் கிளி மண்டபம் என ஸ்ரீரங்கத்தில் உள்ளது.-----கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய

வீரமங்கை வேலு நாச்சியார்

Image
வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாறு ================================ 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் அருகில் உள்ள சக்கந்தி என்னும் ஊரில், முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி (இராமநாதபுர மன்னர்) - முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். பெண் எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியாகி சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனைய

தாராசுரம்

Image
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி 'மினியேச்சர்' சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான். ராஜராஜனும் ராஜேந்திரனும் "மகேஸ்வர சிவம்" என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டினர். ஆனால் இரண்டாம்

மூன்றாம் இராசசிம்ம பாண்டியன்

Image
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தகப் பாண்டியனின் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன்,இராச சிகாமணி,சீகாந்தன்,மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம்,தேவதானம்,பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான். மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள் 1-மந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு. 2-முதற் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 3-பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிர

பராந்தகப் பாண்டியன்

Image
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். அண்ணனின் இறப்பிற்குப் பின்னர் முடிசூட்டிக் கொண்டான். சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான். பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள் கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம், பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான்.

வரகுண வர்மன்

Image
வரகுண வர்மன் கி.பி. 862 முதல் 880 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.சடையவர்மன் என்ற பெயரையும் பெற்றிருந்த இம்மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் எனவும் அழைக்கப்பட்டான்.பாண்டியன் சீவல்லபனின் முதலாம் மகனான இவன் தனது தந்தை கி.பி. 862 ஆம் ஆண்டு இறந்த பின்னர் பட்டம் பெற்றான்.பல்லவ மன்னனான நிர்மதுங்கவர்ம பல்லவனுடனான நட்பின் காரணமாக பாண்டிய,பல்லவப் போர் இவன் காலத்தில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. வரகுண வர்மன் ஆற்றிய போர்கள் கி.பி. 880 ஆம் ஆண்டில் பெரும்படையுடன் வரகுணவர்மன் சோழநாட்டின் மீது படையெடுத்து அங்கு காவிரியின் வடக்கே உள்ள மண்ணி நாட்டில் இடவை என்ற நகரை வென்றான்.ஆதித்த சோழனுடன் போர் புரிந்து அவனை வெற்றி கொண்டான்.இடவை நகரில் தன் பாட்டன் கட்டிய அரண்மனையினைக் கைப்பற்றினான்.அபராஜித வர்ம பல்லவன் வரகுண வர்மனை வெல்ல நினைத்து ஆதித்த சோழனுடனும்,கங்க நாடன் பிருதிவிபதியுடனும் வந்தான்.திரும்புறம் பயப்போரில் கங்கன் இறந்து சோழ,பல்லவ மன்னர்கள் வெற்றி பெற்றனர்.பாண்டியன் தோல்வியுற்றான்.கங்க மன்னனுக்கும்.பல்லவ மன்னன் ஒருவனுக்கும் உதிரப்பட்டியிலும்,கச்சியாண்டவர் கோயிலிலும் நடுகற

இரண்டாம் இராசசிம்மன்

Image
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான்.இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான்.இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள்,பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீவல்லபன்

Image
சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான்.மாறவர்மன்,ஏகவீரன்,பரசக்கர கோலாகலன்,அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான்.வரகுண வர்மன்,பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர்.இவனது சிறப்புப்பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீவல்லபன் ஆற்றிய போர்கள் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதுபடிசீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான் மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான்.மேலும் இவனது படை குண்ணூர்,சிங்களம்,விழிஞம்,ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.குடமூக்கில் கங்கர்,பல்லவர்,சோழர்,காலிங்கர்,மாசுதர் ஆகிய மன்னர்களி

பராந்தகன்

Image
பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினைப் பெற்றவன். கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் தாயாவாள் கி.பி. 765 முடிசூடிக் கொண்ட இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றவன். இவனைப் பற்றிய தகவல்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும், சீவர மங்கலச் செப்பேடுகளிலும், ஆனைமலை,திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பராந்தகன் ஆற்றிய போர்கள் கி.பி. 767 ஆம் ஆண்டளவில் பல்லவ அரசன் ஒருவனைக் காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில் போர் செய்து வெற்றி பெற்றுப் பின் ஆய்வேளையும், குறும்பரையும் கொங்கு நாட்டில் வென்றவன் பராந்தகன் என வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீவரமங்கலச் செப்பேடு கூறும் தகவலின் படி வெள்ளூர், விண்ணம், செழியக்குடி ஆகிய ஊர்களில் நடந்த போர்களில் பகைவர்களை பராந்தகன் அழித்தவனெனவும், காவிரி ஆற்றின் வடகரையில் ஆயிரவேலி, பயிரூர், புகழியூர் போன்ற இடங்களில் அதியமான் மரபினன் அதியமானைப் போரில் புறங்கண்டான் பராந்தகன் எனவும், அதியமானுக்கு உதவியாக சேர

கோச்சடையான்

Image
ரணதீரன் கோச்சடையானின் மகன் -----பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான்.மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான். கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும்,தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர்,நெடுவயல்,பூவலூர்,கொடும்பாளுர்,பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன்.பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய நந்திவர்மனும் படையுடன் வந்தான் இதனை அறிந்த பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான்.நென்மேலி,மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான் என திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது. கொங்கு நாட்டுப் போர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்த பாண்டியன் பராங்குசன

பண்டார வன்னியன்

Image
பண்டார வன்னியன்" என்ற ஈழத்து அரசனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்காக திரு வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரத்தை மேற்கோள் காட்டி "பண்டார வன்னியன்" கள்ளர் நாடு என்று அழைக்கப்படும் தஞ்சை பகுதி ஒரத்தநாடு என்ற இடத்தில் இருந்து சென்றவன் என்றும், அவர் தஞ்சை கள்ளர் குலத்தில் மிக முக்கியமான பட்டமான "வன்னியர் " பட்டத்தை தரித்தவன் என்றும் காட்டுகிறார் (குறிப்பு : இப்போது இருக்கிற தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் தலைவரும் வன்னியர் என்ற பட்டம் கொண்டவர், அவர்  டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H ).   பண்டார  வன்னியனின்  தங்கையையும் காதலியையும் நாச்சியார் என்று காட்டுகிறார் கலைஞர் கூறுமிடத்தே   "பாயும் புலி பண்டாரக வன்னியன் எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன்". கலைஞர் அவர்களை பற்றி நமக்க

குளக்கரை

Image
குளக்கரை முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின இந்தக் குளக்கரையில் நான் நடந்து இன்றுதான் மீண்டும் நடைபயில்கிறேன் காலில் பரவசம் நெஞ்சில் வலி அன்று கூவிய பறவைகளில் ஒன்றையும் காணோம்! எந்த மழையில் எந்தக் கோடையில் மாண்டிருக்குமோ? அன்று குடைபிடித்த மரங்களில் ஏதுமில்லை இப்போது கதவாய் - சாம்பலாய் எவ்வடிவம் பூண்டனவோ? உள்ளிருந்த அல்லிகள் பூண்டற்று அழிந்தன இலங்கைத் தமிழராய் இடம்பெயர்ந்து போயினவோ? அன்று சேலையைக் கல்லிலும் மார்பால் மனசையும் துவைத்துப் பிழிந்த பெண்கள் மூத்து முதிர்ந்தாரோ செத்தழிந்து போனாரோ? அன்று தத்தியெறிந்த தவளைக்கல் தூர்வாரக் குளத்தாழத்தில் கிடக்குமோ? கிடக்காதோ? இப்போதென் நுரையீரல் நிறைப்பது சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ? புழுதிசுமந்த புதிய காற்றோ? அதோ ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல் வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள் நான் அன்றுகண்ட மங்கையரோ இல்லை முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ? அன்று குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா இன்று முக்குளித்தால் கிட்டுமோ? கிட்டாதோ? பூமியின் முகத்தில் காலத்தின் கீறல்கள் எல்லாம் எல்லாம் மாறித் தேய்ந்தன