பராந்தகப் பாண்டியன்
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். அண்ணனின் இறப்பிற்குப் பின்னர் முடிசூட்டிக் கொண்டான். சேர மன்னன் ஒருவனின் மகளான வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலியில் சேரமாதேவி என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே மூன்றாம் இராசசிம்மன் ஆவான்.
பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள்
கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு பிரமதேயம், பள்ளிச் சந்தகளும் அளித்து உக்கிரகிரியில் பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்கிரன் கோட்டை என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான்.

Comments
Post a Comment