சேரமான் பெருமாள்
சேரமான் பெருமாள் சேரமான் பெருமாளும் கொங்கு நாடும் சேரமான் கயிலை சென்றது.......... வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம் கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால் கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல் தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே (கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு 'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில், ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குட