கிள்ளிவளவன்

கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன்

கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும், நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி, காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி, வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான். இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது. தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்களே தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன் என்னும் பட்டங்களை கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாறாகும். காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாறாகும்.------படம்: கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்