சேயோன்

பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.
மத்திய அமெரிக்காவின் மாயன் நாகரிகமும், கிழக்காசிய நாடுகளில் ஜாவா, பாலி முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய சர்.ஜான் மார்ஷல் என்பவர் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது என கூறுகிறார்.
மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,  'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடிய பாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (இன்று ஆராய்ச்சியாளர்களும் பூமியில் மூன்று விதமான மனிதர்களாக வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன் என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்