Posts

Showing posts from 2016

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

Image
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அவ்வாறு  கூ றியுள்ளார்.சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட நூல் தொல்காப்பியம். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது.  காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. வடிம்பு, சொல்விளக்கம் வடிம்பு என்பது உள்ளங்கால், உள்ளங்கை முதலானவற்றின் விளிம்பு. கை, கால் வடிம்புகளில் (விளிம்புகளில்) குவளைப் பூக்களை நிறுத்தி, மகளிர் பொய்தல் விளையாடினர்.

முடத்திருமாறன்

Image
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை.     கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன். இவனது பாடல்கள் சொல்லும் செய்தி இவன் இந்தப் பாடலில் குட்டுவன் என்னும் சேர மன்னனின் குடவரையைக் குறிப்பிடுகிறான். குட்டுவன் குடவரை குட்டுவன் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவைச் சூடித் தலைவியின் கூந்தல் மணக்குமாம். குடமலை என்றால் மேலைமலைத்தொடர். குடவரை என்றால் கொல்லிமலை. பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலத்து இடைவழியில் தன் காதலி தன் பிரிவால் படும் துன்பத்தை எண்ணுகிறான். கலங்குகிறான். அவன் சென்ற பாலைவழி இலவமரத்த

தலையாலங்கானத்துச்செருவென்றபாண்டியன்

Image
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் - பசும்பூண் பெயருடன் பாண்டியர்களை சங்க இலக்கியங்களில் ஐந்து பாடல்களும் , தொல்காப்பிய பொருளதிகாரக் களவியலுக்கு நச்சினார்க்கினியார் உரையும் , பசும்பூண் வழுதி என்னும் பெயருடன் நக்கீரர் பாடலிலும் குறிப்புகள் உண்டு. தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலேயே இவ்வெற்றியை பெற்றதால் அவனுக்கு பசும்பூண் பாண்டியன் என பெயர் அமைந்திருக்கலாம்.     மேலும் தலையாலங்கானத்துச் செழியனை பாடிய இடைக்குன்றூர் கிழார் இவனை பசும்பூண் செழியன் எனப் பாடியுள்ளார். தலையாலங்கானத்துச் செழியனைப் பற்றி பல பாடல்கள் இயற்றிய நக்கீரர் இவனை பசும்பூண் பாண்டியன் , பசும்பூண் வழுதி  என்றும் பாடியுள்ளார். நக்கீரர் தந்தையான மதுரை கணக்காயனார் , பரணர் , மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், இவனை பசும்பூண் பாண்டியன் எனப் பாடியுள்ளனர்.     மேற்கண்டவற்றிலும் பரணர் செழியன் பெயரைக் குறித்து இவன் கூடற்பறந்தலை போரில் பெற்ற வெற்றியை பாடியதால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் முனைவர் வ. குருநாதன்..     பசும்பூண் பாண்டியன் என்னும் அடைமொழியைக் கொண்டு மட்டும் இவனை வேறு

தங்க விமானம்

Image
தஞ்சை பெரிய கோயிலைக்கட்டிய இராசராச சோழன்,விமானம் முழுவதும் தங்கத் தகடுகள் போர்த்தியதாக “ராஜராஜீஸ்வரமுடையார், ஸ்ரீவிமாநம் பொன் மேய் வித்தான்….” என்று தனது கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கி.பி.,1310 மற்றும் 1318ல் முறையே அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் கபூராலும் குஸ்ரூகானாலும் பெரிய கோயிலின் செல்வங்கள் யாவும் கொள்ளை அடிக்கப்பட்டன. பெருவுடையார் கோயிலில். ராஜராஜசோழன் தன் கல்வெட்டு ஒன்றில் “தாய்மண் காக்க உதிரம்கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலங்களை கொடையை அளித்துள்ளதை பொறித்து வைத்துள்ளார்.. மேலும்,போருக்குச்சென்ற தன்னுடைய படைத்தளபதிகள் உறுப்புகள் எவ்வித ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டுமென்று தஞ்சை பெருவுடையாரை (சிவனை)வேண்டி நிவந்தங்கள் விட்டுள்ள செய்திகளும் பெரியகோயில் கல்வெட்டுக்களில் உள்ளன.

திருவாலங்காட்டுச்செப்பேடுகள்

Image
திருவாலங்காட்டுச் செப்பேடுகள், ஆதித்தன் மறைந்தான். கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான். இதை, அருண்மொழியில் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும்,     அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பை மேற்கொண்டான

பெரியதேவர்

Image
“பெரியதேவர்” இராசராச சோழன்  பேரரசன் இராசராச சோழன் தேவர் குலத்தில் பிறந்தவர் என்பதை வரலாறுகள் மிகச்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகத்தை பரப்பிய தமிழ் மாமன்னர் இராசராசசோழன்,உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுடையவர் என்பது மறுக்கமுடியாத, மறுக்கக்கூடாத உண்மை. ஆனால், அவர்” போர்த் தொழில் உரிமையி லெய்தி யரசு வீற்றிருந்து. . . “ என்று வீர்ராசேந்திர சோழதேவரின் கல்வெட்டுக்கூறுவதும், கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார் பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து -- இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203, முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம்

பசும்பொன்_தேவர்

Image
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள்,.. ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்...? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்... #பசும்பொன்_தேவர்

சேதுபதி

Image
*வெளியே விட்டால் வெள்ளக்காரன் வம்சத்தையே துவம்சம் செய்து விடுவார் என்று கொலநடங்கி ஜார்ச் கோட்டையில் 17 வருடம் அடைத்து வைக்கப்பட்ட  மாபெறும் மாவீரன் சேதுபதிசீமையின் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி "

இயற்கை விவசாயி

Image
இயற்கை விவசாயி வைரக்கண்ணு  ( ஆண்டு வருமானம் 13 லட்சம்  8 ஏக்கர் ) உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது.    அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்'' -இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், 'ஜீரோ பட்ஜெட் பிதாமகன்' சுபாஷ் பாலேக்கர்... போன்ற வேளாண் ஆர்வலர்களும், விவசாயப் பொருளியல் நிபுணர்களும் இப்படித்தான் வலியுறுத்திக் கொண்டுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்' எனும் இந்தக் கோட்பாடு, இடையில் பசுமைப் புரட்சி

விவசாயம்

Image
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு.. உணவைச் சம்பாதிக்க விவசாயம் மட்டும்தானே இருக்கு.நம் நாடு விவசாயத்தை நம்பி இருக்கிறது.அதை வளப்படுத்தி தேசத்தை க்காப்போம்.

சல்லிக்கட்டில்

Image
சல்லிக்கட்டில் விடப்படும் காளை மாடுகள்  அனைத்தும் காயடிக்கப்படாத மாடுகள்.இனவிருத்தியில் முதன்மையானவை. வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் மாட்டு வண்டி பந்தயங்களில் பயன் படுத்தப்படும் காளைகள் காயடிக்கப்பட்டவை.............சல்லிக்கட்டைக்காப்போம்.

பெருநற்கிள்ளி

Image
பெருநற்கிள்ளி ------சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம். தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க. (புறம். 367) பெருங்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையன் என்ற தலைவன் சோழ மன்னனுக்

சிவாஜி

Image
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அரிய புகைப்படங்கள்...இன்று அவருடைய பிறந்தநாள்...அவரைப் போற்றி மகிழ்வோம்

சிம்மக்குரலோன்

Image
கலைத்தாயின் மூத்த மகன்,நடிப்பின் சிகரம்,சிம்மக்குரலோன்,இமயம் தொட்ட கலைஞன்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.அவர் புகழ் ஓங்குக.

நடிகர் திலகம்

Image
அக்டோபர் 1: நவரசங்கள் காட்டி பரவசமூட்டிய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று! நடை, உடை, பாவனை, குரலில் ஏற்ற இறக்கம், உடல்மொழி என அனைத்திலும் உச்சம் தொட்ட கலைஞனுக்கு, தமிழ்த் திரையுலக ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத இடம் உண்டு!

திருமங்கையாழ்வார்

Image
திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.  பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.  நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.  இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால்

இளஞ்சேட்சென்னி

Image
இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர். கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது. இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச்

குலோத்துங்க சோழன்

Image
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம். இந்த ஊருக்கு திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே இராசேந்திரச் சோழன் இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான். கம்பகேசுவரர் திருக்கோயிலின் கோபுரம். இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சௌராட்டிரர் பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச்சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும்

மானம்பாடி

Image
மானம்பாடி கும்பகோணம்- திருப்பனந்தாள் பெருவழியில் சோழபுரத்தை ஒட்டி மானம்பாடி என்னும் சிற்றூர் ஒன்றுள்ளது. இங்குள்ள சிவாலயம் இராஜேந்திரனின் பிறிதோர் படைப்பான பழையாறை பஞ்சவன் மாதேவீச்சரத்தினை ஒத்தே காணப்படுகிறது. இவ்வழகிய கற்றளியில் தென்புரத்தில் நடராஜப் பெருமாளின் தேவகோஷ்டம் ஒன்றுள்ளது. இக்கோஷ்டத்தை ஒட்டிய சுவரில் மாமன்னன் இராஜேந்திர சோழனும் அவனது தேவியும் மற்றும் சுற்றத்தாரும் ஆடல்வல்லானை வணங்கும் கோலத்தில் காட்சி நல்குகின்றனர்.

கர்நாடகத்தில் நீர் பாசனம்

Image
பெரிய அணையில் இருந்து 200கி.மீ. தொலைவில் உள்ள சிறு சிறு குளங்களுக்கு கூட கர்நாடகத்தில் பெரிய குழாய்கள் மூலம் நீர் கொண்டுவந்து எவ்வாறு நிரப்புகிறார்கள் பாருங்கள்.... அவர்களிடம் ஆற்றின் பெருநீருக்குப் பதிலாக ,சிறுநீராவது கேட்டுப்பெற்று குடித்தாலாவது நீர் மேலாண்மை பற்றி சற்றேனும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறிவு வரும்.... இங்கு தாலி அறுப்பு போராட்டத்திலும், கைதிக்கு அபிசேகம் ஆராதனை செய்வதிலும்,தேர்தல் நிதி வேண்டும் என்று உண்டியல் குழுக்குவதிலும் நேரம் சரியாக இருக்கிறது...மக்களை பற்றி சிந்திக்க எங்கு நேரம் இருக்கிறது?!..... இந்த மாதிரி தண்ணி கெடைக்காம விவசாய நிலங்களை சுருக்குனா தானே மீத்தேன் திட்டம் நிறைவேற்ற முடியும்,கெயில் பைப் லைன் போட முடியும், கோக் பெப்சி கம்பெனி கட்ட முடியும், இன்னும் எல்லா இடங்களிலும் சிப்காட் நிறுவனம் ஆரம்பித்து நாசமா போக முடியும்.. அணை,ஏரி , குட்டை போன்றவை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தபட்டது.. கிணறு,குளம் போன்றவை குடிநீர் ஆதரங்கள்... விவசாயத்துக்கு சேரவேண்டிய நீரை குடிநீருக்கு கொடுத்ததால் பணம் தின்னி நாய்கள் குடிநீர் ஆதாரங்களை அழித்துவிட்டனர்... விவச

செப்பேடுகள்

Image
செப்பேடுகள்:-------தமிழில் ராமாயணக் காவியத்தைப்பாடிய கம்பருக்குக் குலோத்துங்க சோழன் நன்கொடை வழங்கிய போது இவ்வாறு எழுதினான்."பூமி ஆகாசம் உள்ள வரைக்கும் --பொன்னி நதி உள்ள வரைக்கும் --குலோத்துங்க சோழ ராசா --கையெழுத்து நாட்டிக் --கம்பருக்குத் தந்தோம்!!!".

மருது பாண்டிய மன்னர்கள்

Image
இந்திய சுதந்திரத்துக்கு அன்றே  குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர்

Image
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[2] அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.     கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்     இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ

சங்கரன் கோயில் ஆடித்தவசுத் திருவிழா

Image
சங்கரன் கோயில் ஆடித்தவசுத்திருவிழா.........சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான். கொடியேற்று விழா ஆண்டுதோறும் ஆனிமாதம் சதுர்த்தி திதியும், மகம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், சங்க்கரநயினார் கோவில் திருத்தலத்தின் தென்பகுதியில் கோயில் கொண்டிருப்ப

சங்கரன் கோயில் சரித்திர வரலாறு

Image
சங்கரன் கோயில் சரித்திர வரலாறு -கல்வெட்டு தச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம். சாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது. உக்கிரபாண்டியர் இக்க