Posts

Showing posts from October, 2014

"முத்து ராமலிங்கம், என் தம்பி"

Image
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார். கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.

தேவர்

Image
தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். இந்நாட்டிற்ககாக வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர்.

அவனன்றி யோரணுவும்

Image
அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய ஆப்தர்மொழி யொன்றுகண்டால் அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை அறிந்தார்கள் அறியார்களார் மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுமவரார் மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும் வன்மையொ டிரக்கமெங்கே புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம் பூதபே தங்களெவிடம் பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு பொறைபொறா மையுமெவ்விடம் எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர் யாதுமுனை யன்றியுண்டோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே------தாயுமானவர ்

தேசியமும் தெய்வீகமும்

Image
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்------தேவர்

இவரா ஜாதிய வாதி?

Image
அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு போடும் தினத்தன்று ஒரு வாக்குசாவடிக்கு செல்கிறார் அப்போதைய முதல்வர் காமராஜர் வரிசையிலே நான்கு பார்வையற்றவர்கள் அங்கு வந்தனர் அது 1957 ஆம் ஆண்டுகளில் இன்று மாதிரி ஓட்டு இயந்திரமெல்லாம் கிடையாது ஓட்டு சீட்டு தான் பார்வையற்றவர்கள் ஓட்டு போட அங்கிருக்கும் இருவர் உதவி செய்ய வேண்டும் அதாவது அவர்கள் சொல்லும் சின்னத்திற்கு ஒருவர் ஓட்டு போட மற்றவர் அதை உறுதி செய ்யவேண்டும் ஓட்டு பெட்டி இருக்குமிடத்திற்கு பார்வையற்றவர்களை அழைத்துச்செல்கிறார்கள் காமராஜரும் அங்கிருந்து வெளியேற சரியாக இருந்த நேரம் பார்வையற்றவர்கள் சொன்ன வார்த்தை காமராஜரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்படியே வந்து வண்டியில் ஏறியவர் தனது டிரைவரிடம் இந்த முறையும் அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் தோற்கும் என்றாராம் எப்படி என வினவிய டிரைவிரிடம் காமராஜர் கூறியது “பார்வையற்றவர்கள் தான் அங்கிருப்பது தெரியாமல் “சிங்கம்”சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என கத்தி சொன்னதை வைத்து தான் சொல்கிறேன் காதில் விழும் செய்தியை வைத்தே இவர்கள் மனது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அறிந்திருக்கிறது” மற்றவர்கள் ம

மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள்.

Image
மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள். ------ இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்) பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் . கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது.  இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார். சிறப்புப் பெயர்கள் - 42 1. இராசகண்டியன் 2. இராசசர்வக்ஞன் 3. இராசராசன் 4. இராசகேசரிவர்மன் 5. இராசாச்ரயன் 6. இராசமார்த்தாண்டன் 7. இராசேந்திரசிம்மன் 8. இராசவிநோதன் 9. இரணமுகபீமன் 10. இரவிகுலமாணிக்கன் 11. இரவிவம்சசிகாமணி 12. அபயகுலசேகரன் 13. அருள்மோழி 14. அரிதுர்க்கலங்கன் 15. பெரியபெருமாள் 16. அழகியசோழன் 17. மும்முடிச்சோழன் 18. பண்டிதசோழன் 19. நிகரிலிசோழன் 20. திருமுறைகண்டசோழன் 21. செயங்க

தெய்வத்திருமகனார் சாதித்தலைவரா?

Image
தெய்வத்திருமகனார் சாதித்தலைவரா?சொல்லுங்கள் இல்லை என்று.-----1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந் த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர். பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே. அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர்.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!!

Image
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத ்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும்; முகமும் பொலிவடையும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறை

வாளுக்குவேலித்தேவர்

Image
வாளுக்குவேலித்தேவர் தனது உதவியாளராக, மேலாளராக உடன் வைத்திருந்த மேகநாதன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர். தனது அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருந்த மேகநாதனுக்கு சமயலறை வரை சென்று மேலாண்மை செய்யும் உரிமையைக் கொடுத்திருந்த வாளுக்குவேலி அவரைத் தனக்கு நிகராக அமர வைத்தே பேசுவார். இது பிறநாட்டு அம்பலகாரர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஒருமுறை "ஒரு தீண்டத்தகாதவனுக ்கு சரிக்கு சமமாக உரிமை கொடுத்து வைத்திருக்கும் பாகனேரி அம்பலகாரரின் வீட்டுக்கா சென்று உணவுண்பது!!!" என்று கூறி வாளுக்குவேலியின் வீட்டுக்கு விருந்துக்கு வர மறுத்தார் சக மன்னரான பட்டமங்கல அம்பலகாரர், வல்லத்தரையன். இவற்றையும் மீறி மேகநாதனுக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்து எப்போதும் உடனே வைத்திருந்தார் வாளுக்குவேலி. "இறைவனின் படைப்புகள் அனவரும் சமமே, எந்த ஏற்ற தாழ்வும் கடவுள் படைக்கவில்லை" என்பார் வாளுக்குவேலிஅம்பலம். எம்மினம் யாரையும் ஒடுக்க முனைந்ததில்லை, ஏற்ற தாழ்வு பார்த்ததில்லை, சமூக ஒருமைப்பாடையே முன்மொழிந்துள்ளனர் என்பதற்கு சான்றுகளாக வரலாற்றில் பறைசாற்றி நிற்கின்றன புலித்தேவன்-ஒண்டிவீரன், வாளுக்குவேலித்த