இவரா ஜாதிய வாதி?

அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு போடும் தினத்தன்று ஒரு வாக்குசாவடிக்கு செல்கிறார் அப்போதைய முதல்வர் காமராஜர்

வரிசையிலே நான்கு பார்வையற்றவர்கள் அங்கு வந்தனர் அது 1957 ஆம் ஆண்டுகளில் இன்று மாதிரி ஓட்டு இயந்திரமெல்லாம் கிடையாது ஓட்டு சீட்டு தான்

பார்வையற்றவர்கள் ஓட்டு போட அங்கிருக்கும் இருவர் உதவி செய்ய வேண்டும் அதாவது அவர்கள் சொல்லும் சின்னத்திற்கு ஒருவர் ஓட்டு போட மற்றவர் அதை உறுதி செய்யவேண்டும்

ஓட்டு பெட்டி இருக்குமிடத்திற்கு பார்வையற்றவர்களை அழைத்துச்செல்கிறார்கள் காமராஜரும் அங்கிருந்து வெளியேற சரியாக இருந்த நேரம் பார்வையற்றவர்கள் சொன்ன வார்த்தை காமராஜரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது

அப்படியே வந்து வண்டியில் ஏறியவர் தனது டிரைவரிடம் இந்த முறையும் அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் தோற்கும் என்றாராம் எப்படி என வினவிய டிரைவிரிடம் காமராஜர் கூறியது

“பார்வையற்றவர்கள் தான் அங்கிருப்பது தெரியாமல் “சிங்கம்”சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என கத்தி சொன்னதை வைத்து தான் சொல்கிறேன் காதில் விழும் செய்தியை வைத்தே இவர்கள் மனது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அறிந்திருக்கிறது”

மற்றவர்கள் மனநிலையைப் பற்றி நாமே புரிந்து கொள்ள வேண்டியது தான் என்றாராம் ஆம் இறுதியில் வெற்றி பெற்றதும் சிங்கம் சின்னம் தான் சிங்கம் சின்னத்தில் நின்ற வேட்பாளர்
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்கள்(அருப்புக்கோட்டை தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் வெகு சொற்ப்பம் என்பது கூடுதல் தகவல் இவரா ஜாதிய வாதி)

தகவல்;- நேதாஜி மாத இதழ்

பகிர்தல்;- ஆனந்த் தேவன்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்