வாளுக்குவேலித்தேவர்

வாளுக்குவேலித்தேவர் தனது உதவியாளராக,
மேலாளராக உடன் வைத்திருந்த மேகநாதன்
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர். தனது அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருந்த
மேகநாதனுக்கு சமயலறை வரை சென்று மேலாண்மை செய்யும்
உரிமையைக் கொடுத்திருந்த
வாளுக்குவேலி அவரைத் தனக்கு நிகராக அமர வைத்தே பேசுவார்.

இது பிறநாட்டு அம்பலகாரர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஒருமுறை "ஒரு தீண்டத்தகாதவனுக
்கு சரிக்கு சமமாக
உரிமை கொடுத்து வைத்திருக்கும்
பாகனேரி அம்பலகாரரின்
வீட்டுக்கா சென்று உணவுண்பது!!!"
என்று கூறி வாளுக்குவேலியின் வீட்டுக்கு விருந்துக்கு வர மறுத்தார் சக மன்னரான
பட்டமங்கல அம்பலகாரர், வல்லத்தரையன்.

இவற்றையும் மீறி மேகநாதனுக்கு முக்கியப்
பொறுப்புகளைக் கொடுத்து எப்போதும் உடனே வைத்திருந்தார் வாளுக்குவேலி. "இறைவனின் படைப்புகள் அனவரும் சமமே, எந்த ஏற்ற தாழ்வும் கடவுள் படைக்கவில்லை" என்பார் வாளுக்குவேலிஅம்பலம்.

எம்மினம் யாரையும் ஒடுக்க முனைந்ததில்லை, ஏற்ற
தாழ்வு பார்த்ததில்லை, சமூக
ஒருமைப்பாடையே முன்மொழிந்துள்ளனர்
என்பதற்கு சான்றுகளாக வரலாற்றில் பறைசாற்றி நிற்கின்றன புலித்தேவன்-ஒண்டிவீரன்,
வாளுக்குவேலித்தேவன்-மேகநாதன் நட்புகள்.

-மதி

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்