Posts

Showing posts from April, 2014

பழையாறை

Image
பழையாறை-----தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புது நீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன. அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்தி முற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆக

அருணகிரிநாதர்

Image
அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார் என்றும், காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தார் என்றும் சொல்கின்றனர். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். அருணகிரிநாதர் நூல்கள் மொத்தம் 9. அவை : கந்தர் அந்தாதி (Kanthar Anthathi) கந்தர் அலங்காரம் (Kanthar Alankaram) கந்தர் அனுபூதி (Kanthar Anupoothi) சேவல் விருத்தம் (Seval Virutham) திருஎழுகூற்றிருக்கை (Thiruvezhukoorrirukkai) திருப்புகழ் (Thiruppugazh) திருவகுப்பு (Thiruvaguppu) மயில் விருத்தம் (Mayil Virutham) வேல் விருத்தம் (Vel Virutham)

ஔவையார்

Image
அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை. இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைபாடியுள்ளார். பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார். இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர். மூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் அவ்வை

ஒட்டக்கூத்தர்

Image
ஒட்டக்கூத்தர்-- என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற ்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது. இராசராசசோழன் உலா - மூவருலா (Rajaraja Cholan Ula - Muvarula) குலோத்துங்க சோழன் உலா - மூவருலா (Kulothunga Cholan Ula - Muvarula) விக்கிரமசோழன் உலா - மூவருலா (Vikrama Cholan Ula - Muvarula) அரும்பைத் தொள்ளாயிரம் ஈட்டி எழுபது உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்) எதிர் நூல் கண்டன்கோவை காங்கேயன் நாலாயிரக் கோவை தக்கயாகப்பரணி தில்லையுலா

கம்பர்

Image
கம்பர்-- சோழநாடான நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந் தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை. கம்பரை இவருடைய காலத்துச் சோழ அரசரும் பாராட்டி இவருக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தார்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசரே இவருக்கு வழங்கினார். இவர் கம்ப இராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலிய ஒன்பது நூல்களை எழுதியுள்ளார். கம்ப இராமாயணம் (Kamba Ramayanam) ஏரெழுபது (Erezhupzthu) திருக்கை வழக்கம் (Thirukkai Vazhakkam) சரஸ்வதி அந்தாதி (Saraswathi Anthaathi) சடகோபர் அந்தாதி (Sadakobar Anthaathi) சிலையெழுபது (Silaiyelupat

உழவின் சிறப்பு

Image
உழவின் சிறப்பு அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும் பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும் மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும் உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே------------------------கம்பர்

முத்தைத்தரு பத்தித் திருநகை

Image
முத்தைத்தருரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண! முத்திக்கொரு வித்துக் குருபர! எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணை தொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்! பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே?

வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

Image
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற் கலக்க மிலாது செய்வான்; - பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில் தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில் உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடு வான்; பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு பேச்சினி லேசொல்லு வான்; உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன் உண்ணும் வழியுரைப் பான்; அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான்; மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன் வாழ்வினுக் கெங்கள்கண்ணன்

இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்

Image
இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல் கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர், 'பூமகளும் பொருளும் என, நீ என் மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா, தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86 வாழ்த்து ஒலியும், மலர் மாரியும் அந்தணர் ஆசி, அருங் கல மின்னார் தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர் வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87 வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ, ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம், தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால், மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88 இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல் வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள், மை அறு மந்திரம் மும்மை வழங்கா, நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே, தையல் தளிர்க் கை த

மென் புலத்து வயல் உழவர்

Image
மென் புலத்து வயல் உழவர் வன் புலத்துப் பகடு விட்டுக் குறு முயலின் குழைச் சூட்டொடு நெடு வாளைப் பல் உவியல் பழஞ் சோற்றுப் புக வருந்திப், புதல் தளவின் பூச் சூடி, அரில் பறையாற் புள்ளோப்பி, அவிழ் நெல்லின் அரியலா ருந்து; மனைக் கோழிப் பைம்பயி ரின்னே, கானக் கோழிக் கவர் குரலொடு, நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து; வே யன்ன மென் தோளால், மயில் அன்ன மென் சாயலார், கிளிகடி யின்னே; அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து; ஆங்கப் , பலநல்ல புலன் அணியும் சீர்சான்ற விழுச் சிறப்பின், சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் செல்லா நல்லிசை உறந்தைக் குணாது, நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் 20 அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக், கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத், தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியொடு, 25 ஆங்கு நின்ற எற் கண்டு, சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான், அருங்கலம் வரவே அருளினன் வேண்டி, ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி,இவனை 30 என்போல் போற்று என் றோனே; அதற்கொண்டு, அவன்மறவ லேனே,

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;

Image
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.---------------------------------புறநானூறு - 186. பாடியவர்: மோசிகீரனார் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி (வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.)

திருவாரூர் தியாகராஜர் கோயில்

Image
திருவாரூர் தியாகராஜர் கோயில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகபெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். திருப்பா ற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்ப

பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு

Image
பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு : இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன ் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் ரகசியங்கள்

Image
தேவரின மன்னர்கள் சேர சோழ பாண்டியர்கள் பெயர் சொல்லும் திருப்பதியின் பிரம்மிக்க வைக்கும் அதிசியங்கள்..!!!! திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்

பங்குனி உ த்தரம்

Image
பங்குனி உ த்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும். மீனாட்சி கல்யாணம் சிவன ுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள். பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பச

சிவகீதை

Image
சிவகீதை என்பது இராமனுக்கு சிவபெருமான் உபதேசித்தருளிய பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும். சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூசை முறைகளை அருளிச் செய்திருக்கிறார். சிவகீதை நோக்கம் இராமர் வனவாசஞ்செய்யுங்காலத்திலே மனைவியை இழந்து வருந்தி கொண்டிருக்கும்பொழுது அகத்திய முனிவர் அதனையறிந்து அவருடைய வருத்தத்தைத் தீர்க்க நினைந்து அவரிடஞ்சென்று விரதாதீட்சை செய்து பாசுபத விரதத்தை அனுட்டிக்கும்படி கற்பித்து அவ்விரதத்தாற் சிவன் பிரசன்னமாகிப் பாசுபதாஸ்திரப் படையைத் தந்தருளுவர் என்றும் அப்படையினாலே இராவணன் முதலாகிய அரக்கர்களைக் கொன்று சீதையை பெறலாம் என்றுங் கூறிப்போயினர். அதுகேட்ட இராமர் அவ்வாறே விரதத்தை அனுட்டித்தபொழுது சிவபெருமான் பிரசன்னமாகி அவருக்கு உபதேசித்தருளியது இச் சிவகீதையாகும். தமிழில் சிவகீதை வடமொழியிலுள்ள சிவகீதை ம. முத்துக்குமாரசாமி குருக்கள் செய்த தமிழுரையோடு நல்லூர் த. கைலாசப்பிள்ளையால்

காலம் தேர்[ CALENDAR ]

Image
காலம் தேர்[ CALENDAR ]----தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை, சித்திரை என்று இருவேறு பிரிவினர்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உண்மையாக இருக்கும்? தமிழர்கள் இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கின்றனர்? இந்தியா தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜூ தீவுகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் வாழும் த மிழர்கள் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் நாம் பன்னெடுங்காலமாக சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும் கதிரவனை (ஞாயிறு) அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தின் அளவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நம் முன்னேர்கள் முன்பே தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தமிழில் “தெறிப்பளவு” என்பார்கள். ஆங்கிலத்தில் “Time Measure ” என்பார்கள். அதாவது, 2 கண்ணிமை = 1 நொடி 2 கைநொடி = 1 மாத்திரை 2 மாத்திரை = 1 குரு 2 குரு = 1 உயிர் 2 உயிர் = 1 சணிகம் 12 சணிகம் = 1

ஸ்ரீராம நவமி

Image
ஸ்ரீராம நவமி----- அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் அறியப்படுகிறது------------ -----------------இராமாயணத் தில், அயோத்தியின் அப்போதைய அரசரான தசரதர், கோசலை, சுமித்ரா மற்றும் கைகேயி தசரதர், கோசலை, சுமித்ரா மற்ற ும் கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உடையவராக இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களது பெரும் கவலை அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதாக இருந்தது. மேலும் அதனால் அரியணையில் அமர்வதற்கு அவர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. வசிஸ்ட மகரிஷி அவரிடம் புத்திர காமேஸ்டி யாகம் செய்யச் சொன்னார். அதன் மூலம் விரும்பிய குழந்தையைப் பெற முடியும். மேலும் அவர் அந்த யாகத்தைச் செய்வதற்காக மகரிஷி ருஷ்ய ஷ்ருங்கரையும் அழைத்துக் கொள்ளச் சொன்னார். உடனடியாக அரசர் தசரதர் அவருக்கு உடன்பட்டார். மேலும் மகரிஷி ருஷ்ய ஷ்ருங்கரை அழைப்பதற்காக அவரது ஆசிரமம் சென்றார். மகரிஷி அந்த யாகத்தை தசரதருடன் இணைந்து அயோத்தியில் (அவதாவ