சோழர் காலத்தில் ராமர்
ராமனும் சோழர் குலத்தில் உதித்தவன் என்பதினாலோ என்னவோ சோழர் காலத்தில் ராமர் சிறப்பாக போற்றப்பட்டார் ------------------------------------------------------------------------------------- ராமர்-சீதை வழிபாடு தென்னகத்தை விட வட இந்தியாவில் தான் அதிகமென்று சிலர் கூறுவர். . உண்மையில் சோழர் காலத்தில் ராமர் மிகச் சிறப்பாகவே தமிழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளார். . பிற்கால சோழர்களில் விஜயாலய சோழரின் மகனும், பிற்கால சோழப் பேரரசை நிறுவியவருமான ஆதித்த சோழருக்கு கோதண்ட ராமர் எனும் சிறப்புப் பெயர் உண்டு. . போர்க்களத்தில் வில் வித்தையில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் பெற்றார் என்றுக் கூறுவர் . பொக்கிஷம்பாளயத்தில் உள்ள அவரது பள்ளிப்படை கோதண்டராமேஸ்வரம் என்றே அழைக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. . ஆதித்த சோழரின் மகனான பராந்தக சோழன் காலத்தில் ராமாயணம் அழியாத ஆவணங்களாக கற்றளிகளில் ஆவணப்படுத்தப்பட்டன. . பராந்தகர் காலக் குறுஞ்சிற்பங்கள் புகழ் பெற்றவை. திருப்புள்ளமங்கை, திருச்சென்னம்பூண்டி போன்ற சிவாலயங்களிலும் . ராமாயணத்தின் நிகழ்வுகளை கையளவு குறுஞ்சிற்பங்களாக வடித்து பொது மக்களும் காணும்படி