Posts

Showing posts from September, 2019

மாணிக்க வீணை

Image
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி - அம்மா(மாணிக்க) நா மணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளம் இல்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே வாணி சரஸ்வதி மாதவி பார்கவி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நீ நான்முக நாயகி மோஹன ரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கு இனிதே தேனருள் சிந்தும் கான மனோஹரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி - அம்மா(மாணிக்க)

சிவகங்கைச் சரித்திரக்கும்மி

Image
சிவகங்கைச் சரித்திரக்கும்மி என்ன சொல்கிறது: மருதிருவர், "அன்றிரவு பாளைய மங்கிருந்து ஆதித்த னுதித்த வுடனெழுந்து பாட்டை மார்க்கத்தில் சாலை வழியாகப் பாளையம் வருகிற வேக மென்ன தாட்டீக மாகவே கோச்சடை கருப்பண்ண சாமி முன்பாக இறங்க லுற்றார் கோட்டை மதுரையி லத்தயனிருந்த கொம்பன் மல்லாரி ராயனுந்தான் "மருது இருவர்படை வாரதினால் மதுரைக்குக் கிழக்கே விடேன்" என்று சுறுசுறுப் பாகப் படைகூட்டி......" எதிர்க்க ஆயத்தம் செய்கிறான். இந்தச்செய்தியை மருதுவிடம் சொல்கிறார்கள். இப்போது சிவகங்கை சரித்திர அம்மானை சொல்வதைக்கேட்போம். அதுதான் இன்னும் graphical ஆகவும் dramaticஆகவும் சொல்கிறது. "கண்டவர்கள் வந்து கைகூப்பித் தெண்டனிட்டு விண்டார் மருதிடத்தில்....." பெரிய மருது உடனே எழுந்து........ வெஞ்சமருக் கஞ்சாதான் வெள்ளைமரு தேந்திரதுரை அஞ்சுநூறு காலாளும் அசுவமது அம்பதுடன் "எங்கவன், மல்லராவு? யெவன் அவனைக் காட்டுமடா! எங்கே யவன்சமர்த்தை இனிக்காண வேணுமடா!" "காட்டீர் இவன் எனவே! கைவளரிக் கிப்போது வாட்டமடா, மெத்த வாய்த்த இரை இல்லையென! ஆதலால் நான் இவனை அறிந

சேதுபதி மரபு

Image
சேதுபதி மரபின் முதல் ஆளாகிய சடைக்கன் என்னும் உடையான் ரகுநாத சேதுபதி. அவருக்குப் பின்னர் அவருடைய வாரிசுகள் ஆட்சிக்கு வந்தனர். திருமலை சேதுபதி காத்த தேவர் என்பவருக்குப் பின் அவருடைய சகோதரர் மகனாகிய ராஜசூரியத் தேவர் ஆட்சிக்கு வந்தார். ஆறே மாதங்கள் ஆட்சியில் இருந்தார். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் அந்த வட்டாரத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் தொடர்ந்து நிலவின. ராஜசூரியத் தேவரின் தம்பி பட்டத்துக்கு வந்தார். அவரும் மூன்றே மாதங்களில் மர்மமான விதத்தில் இறந்துபோனார். பின்னர் இரண்டு ஆண்டுகள் சேதுநாடு எந்த அரசரும் இல்லாத நிலைமையில் இருந்தது. யார் யாரோ ஆங்காங்கு உரிமைப் போட்டிகள் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள். 1674-ஆம் ஆண்டில் கிழவன் சேதுபதி ஆட்சிக்கு வந்தார். அவர் பதவிக்கு வந்தபோது ரகுநாத சேதுபதி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். சேது காவலர்களாக இருந்தபடியால், ஆரம்பகால சேதுபதிகள் ராமரின் வம்சமாகிய ரகு வம்சத்தின் பெயரைத் தங்களுக்கு வைத்துக் கொண்டனர். ஆகவே ரகுநாத சேதுபதி என்னும் பெயர் ஓர் அபிஷேகப் பெயராக விளங்கியிருக்கிறது. பட்டத்துக்கு வருவதற்கு முற்பட்ட காலத்தில் அவருடைய வரலாறு என்

மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு

Image
இந்திய சுதந்திரத்துக்கு அன்றே  குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையி

வண்ணமயில் அமரோனே!!!

Image
ஆழ்ந்து மனம் லயித்து      அய்யனே உனை வணங்கி தாழ்ந்து தலை சாய்த்து      தன்னுள் தனை இருத்தி வீழ்ந்து  வெதும்பி விம்மியழுது     வீண் விறகினும் வெற்றுடம்பு வாழ்ந்து பயனுற வையத்துள்        வகைசெய் வண்ணமயில் அமரோனே!!!

குவிரன்...ஆதன்

Image
குவிரன் வடமொழிச் சொல் அல்ல கீழடி அகழாய்வில்  அறியப்பட்ட "குவிரன்" என்ற சொல் வடமொழிச் சொல் என சாதிக்க நினைக்கும் சில வடமொழி  ஆதரவாளர்களுக்குத் தக்கதொரு பதிலாக தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலுவின் பதில்.. தவறான தகவல்கள் பகிரப்படுவதை தவிர்க்க இச்செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். ~~~~~~~~~ "குவி" என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல். ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார்கள் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் (அல்லது) பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என வருகிறது.

வெங்கட ரமணன்

Image
#சங்கடம்........                                                          பல்லவி                                      சங்கடம் களைந்தருளும் பங்கயபதத்தானை                                      வெங்கட ரமணனைத் திருமலையில் பணிந்தேன்                                                         அனுபல்லவி                                      எங்கும் நிறைந்திருக்கும் பங்கயநாபனை                                      மங்கள வதனமும் திருத்தங்கும் மார்புமுடை                                                           சரணம்                                      சங்கும் சக்கரமும் துளபமும்  கௌஸ்த்துபமும்                                      பொங்கும் பேரெழிலுடனே அங்கிங்கெனாதபடி                                      எங்கும் பிரகாசமாய் பக்தருக்கு காட்சி தரும்                                      பொங்கரவணையானைக் கேசவனை மாதவனை

சிங்கப்பூர்

Image
சிங்கப்பூர்  முன்பு தண்ணீர்  இல்லா  தேசம் ஆறுகள் இல்லா நாடு 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுப்பதற்கு முன்பும் சரி, பின்னும் சரி தனது ஒட்டுமொத்த தண்ணீர் தேவைக்கும் சிங்கப்பூர் மலேசியாவையே நம்பியிருந்தது. ஆம், இயற்கையாக பெரியளவில் நன்னீர் ஆதாரமே இல்லாத சிங்கப்பூரின் முதல் நீர்த்தேக்கமே 1868ஆம் ஆண்டுதான் மெக்ரிச்சியில் கட்டப்பட்டது. இருப்பினும், தனது நன்னீர் தேவையை உள்ளூரிலேயே நிரப்ப முடியாததால், 1927ஆம் ஆண்டிலிருந்தே மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நீர் இறக்குமதி செய்யப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, உள்ளூர் நீர்த்தேக்கத்திலுள்ள தண்ணீரும், இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரும் சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், தற்போது 'நான்கு தேசிய குழாய்கள்' எனும் திட்டத்தின் அடிப்படையில் கூடுதலாக இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டு அந்நாட்டின் நீர் மேலாண்மை திட்டடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை கொடுக்கும் ஓவ்வொரு சொட்டு நீரும் சேமிக்கப்படுகிறது சிங்கப்பூரில். 1. உள்ளூர் நீர்த்தேக்கங்கள்: சிங்கப்பூ

பின்னங்காய்

Image
பின்னமரம் காய்களோடு குலுங்குகிறது. பின்னங்காய்கள்..தனி அழகு. பின்னங்கொட்டையிலிருந்து பின்னைங்கெண்ணெய் தயாரிப்பார்கள்..விளக்கெரிக்க..அந்தக்காலத்தில் பின்னைங்கெண்ணெய் தான் வீட்டுக்கு வீடு விளக்கெரிக்கும் எண்ணெய்.இந்த எண்ணெய்யில் விளக்கெரித்தால் கொசு..மற்றும் பூச்சிகள் அண்டாது. பின்னைங்கெண்ணையை ஒரு மண் கலயத்தில் விளக்குக்கு அருகே வைத்திருப்பார்கள்.கடும் பிசுபிசுப்புடன் இருக்கும்.தீபம் திரியில் நின்னு எரியும். மதுரை அருகில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையின் ஓரத்தில் மரமாக வளர்திருக்கும்,   அதை "கொண்ணைக்காய்" என்று கூறுவார்கள் "குண்டு விளையாடுவதற்கு பயன் படும்,அதன் ஓடு காய்ந்தபின் "பிரவுன்"கலரில்"அக்குரூட்"போலவும் இருக்கும் ஓடு ஓங்கி தட்டினால் உடைந்துவிடும்,  மேலே குறிப்பிட்ட"பின்னங்காய்"இதுவும் ஒன்றுதான

ஆதிலக்ஷ்மி

Image
ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்.. பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்.. குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்.. பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே! திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக! குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! (திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம் நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம் அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம் அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம் (அலைமகளே வருக) மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம் ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம் அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்! சங்கு சக்ரதாரி நமஸ்காரம்! சகலவரம் தருவாய் நமஸ்காரம்! பத்ம பீட தேவி நமஸ்காரம்! பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!!

கீழடி

Image
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின்  வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? ** 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும். 2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன. 3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம்

விஷ்ணு சஹஸ்ரநாமம்

Image
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள் !! மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, “”இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “”இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்” என்றார். தர்மபுத்திரரைப் பயம் சூழ்ந்து கொண்டது. காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. “”தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ “”அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்” என்றார். பீஷ்மரும் தர்மதேவதை

துளசியைப் பற்றி பாத்ம புராணம்

Image
துளசியைப் பற்றி பாத்ம புராணம்      1. எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும் ரோகங்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.      2. எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.      அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி விசாரித்தபோது அது விபீஷணரின் மாளிகை என்று தெரியவந்ததாம்.      சீதை துளசியை பூஜை செய்ததின் பயனாக அவளுக்கு ராமபிரான் கணவராக கிடைத்தாரென்று துளசி ராமாயணம் கூறுகிறது.      விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன த

முளைகட்டிய வெந்தயத்தை தினமும்

Image
#வெந்தயத்தை நீரில் ஊறவைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவேண்டும் ஓரிரு நாட்களில் முளைத்து விடும் இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும் வெந்தயத்தை நீரில் மூன்று நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி அந்த நீரில் கலந்து தேனீர் தயாரித்து தினமும் குடித்து வந்தால் பலன்கள் கிடைக்கும் . முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் நீரை சேர்த்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும் வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி கோதுமை மாவை பிசைந்து ரொட்டி சப்பாத்தி செய்து விடலாம் இட்லி மாவில் கலந்து தோசையாக சாப்பிடுவது நல்ல மாற்றங்களை காண்பீர்கள் குறைந்த தீயில் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள் இதை தினமும் ஒரு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் மற்றும் சாலட் போல் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க செய்யும் கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க செய்யும் தாய்ப்பால் சுரக்கவைக்கும் புற்றுநோயை தடுக்கும் உடல் சூட்டை தணிக்கும். மையலில் கேட்கப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வர

மண்ணளக்கும் தாயே

Image
மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா மண்ணளக்கும் தாயே குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா மா மதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா விருதுநகரிலே முத்துமாரியம்மா சிவகாசியிலே பத்திரகாளியம்மா வீரபாண்டியிலே கெளமாரியம்மா தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா இருக்கன்குடியிலே மாரியம்மா செந்தூரிலே சந்தன மாரியம்மா ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா மணப்பாறையிலே முத்துமாரியம்மா திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா சிறுவாச்சூர் மதுரகாளியம்மா மண்ணளக்கும் தாயே.... தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா தஞ்சை   வேளாங்கண்ணி நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா வேளாங்கண்ணியிலே வேளங்கண்ணியம்மா திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா பட்டுக்கோட்டையிலே நாடியம்மா அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா திருவப்பூர் மாரியம்மா கொண்ணையூர் மாரியம்மா காரைக்குடியிலே க

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது

Image
கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள் கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந

ஸ்ரீகிருஷ்ணர் முக்தி அடைந்த இடம் குஜராத் .

Image
படத்தில் உள்ளது ஸ்ரீகிருஷ்ணர் முக்தி அடைந்த இடம் குஜராத் . அதன் விவரம் துவாரகையை ஆட்சிபுரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்) என்பது தவிர்க்க முடியாதது. தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த பகவான்  ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த ஆல மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது காலில் பலமாகத் தைத்ததும், "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர்  காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன்,  ""பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந் திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான். ""வேடனே, வருந்தாத

மலேசியாவில் தமிழ்

Image
19-ம் நூற்றாண்டில் மலேசியாவில் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள் அந்த நாளில். ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் பெரிதாக எழுதியிருக்கிறார்கள். பக்கத்தில் பிரிட்டிஸ் போலிஸ்காரர்.

சங்க கால தமிழன்

Image
இன்றும் படிப்பறிவு இல்லாத, எழுத படிக்க தெரியாத தமிழன் இருக்கிறான். ஆனால் அன்றோ? ஆபரணம் சிலை பயன்பாட்டு பொருட்கள் இலக்கியங்கள் காப்பியங்கள்  கல்வெட்டுகள் ஆலையங்கள் போர் கருவிகள் மருத்துவங்கள் இசை நடனம் ஓவியங்கள் தற்காப்பு கலை என்று எல்லாவற்றிலும் தமிழனின் வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களை தாண்டுகிறது. தமிழனின் கலை, இலக்கியம், கல்வெட்டுகளை வைத்து தமிழின் வயது ஐயாயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்று சொல்லிக்கொண்டே போகிறார்கள். தமிழன் நாகரீகம் வளர்ந்து எழுத தெரிந்த காலமே இத்தனையாயிரம் வருடங்கள் என்றால்? தமிழ் பேச்சி வடிவில், ஒளி வடிவில் எத்தனை ஆயிரம் வருடங்கள் இருந்திருக்கும் என்று  எண்ணிப்பார்க்கையில் வியக்கிறது.  இவ்வளவு பெருமைக்குரிய ஒரு இனம் உங்களது வேற்றுமொழி திணிப்பை, பண்பாட்டு சிதைப்பை எப்படி ஏற்றுக்கொள்ளும்? அது யாரிடமும் எப்போதும் மண்டியிடாது. தமிழ் தன்னை தற்காத்துக்கொள்ளும் தனித்துவம் வாய்ந்தது. கீழை பிரபாகரன்

இரட்டிப்பு_புண்ணியம் #தரும்_புரட்டாசி.!!

Image
#இரட்டிப்பு_புண்ணியம் #தரும்_புரட்டாசி.!! #புரட்டாசி_மாதத்தில், #கன்னி_ராசியில் #சூரியன் #பிரவேசம் #செய்வதால், #இதற்கு #கன்யா_மாதம் #என்றும் #பெயர். #புரட்டாசி_மாதம் #பல்வேறு #சிறப்புகள் #கொண்டது. #சிவபெருமான்_விஷ்ணு, #அம்மன்_விநாயகர் #வழிபாடு_புரட்டாசியில் #மிகவும்_சிறப்பாக #நடைபெறும். குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும், முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை “பெருமாள் மாதம்” என்று சொல்கிறார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே, பெருமாள் பக்தர்கள் ,புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார

நவராத்திரி தகவல்கள்

Image
🎉🚩🎉நவராத்திரி நவ தகவல்கள்🎉🚩🎉 🎀நவராத்திரி நாட்களில்,இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்வதற்கு ஏற்ற காலமாகும்.  நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பெண்கள் ‘கன்யா பூஜை’ செய்வதால், சகல செல்வங்களையும் பெறலாம். 🎀கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும்,எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்வது நலம். 🎀‘சர்வமும் சக்தி மயம்’என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால்,அம்பிகை அனைத்து அம்சங்களுடன் அந்த வீட்டில் எழுந்தருளிவிட்டாள் என்பது நம்பிக்கையாகும். 🎀நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று பூஜை செய்து வழிபட்டால், ஶ்ரீஹயக்ரீவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்றைய நாளில் ஶ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தை  சொல்லி வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம். 🎀நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சர

புரட்டாசி

Image
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது. தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி பாலாஜி. காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்கவேண்டும். துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடா

இரத்தத்தை சுத்தமாக்க

Image
இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்… உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லத

மகாலக்ஷ்மி

Image
#மகாலக்ஷ்மி                                                        பல்லவி                                     தாமரைப் பூவிலமர் மகாலக்ஷ்மி உந்தன்                                     தாமரைப் பதங்களைச் சரணடைந்தேன்                                                     அனுபல்லவி                                     மாமறைகள் போற்றும் கோமளவல்லி                                     ஆமருவியப்பன் கேசவன் நாயகி                                                          சரணம்                                     நாமகளும் மலைமகளும் நேசமுடன் கொண்டாடும்                                     பூமகளே பார் புகழும் திருமகளே அலைமகளே                                     யாமம் வயிரவர் பணிந்தேத்தும் திரிபுரையே                                     தேமதுரத்தமிழால் உனைப்பாடித் துதித்தேன்

காவடி சிந்து

Image
கள்ளமாய்-களவு நிலையில்                 பொசித்திலகு-உண்டு விளங்கும் துண்ட வெண்பிறை அணிவோன்-அருள்                  சுத்தனைப் பரிசுத்தனை அண்டர் கோன் பயம் -தீர்ப்போன்                   அடியாரைத் தினம்காப்போன் எண்டிசை பணி நேசன்-தவம்                    இலகும் கிரிவாசன் வண்டமிழ்ப் பழனியனைக்-கொண்டு                    வருவாய் தோகைமயிலே ❣️💟❣️🙏🏼🙏🏼சிந்து இலக்கியம்🙏🏼🙏🏼❣️💟❣️ 🍀🌺🙏🏼 பழனியாண்டவர் காவடி சிந்து🙏🏼🍀🌺

நானேயோ தவம்செய்தேன்

Image
திருவாசகம்... நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய் இன்னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற்கு அருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே! ## ஒறுத்தல் - தண்டித்தல் பொழிப்புரை: ***************           வீடு அடைவதற்கு உரிய தவத்தை நானா செய்தேன்? (இல்லை). சிவாயநம என்று சொல்லும் பேறு பெற்றேன்; தேனாகவும், அமுதமாகவும் இனிக்கும் சிவபெருமான், தானாக வந்து என் உள்ளத்துள் புகுந்து, ஊனால் ஆகிய இந்த உடம்பில் இருந்து வாழும் உயிர்வாழ்க்-     -கையைக் கண்டித்து, வெறுப்பு அடையுமாறு செய்து அடியேனுக்கு அருள் செய்தான். ## திரு ஏசறவு நிறைவுற்றது.                       *திருச்சிற்றம்பலம்*

#குரு_பகவானே_சரணம்

Image
#குரு_பகவானே_சரணம் குருபகவான் திருவருள் அனைவருக்கும் கிட்டடும்.  கடலினில் அலையும் அலையும் நுறைபடலமும் விசித்திர குமிழியும்! கடலினில் வேறாகுமா வேறாகாதே போலே காண் ஞானமாய்! ஞானீயரிலும் பேதம் இல்லையே!அஞ்ஞானியே ஆயினும்! படலினில் மனபடலினில் எண்ணகொடிகள் படர்ந்தினும் துக்ககாய்கள் இடரினும் இடர் படாதவனாய் நீயே நின்னகமுள் இருக்கிறாய் உலகோடுதேகமாயை ஔீர்விக்கிறாய் யாவும் ஆன்மகடலேன காண்பாயே!ஞானவிழிதிரள்கொண்டே! குருவே சரணம்...! #ஓம்_தக்ஷிணாமூர்த்தியே_போற்றி... #Om_namashivaya. #நன்றி.. #ஓம்_நமசிவாய...

எல்லாம் கடந்து போகும்

Image
எல்லாம் கடந்து போகும்..!!! நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.😒😔😥😥😥😥😥 வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். வெற்றிகள் கிடைக்கும் போது "எல்லாம் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது. தோல்விகள் தழுவும் போது "எல்

புரட்டாசி_ஸ்பெஷல்

Image
#புரட்டாசி_ஸ்பெஷல்..! *********************** புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்புகளை கீழே பார்க்கலாம். 1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். 2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். 3. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. 4. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். 5. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. 6 . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்த