குவிரன்...ஆதன்

குவிரன் வடமொழிச் சொல் அல்ல

கீழடி அகழாய்வில்  அறியப்பட்ட "குவிரன்" என்ற சொல் வடமொழிச் சொல் என சாதிக்க நினைக்கும் சில வடமொழி  ஆதரவாளர்களுக்குத் தக்கதொரு பதிலாக தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலுவின் பதில்..

தவறான தகவல்கள் பகிரப்படுவதை தவிர்க்க இச்செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

~~~~~~~~~

"குவி" என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல். ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார்கள் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் (அல்லது) பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என வருகிறது.

காலம் கணிக்கப்பட்ட பின்பு கூட வடமொழியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது நடுநிலையான ஆய்வாளர்களுக்கு அழகல்ல.

டாக்டர் ராஜவேலு
கடல்சார் தொல்லியல் அறிஞர்

...

#_சங்கவிலக்கியத்தில்_ஆதன் :

அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. நம்முடைய சங்கநூல்களும் இப்போது கிடைக்கும் தொல்சான்றுகளும் நூறு விழுக்காடு ஒத்தே காணப்படுகின்றன. இவ்வறிவிலியேனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.

#_ஆதன்_பெயர்க்காரணம் :

மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.

ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

#_ஆதன்_பெயர்கள் :

1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்

6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்

8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை.

*******************

நன்றி. வணக்கம்.

பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.

தொகுப்பு  : தமிழ் கோ விக்ரம்

..

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்