ஆடு மயிலே கூத்தாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன்
கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன்
கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன்
தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன்
தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே
விளையாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன்
கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்