நானேயோ தவம்செய்தேன்

திருவாசகம்...

நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்

தேனாய் இன்னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்

தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற்கு அருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே!

## ஒறுத்தல் - தண்டித்தல்

பொழிப்புரை:
***************
          வீடு அடைவதற்கு உரிய தவத்தை நானா செய்தேன்? (இல்லை). சிவாயநம என்று சொல்லும் பேறு பெற்றேன்; தேனாகவும், அமுதமாகவும் இனிக்கும் சிவபெருமான், தானாக வந்து என் உள்ளத்துள் புகுந்து, ஊனால் ஆகிய இந்த உடம்பில் இருந்து வாழும் உயிர்வாழ்க்-     -கையைக் கண்டித்து, வெறுப்பு அடையுமாறு செய்து அடியேனுக்கு அருள் செய்தான்.

## திரு ஏசறவு நிறைவுற்றது.

                      *திருச்சிற்றம்பலம்*

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்