மகாலக்ஷ்மி
#மகாலக்ஷ்மி
பல்லவி
தாமரைப் பூவிலமர் மகாலக்ஷ்மி உந்தன்
தாமரைப் பதங்களைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
மாமறைகள் போற்றும் கோமளவல்லி
ஆமருவியப்பன் கேசவன் நாயகி
சரணம்
நாமகளும் மலைமகளும் நேசமுடன் கொண்டாடும்
பூமகளே பார் புகழும் திருமகளே அலைமகளே
யாமம் வயிரவர் பணிந்தேத்தும் திரிபுரையே
தேமதுரத்தமிழால் உனைப்பாடித் துதித்தேன்
பல்லவி
தாமரைப் பூவிலமர் மகாலக்ஷ்மி உந்தன்
தாமரைப் பதங்களைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
மாமறைகள் போற்றும் கோமளவல்லி
ஆமருவியப்பன் கேசவன் நாயகி
சரணம்
நாமகளும் மலைமகளும் நேசமுடன் கொண்டாடும்
பூமகளே பார் புகழும் திருமகளே அலைமகளே
யாமம் வயிரவர் பணிந்தேத்தும் திரிபுரையே
தேமதுரத்தமிழால் உனைப்பாடித் துதித்தேன்
Comments
Post a Comment