மேட்டூர் அணை.









மேட்டூர் அணை.
ஸ்டேன்லி  அணை.

மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி  1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது

கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது.

மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான கல் அணையாக
மிகப்பெரிய  ஏரியாக விளங்கியது.

அணையின் அதிகபட்ச உயரம்   214 அகலம் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும்.

மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன,

முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது.

இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி

1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்

மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணையின் மதகுகள்
16 கண் உபரிநீர் போக்கி     –
16 * 60 அடி * 20 அடி
8 கண் மேல்மட்ட மதகு     –
 8 * 10.6 அடி * 16 அடி
5 கண் கீழ்மட்ட மதகு       –
5 * 7 அடி * 14 அடி
அணைமின் நிலையம்       –
4 விசைபொறி
சுரங்கமின் நிலையம்        –
4 விசைபொறி

அணை கட்டப்பட்ட 84 வருடங்களில் 39 வதுமுறையாக இப்போது
நீர்மட்டம் 120 அடியை தொட்டுள்ளது.

இந்த அணையில் 2,400 மீன்பிடிப்படகுகள் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.

இவ்வணை நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33கும் மேற்பட்ட கிராமங்கள் இணைத்து கட்டப்பட்ட அணையாகும். கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழ மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும் ,அதற்க்குபின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலும் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டஇரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அணையின் நடுவில் உள்ளது. கிராமங்கள் அழிந்து, மக்கள் இருப்பிடம் மாறினாலும் அடையாளங்களாய் நினைவு சின்னங்களாய் இன்றும் அம்மண்ணில், அணைக்கு நடுவில் நிலைத்து நிற்கின்றது.

அணையின்நீர்மட்டம் 80அடிக்கு கிழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழே குறையும்பபோது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும்.

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

பின்பு 1835ஆம் ஆண்டு
சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் அணை கட்ட
எடுத்து விளக்கினர் ,

அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார்.

அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே.

மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

கூலித் தொழிலாளர்களுக்கு கூடாரம் அமைக்கப்பட்டு சுமார் 18,000 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். 1926 அக்டோபர்,1926-இல் இந்திய அரசின் கன்சல்டிங் பொறியாளர் D.G.ஹாரிஸ்(D.G.Harris) கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

அணை கட்டிய பொறியாளர்கள்

சர் ஆர்தர் காட்டன் 1834-இல் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன்பின் 20 ஆண்ருகள் கழித்து 1856-இல் மேஜர் லாஃபோர்ட் (major Lawford) தற்போது அணை அமைந்துள்ள இடத்திற்கு 11 மைல் கீழே நெரிஞ்சிப்பேட்டை  எனுமிடத்தில் கட்ட திட்டம் தயாரித்தார்.

ஆனால் W.பிரேசர்(W.Frazer) ஏற்கனவே தகுதியில்லை என தீர்மானிக்க திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

1869-இல் Cap.C.J.ஸ்மித்  (Cap.C.J.Smith) அப்பணியை எடுத்துக் கொண்டார். அதன்பின் 1880இல் மேஜர் மாண்டகோமெரி (Major Montegomerie) அதன் பின் கேப்டன் ரோமில்லி (Cap.Romilly) 1892-இல் கோயமுத்தூர் செயற்பொறியாளர் J.C.லார்மினி(J.C.Larminie) மேற்கொண்டார்.

1901-இல் ஹியூக்ஸ் (Hughes)பவானி திட்டத்தை நீர்ப்பாசன ஆய்வாளர் ஜெனெரல் ஹிகாம்(Higham) அவருக்குப் பின் வந்த தாமஸ்(Thomas) முன்பும் சமர்ப்பித்தார்.

காவிரி நீர்த்தேக்கத் திட்டம் H.A.மோஸ்( H.A.Moss) அவர்களால் G.O.No.971-I  நாள் 2, செப்டம்பர்,1904 முழு வடிவம் பெற்றது.

இத்திட்டத்தின் மதிப்பு ரூ.292.3 இலட்சங்களாகும். மூலும் இது இந்திய அரசின் ஒப்புதலுக்கு கடித எண்.597-I   நாள் 13,ஜூன், 1906 இல் அனுப்பப் பட்டது.

இதனுடன் இணைந்து கட்டணை வாய்க்கால் திட்டத்தையும் நீர்ப்பாசன ஆய்வாளர் ஜெனெரல் சர் ஜான் பெண்டனுக்கு (Sir John Benton)தலைமைப் பொறியாளர் H.E.கிளார்க்(H.E.Clerk) அனுப்பி வைத்தார். அதன் அரசாணை அவர்களால் G.O.No.72-I  நாள் 11, மார்ச்,1910 ஆகும்.

1910-க்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட இடங்கள்

1.      ஊரட்சி

2.      நெரிஞ்சிப்பேட்டை/செக்கானூர்

3.      நவப்பேட்டை

4.      சாம்பள்ளி

கோல். W.M.எல்லீஸ் (Col.W.M.Ellis) காவிரி-மேட்டூர் திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி 1910-இல் அவர் அறிக்கை சமர்ப்பித்தார்.

1910-ஆம் ஆண்டு ரூபாய் 385 இலட்சம் திட்ட செலவாக சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அரசாணை அவர்களால் G.O.No.386-I  நாள் 3, டிசம்பர்,1910.இத்திட்டத்தை K.சீனிவாச ஐய்யங்கார் மற்றும் சர் C.P.ராமசாமி அய்யங்கார் முன்னெடுத்துச் சென்றனர். 

வடக்குத்தெற்காக, சீதாமலை -
பாலமலை என்னும் இரண்டு
மலைகட்கிடையில்  மேட்டூர் அணை
கட்டப்பட்டுள்ளது.

அப்போதைய மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் விஸ்கௌண்ட் காஸ்சேன்(George Viscount Goschen) 20, ஜூன்,1924 அன்று நினைவுத் தூணை(Obelisk) திறந்து வைத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேட்டூர் அணைக்கு 20, ஜூலை,1925 –இல் முதல் வெடி வைத்து பணிகள் துவங்கப்பட்டது.

திட்டப் பணிகளுக்கு சாலைகள் மிக மோசமாக இருந்ததால்செயற்பொறியாளர் T.I.S.மெக்கே (T.I.S.Mackay) ஈரோட்டிலிருந்து அணை வரை 36 மைல்களுக்கு ரயில்பாதை அமைத்துக் கொடுத்தார்.

கட்டுமானத்திற்கு தேவையான சுர்கி (Surki mortar) சுண்ணாம்பு சங்ககிரி, பவானி, சேலம் பகுதிகளிலிருந்து
கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது க்ளமண்ட் முல்லிங்ஸ் (Sir Clement Tudway Mullings)
போர்ட்லேண்ட் சிமெண்ட் பயன்படுத்த சிபாரிசு செய்தார்.

அதன் படி அரசாணை G.O.No.1815-I  நாள் 22, ஆகஸ்டு,1927 க்கு பிறகு சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் கிடைத்த மணல் திருப்தியில்லாததால் பாறைகள் உடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. பின்னர் பரிசல்கள் மூலமாக சோழப்பாடியிலிருந்து சுமார் 2,239,000 கன அடி மணல் கொண்டுவரப்பட்டது.

அணைக்கு பயன்படுத்தப்பட்ட மணல்         26,651,286 கன அடி

இதர பணிகளுக்கு                           1,608,628 கன அடி

மீதமானது                                  457,520 கன அடி

கிரஷர் தூள்                                903,837 கன அடி

கல் சேத்தமலைக்கு கிழக்கே புலிமலையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 37,800 கன அடி கற்கள் வீதம் 5 ஆண்டுகளுக்கு தேவைப்பட்டது.

இதன் பயன் பாட்டில், pneumatic tripod drills, drifters, jack hammers போன்றவை கல்லெடுக்கப் (Quarrying) பயன்படுத்தப்பட்டன. மேலும் கம்பெனியிடமிருந்து பேட்டரிகள் வாங்கப்பட்டன.
முதல் வெடியானது 3, மே, 1927-இல் வைக்கப்பட்டது. அப்பொழுது வடி மருந்துகளின் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஷெல்டன்(Dr.Sheldon) இருந்தார்.வெடிமருந்துகளுக்கு திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது. அதற்கான உரிமையை லைஃபூட் ரெப்ரிஜிரேசன் கம்பெனி (Lightfoot Refrigeration company) எடுத்திருந்தது. கம்பெனியின் உரிமையாளர் T.B.லைஃபூட் மற்றும் பேராசிரியர் லிண்டே அணைக்கருகில் இரண்டு யூனிட்டுகள் ஆரம்பித்து ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக்கு வசதியாக டிராம்(tramway)வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தலைமைபொறியாளரின் கருத்தை ஏற்றுக் கொண்டு மார்டின் கம்பெனி ஜூன்,1926-இல் தின்னப்பட்டியிலிருந்து மேட்டூர் வரை ட்ராம் வசதியை செய்து கொடுத்தது.

பணிமனை மற்றும் இயந்திரங்கள் பொறுப்பு அதிகாரியாயிருந்த W.P.ராபர்ட்ஸ் இரும்பு ரோப்புகள், கேபிள்கள் பணியினை கவனித்துக் கொண்டார். பணிக்கு தேவையான இரண்டு கோபுரங்களை(Tower) ஸ்டோதெர்ட் & பிட் கம்பெனி (M/s Stothert & Pitt)கவனித்துக் கொண்டது. அதன்படி இரண்டு கோபுரங்களை 1, ஆகஸ்ட், 1929 இல் சுமார் 180 அடி உயர கோபுரத்தைஅமைத்துக் கொடுத்தது.கட்டுமானத்திற்கு தேவையான மின்சாரம் 3400KW, இரண்டு 125 KVA டீசல் ஜெனரேட்டர்கள் மூலமும், சிவசமுத்திரம் மின் உற்பத்தியிலிருந்தும் பெறப்பட்டது.

மோட்டார் மூலம் இயங்கும் மதகுகளை க்ளென்பீல்ட் & கென்னெடி(M/s Glenfiled &Kennedy) நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது. அதிகப்படியான வெள்ளநீர் வெளியேற முல்லிங்ஸ் ஒரு குணகத்தை (Co-efficient)அறிவுறுத்தினார், Q=c.l.h.3/2  அது சரியாக இருக்குமென்று முடிவெடுக்கப்பட்டது.

அணைகட்டுமானத்தில் நீரின் அழுத்தம்(Stress)பௌவியர்(Bouvier) மற்றும் அன்வின்(Unwin)முறைகளில் உயரத்திற்கேற்ப கணகிடப்பட்டது.

அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட பின் அணையின் மொத்த கொள்ளளவு 54,620,050 கன அடி ஆகும். 14, ஜூலை,1934 கடை கல்லை அணையில் மேற்பரப்பில்(parapet) பார்பரின் மனைவியால் நடப்பட்டது. முல்லிங்ஸ் இருக்கை(Mullings Seat) டான் (Dann)என்ற கட்டவியலாளரால் வடிவமைக்கப்பட்டது.

அணையானது 21, ஆகஸ்ட்,1934 அன்று மெட்ராஸ் கவர்னர் சர் ஜார்ஜ்(Sir George  பிரடெரிக் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்டது. நீர்த்தேக்கம், ஸ்டான்லி நீர்த்தேக்கம் என் பெயரிடப்பட்டது. அதே போல் 1938-இல் ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் 5-வருட டிப்ளமாவை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்

ராயபுரம் மருத்துவக் கல்லூரி 2,ஜூலை,1938 முதல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது.

34 ஏக்கர் நிலப்பரப்பி அமைக்கப்பட்ட ஸ்டான்லி பூங்காவை கவர்னரின் மனைவி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி (Lady Beatrix Stanley) ஸ்டான்லி திறந்து வைத்தார்.

மேட்டூர் திட்டத்தில் பணியாற்றிய அலுவலர்கள்

தலைமை பொறியாளர்கள்

சர் C.T.முல்லிங்ஸ்

V.ஹர்ட்

F.M.டொவ்லி

R.F.ஸ்டோனி

M.R.Ry.S.பாஸ்கர அய்யங்கார்

M.R.Ry.N.சாமிநாத அய்யங்கார்

M.R.Ry. R.நரசிம்ம அய்யங்கார்

M.R.Ry.G.ராமசாமி அய்யர்

W.P.ராபர்ட்ஸ்

பணி கண்காணிப்பாளர்

C.G.பார்பெர்

செயற்பொறியாளர்கள்

M.R.Ry .R.நரசிம்ம அய்யங்கார்

W.P.ராபர்ட்ஸ்

F.M.விபன்

M.R.Ry.N.பரமேஸ்வரம் பிள்ளை

D.W.கொல்லன்

T.I.S.மெக்கே

M.R.Ry.L.வெங்கடகிரிஷ்ண அய்யர்

M.R.Ry.N.கெசவ ராவ்

M.R.Ry.N.கோவிந்தராஜ அய்யங்கார்

H.G.ஜேக்சன்

J.மாதை

M.R.Ry.A.R.வெங்கட ஆச்சார்யா

W.H.டர்னர்

M.R.Ry.R. மஹாதேவ அய்யர்

M.R.Ry.M.S.திருமலை அய்யங்கார்

M.R.Ry.T.S.வெங்கடராம அய்யர்

M.R.Ry.R.S. பத்மநாப அய்யர்

M.R.Ry.S.V.ரஜங்கம் அய்யர்

M.R.Ry S.V.கனகசபை பிள்ளை

L.ஹென்சா

H.A.இர்வின்

A.H.S.கேம்பேல்

F.T.லெர்ன்மோத்

உதவி பொறியாளர்கள்

M.R.Ry U.S.ராமசுந்தரம்

M.R.Ry.T.R.நரசிம்ம ஆச்சார்யா

M.R.Ry.R. ராஜகோபால ஆச்சார்யா

M.R.Ry.M.B. கிரிஷ்ணசாமி அய்யங்கார்

M.R.Ry.G.G.கிருஷ்ண அய்யர்

M.R.Ry.P.S. விஸ்வநாத அய்யர்

M.R.Ry.S. ராமானுஜ ஆச்சார்யா

M.R.Ry. ஹரிநாராயணா

M.R.Ry.MV. ராமசாமி அய்யர்

M.R.Ry.R. வைத்தியநாத அய்யர்

M.R.Ry.N. சுந்தரசிவ ராவ்

M.R.Ry M.S.பாஸ்கர அய்யர்

M.R.Ry. ஸ்ரீனிவாச அய்யர்

M.R.Ry.K.வெங்கட ஆசார்லு

M.R.Ry.S.கிருஷ்ண அய்யர்

M.R.Ry.S.பஞ்சாபகேச அய்யர்

M.R.Ry.P. ஸ்ரீனிவாச அய்யர்

M.R.Ry.M.முகம்மது சிகந்தார் சாகிப்

M.R.Ry.T.V. சுந்தரேச அய்யர்

M.R.Ry.V. சேகர மேனன்

M.R.Ry.K.S.நல்லபெருமாள் பிள்ளை

M.R.Ry.T.V.செஷ அய்யர்

M.R.Ry.G.V.லஷ்மிநாராயணா

M.R.Ry.S.வைத்யநாத அய்யர்

M.R.Ry.S.V.பாலசுப்ரமண்ய அய்யர்

M.R.Ry.M.சத்யநாரயணமூர்த்தி

M.R.Ry.a. சிதம்பரம் பிள்ளை

M.R.Ry.P.அய்யாசாமி அய்யர்

M.R.Ry.P.ரகுநாத ராவ்

M.R.Ry.N.S.சுப்ரமண்ய அய்யர்

M.R.Ry.G.கிருஷ்ணசாமி அய்யர்

M.R.Ry.S.R.பூர்ணய்யா

M.R.Ry.S.R.கோபாலன்

M.R.Ry.M.N.வெங்கடேஷ்வரன்

M.R.Ry.P..சுப்ரமண்யன்

M.R.Ry.S..R.நரசிம்மன்

M.R.Ry.V.நரசிம்ம காமத்

M.R.Ry. டி சில்வா

M.R.Ry.V.ராதாகிருஷ்ண அய்யர்

M.R.Ry.K.S. விஸ்வநாத அய்யர்

M.R.Ry.V.சேது சர்மா

M.R.Ry.L.M.சுந்ரேச அய்யர்

M.R.Ry.N.தணிகாசல முதலியார்

M.R.Ry.N.காமத்

M.R.Ry.N.ராமசாமி அய்யர்

M.R.Ry.N.அச்சுத மேனன்

M.R.Ry.B.R.சோமயாஜுலு

மேட்டூர் அணையைப் பார்த்த பின்
பார்க்க வேண்டிய இடங்கள்

45 கிமீ தொலைவில் ஏற்காடு மலை அமைந்துள்ளது
40கிமீ தொலைவில் குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.
76கிமீ தொலைவில் ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
50கிமீ தொலைவில் சேலம் அமைந்துள்ளது.
100கிமீ தொலைவில் கல்ராயன் மலை அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்